ஈழப் போராட்டம் ஆயுதம் தாங்கிய யுத்தமாக வளர்ச்சியடைந்த காலத்திற்கு முன்பிருந்தே இந்திய அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கங்களும் பிரதான கட்சிகளான பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் போன்றனவும் அழிக்கும் இயந்திரங்களாகத் தொழிற்படுகின்றன.
ஒடுக்குமுறையின் குறியீடான பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று குரல்கள் எழுந்தன. இலங்கையில் இனச்சுத்திகரிப்பும் நில ஆக்கிரமிப்பும் தொடர்ந்த அதே வேளை மன்மோகன் கலந்து கொள்வாரா இல்லையா என்பதே பிரதான விவாதப் பொருளாக, தமிழ் வியாபார ஊடகங்களின் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்தது.
இப்போது மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்ற தகவலை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் வெற்றியை நோக்கிச் செல்கின்ற குறிப்பான காலகட்டத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களை அதிகாரவர்க்கங்களின் அரசியல் போட்டிக்கு அடகுவைத்துவிட்டு பிழைப்பு நடத்தும் கூட்டம் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு எந்தத் தகுதியுமற்றது. மன்மோகன் சிங்கையும் நரேந்திர மோடி போன்ற இனக்கொலையாளிகளையும் நம்பக்கோரும் இந்தப் பிழைப்புவாதிகள் ஈழப்போராட்டத்திலிருந்து தயவுதாட்சண்யமின்றி அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
He is nasty insult leader for the entire brave seikh community India and dowsnot have a strong back bone