மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
95 வயதாகும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு, வெள்ளியன்று மாலை உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவிலுள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக் கப்பட்ட அவரை 5 மருத்துவர்கள் கொண்ட குழு கவனித்து வருகிறது.
சனிக்கிழமை அவரது உடல்நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஏ.கே.மெய்ட்டி, ஜோதிபாசு தற்போது நலமாக உள்ளார் என்றும், அவருக்கு ஏற்பட்டுள்ள நிமோனியா பாதிப்பை சரிசெய்ய மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளியன்று ஜோதிபாசுவின் உடல் நலம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச் சார்யாவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிமன் பாசு, முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று ஜோதிபாசுவின் உடல்நலம் அறிந்தனர்.