இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய – மாநில அரசுகள் வலியுறுத்தக்கோரியும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., புதிய தமிழகம் உள்பட பல்வேறு கட்சியினர் ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் தஞ்சை, திருவாரூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், நாகை உள்பட தமிழகம் முழுவதும் இன்று நடந்த ரயில் மற்றும் சாலை மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.
தா.பாண்டியன் அவர்களே!
உம்மை நம்பிய தொழிலாளர்களை
கழுமரத்தில் ஏற்றிவிட்டீர்.
பப்பட பிரசாரத்தை நம்பிய உமக்கு
இனியெதற்கு கம்யூனிஸ்கட்சி?
கூத்துகொட்டகை வைத்து தொழில்செய்யும்.
தொழிலாளரை சுயபோக்கில் விட்டுவிடும்.