இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நேற்று கொல்கத்தாவில் இருந்து டெல்லி போய்ச் சேர்ந்தார். அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஹிலாரி சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அமரிக்க பெருநிறுவங்களின் முதலீட்டுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும், இந்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் பற்றி அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அப்போது ஹிலாரி தெரிவித்தார்.
உள்ளூர் முதலீட்டாளர்களையும் மூலதனத்தையும் முற்றாக அழிக்கும்நிலைக்கு இந்திய – அமரிக்கக் கூட்டு செல்லலாம் என அவதானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஈரான் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
She is going to talk about Lessons Learnt and Reconcilation Commission report with Professor G. L. Peiris and that is more important. The submissions of Colonel Gothapaya Rajapakse (1950). Watch out?
“உள்ளூர் முதலீட்டாளர்களையும் மூலதனத்தையும் முற்றாக அழிக்கும்நிலைக்கு இந்திய – அமரிக்கக் கூட்டு செல்லலாம் என அவதானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.” – யார் இந்த அவதானிகள், அதைகூட சொல்ல திராணியற்ற இந்த ஆசிரியருக்கு ரோத்தானாலதான் போடவேணும்.