இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைப் படுகொலை செய்யும் திட்டமொன்று விடுதலைப் புலிகளால் வகுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவிக்கின்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் மூலமே கலாநிதி மன்மோகன் சிங்கைப் படுகொலை செய்யும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இந்தியப் புலனாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது.
மீண்டும் ஒருங்கிணைவதற்கு முயற்சிக்கும் விடுதலைப் புலிகளின் அமைப்பு, இந்தியாவின் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், இந்திய உள்துறை அமைச்சர் பீ. சிதம்பரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்கு வைத்துத் தாக்குதல்களை மேற்கொள்வது அவர்களின் நோக்கமாக இருப்பதாக டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை தெரிவிக்கின்றது.
இலங்கை இராணுவத்தினரிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களே மீண்டும் ஒருங்கிணைந்து இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டங்களை வகுப்பதாக புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
1991ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூரில் வைத்து முன்னை நாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ததும் புலிகள் அமைப்பினர் தான் என்பதால், தற்போது இந்தியாவில் மீளிணைய முயற்சிக்கும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கடும் அவதானமாக இருக்க வேண்டும் என்று இந்தியப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
புலிகளினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து முக்கிய பிரமுகர்களை அறிவுறுத்தியுள்ள இந்தியப் புலனாய்வுத்துறை, அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்புத் தரப்பினரை எச்சரித்துள்ளது.
எதிர்வரும் மாதமளவில் கலாநிதி மன்மோகன் சிங் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புலனாய்வு அமைப்புக்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அற்றுப் போயுள்ள சூழல் அனைவரும் அறிந்ததே. தவிர, புலிகளின் ஒரு பகுதி இலங்கை அரசாங்கத்தாலும், இன்னொரு பகுதி இந்திய ஐரோப்பிய அரச அதிகாரங்களாலும் உள்வங்கப்பட்டுள்ளது. ஆக, இந்தியப் புலனாய்வுத் துறையின் இக் கருத்து உள்நோக்கங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் கொள்ள வாய்ப்புண்டு.
தமிழ் நாட்டில் உருவாகிவரும் தேசியவாத அரசியலை அழிப்பதற்கான இந்திய உளவுத்துறையின் முன்னேற்ப்பாடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
இலங்கையில் இந்திய ஆதரவுடன் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னர், கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவு நிகழ்வுகள் ஏனைய மாநிலங்களை விட தமிழ் நாட்டிலெயே அதிகமாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத் தக்கது.








பாதுகாப்பு ஏற்பாடுகளீல் முன்னேற்பாடாக இந்தியா இருக்க வேண்டும் சுவீடனில் ஒரு கொசு யானையை அடிப்பதாக நினைத்து தன்னை அழித்ததை அறீந்திருப்பீர்கள்.கிருமிகள் இருக்கும் வரை மருந்தடிக்க வேண்டும்.புலியளச் சாட்டிக் கொண்டு எந்தப் பயங்கரம் எங் கிருந்து வருமோ யார் கண்டா?
இன்றைய தமிழின உணர்வாளர்களில் ஒருவரான சீமான் அவர்கள் கூறுவதுபோல் தமிழீழ விடுதலைப்புலிகளால் இவர்களுக்கு ஆபத்து இல்லை. இவர்களால்தான் தமிழர்களுக்கு ஆபத்து.
தமிழீழவிடுதலைப் புலிகளால் யாருக்குமே ஆபத்து இல்லை. அவர்கள் உலகில்
செய்வதை ஒருவரும் திருப்பிக் கேட்கக்கூடாது. பண்ம் கேட்டால் கொடுக்க வேண்டும்,
போரிற்கு பிள்ளைகளைக் கேட்டால் கொடுக்க வேண்டும்.
தமிழ்ழவிடுதலை போராட்டம் அவ்ர்களின் பரம்பரைசொத்த்தாக உலக்ம் ஏற்கவேண்டும்.
உலகில் சர்வதே வர்த்தகர்களாகவும், தமிழர்களின்
அரசியல்
பேசும் உருமையுடனும் என்றும் அவ்ர்கள் வாழவேண்டும்.
ஈழ்த்தில்
தமிழர்
சிஙகள் அரசிடம் ஒருநேர சோற்ரிற்கு கையேந்த வேண்டும். துரை
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய உளவு துறை மூலம் மத்திய அரசு செய்யும் நாடகம்தான் இது.
உலகமுழுவதும் வாழ்ந்து தமிழர்களையும், உலகினையும்
ஏமாற்ரி
மோசடிகள்செய்போரிற்குப் பெயர் விடுதலைப்புலிகளா? தமிழ் மொழிக்கே
விடுதலைஎன்னும் சொல்லை புலிகள்சேர்ப்பது அவ்மான்ம். துரை
மிகக்கொடிய மனிதமிருகங்களுடன் சாத்வீகமாக போராடிக்களைத்த தமிழினம், ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்து புலிகளாக போராடியபோது போலிகளும் உருக்கொண்டு, தமிழினப் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு இயங்கியது. இந்தப் போலிகளை முற்றாக அழித்துவிட்டு புலிகள் அழிந்திருந்தாலும் தமிழினம் இன்று ஒரு புதிய போராட்டப் பாதையை உருவாக்கிப் பயனித்திருக்கும்.
யார், எங்கே, என்ன பதிவுகளையோ கருத்துக்களையோ வெளியிட்டாலும், அதன் தரங்களை ஆராயுமுன்பாகவே புலிகளுக்கு முத்திரைகுத்திச் சாடுவதையே இப் போலிகள் தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களுக்கு இதனால் என்ன இலாபம் என்று நாங்கள் யோசிக்கலாம். கருணாவைப்போன்ற போலிகள் பலர், புலிகளாக தங்களை வெளிப்படுத்தி தன் கோரப்பற்களால் தமிழ் மக்களையே காயப்படுத்தியது ஒரு காரணம். புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்கச் செயற்படுபவர்களுக்கு எதையும் அள்ளிவழங்க தயார்நிலையில் உள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளதும் காரணம்.
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினருக்காக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தம்மிடம் இருந்த போராளிகளை கொண்டு பாலியல் தொழிலையும் நடத்தியதாகவும்.
டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழுவினர் இலங்கைப் படையினருடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டனர் என்றும் விக்கிலீக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எத்தனை உண்மைகள் வெளிவந்தாலும் இந்தப் போலிகள் திருந்திக்கொள்வார்கள் என்பது நிச்சயமில்லை.
புலிக்கு எதிராக எழுதுபவர்கள் முன்பு துரோகிகள், இப்போ புலிகளிற்குள்ளேயே
துரோகிகள் இருப்பதைக் கண்டதும் , துரோகிகள் போலிகளாகிவிட்டார்கள்.
எப்பதான் நீங்கள் திருந்தப்போகின்றீர்கள்-துரை
தொலைந்து போனவன் திரும்பிவரும்போது திருந்தி வருவான் என்று நினைத்தால் இவர்கள் நாண்டுகொண்டு நிற்கிறார்கள் நாம் ஒருபோதும் திருந்தப்போவதுமில்லை, ஏதாவது உருப்படியாக தமிழருக்குச் செய்யவும் மாட்டோம், செய்ய போகிறவர்களை செய்யவிடவும் மாட்டோம் என்று. என்ன செய்வது இந்த போலிகளோடு?