அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முக மையை முறைப்படி அணுக அரசு திட்டமிட் டுள்ளதா என் பது குறித்து தெரிவிக்குமாறு இடதுசாரி கட்சிகள் மன் மோகன் சிங் அரசுக்கு கடிதம் அளித்திருந்தன. இந்த கடிதத் திற்கு நேரடியாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை என்ற போதும், ஐக்கிய முற் போக்கு கூட்டணி – இடது சாரி கட்சிகள் கூட்டத்தை ஜூலை 10 ஆம் தேதி வியா ழன் அன்று நடத்தலாம் என அயல்துறை அமைச்சர் பிர ணாப் முகர்ஜி யோசனை கூறி யுள்ளார். இதனிடைய சர்வ தேச அணுசக்தி முகமையை மத்திய அரசு விரைவில் அணு கும் என்று பிரதமர் மன் மோகன்சிங் கூறியுள்ளார்.
இடதுசாரி கட்சி தலை வர்களுக்கு பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், ஜூலை 10 ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், பிரணாப் முகர் ஜியின் கடிதம் கிடைத்துள் ளது. இடதுசாரி கட்சிகளின் அடுத்த நடவடிக்கை குறித்து, செவ்வாய் அன்று முடிவு செய் வோம் என்று குறிப்பிட்டார்.
சர்வதேச அணுசக்தி முக மையை அரசு அணுகுமானால் அமெரிக்காவுடனான உடன் பாட்டை செயல்படுத்த அரசு முடிவு செய்துவிட்டது என்றே பொருள்படும். எனவே, அவ் வாறு ஒரு நிலையை அரசு எடுக்குமானால் எங்களது ஆதரவை வாபஸ் பெறுவோம் என இடதுசாரி கட்சிகள் ஏற் கனவே திட்டவட்டமான தெரி வித்துள்ளன.
இந்த பின்னணியில் ஜி-8 மாநாட்டில் பங்கேற்ப தற்காக பிரதமர் மன்மோகன் சிங் திங் களன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டார். விமா னத்தில் செய்தியாளர்க ளுக்கு பேட்டியளத்த அவர் அமெ ரிக்காவுடனான உடன் பாட்டை நடை முறைப் படுத்த சர்வசேத அணுசக்தி முக மையை விரைவில் அணுகு வோம் என்று தெரிவித்தார்.
இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கான ஆதரவை விலக் கிக் கொள்வது குறித்து கவலை இல்லை என்று கூறிய அவர், ஜப்பானில் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ் உட்பட அனைத்து தலைவர்களி டமும் உடன்பாட்டிற்கு ஆதரவு கோருவேன் என்றும் கூறினார்.
அமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கும் பிரதமரின் ஜப்பான் பயணத்திற்கும் தொடர் பில்லை என்று காங்கிரஸ் கூறி வந்த நிலையில், டோக்கி யோவில் அமெரிக்க ஜனாதி பதி புஷ்ஷை சந்திப்பதற்கு முன்பு, அணுசக்தி முகமையை அணுகுவது குறித்து, மன் மோகன்சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நடைபெறும் என்பதை பிர காஷ்காரத் ஏற்கனவே கணித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அணுசக்தி முக மையை அணுகியுவுடனேயே உடன்பாட்டை செயல்படுத் தும் பணி துவங்கி விடும் என் றும் மன்மோகன் சிங் கூறினார்.