இந்தியா வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார்.
இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிய ரஹ்மான் மாலிக், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சையத் ஒப்படைப்பு பற்றியும் குஜராத்தின் சர்ச்சைக்குரிய சர் கிரீக் விவகாரம் குறித்தும் விவாதித்தார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கை பாகிஸ்தானுக்கு வரும்படி மாலிக் அழைப்பு விடுத்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரையும் ரஹ்மான் மாலிக் சந்தித்துப் பேசுகிறார்.
நேற்று உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை சந்தித்தார். அப்போது தாராளமயமாக்கப்பட்ட விசா நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது..
நாடுகளில் குறைந்தபட்ச தேசியப் பொருளாதாரமும் அழித்துச் சிதைக்கப்பட்ட பின்னர் நாடுகளிடையேயான உறவு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களை மையமாக வைத்தே இயங்குகிறது.