சுன்னாகம் பகுதியிலுள்ள குடி நீரை அருந்தலாமா இல்லையா என இலங்கை ஆளும் தரப்புக்களைக் கோரி நடத்தப்படும் கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப்பட்டுள்ளனர். அங்கும் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உரிமைக்காகப் போராடும் மக்களையும் மாணவர்களையும் அணுகவில்லை.
அடிப்படை வாழ்வாதார உரிமைக்கான தகவலை அறிந்துகொள்வதற்காகப் போராடும் இவ்வாறான போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலிருப்பது இலங்கையில் ஆளும் அனைத்துத் தரப்புகளதும் அவமானம்.