முதல் தடவையாக சர்வதேச குற்றவிய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரான சூடான் ஜனாதிபது இன்னும் ஆட்சியிலுள்ளார். மனிப்புச்சபையின் சட்டவல்லுனரான ரீ.குமார் தெரிவிக்கையில் இது குறிக்கத் தக்க முன்னேற்றமாகும் எனக் குறிப்பிட்டார். மன்னிப்புச் சபையின் 400 பக்க அறிக்கையில் இலங்கைப் படுகொலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னேறும் இராணுவத்திற்கும் புலிகளிற்கும் இடையில் அகப்பட்டு சுமார் எழாயிரத்திற்கு மேலானவர்கள் மரணித்துப் போனார்கள் என்கிறது இந்த அறிக்கை. ஏழாயிரம் என்று இவர்கள் குறிப்பிடும் தொகை கொல்லப்பட்ட உண்மையான தொகையுடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத் தக்கது.
இலங்கையிலிருக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இலங்கைப் பிரச்சனையோடு தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் கொல்லப்பட்ட மக்களின் தொகை இவர்கள் கூறும் தொகையைவிட குறைந்தபட்சம் ஐந்து மடங்காக ஆவது இருக்கும் என்பது வெளிப்ப்டையாகத் தெரியும். உலகின் மாறும் ஒழுங்கிற்குள் மன்னிப்புச் சபையும் தன்னை நுளைத்துக்கொண்டுள்ளது தெளிவாகிறது. இன்று வரைக்கும் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற புலிகளின் தோற்றுப்போன சிந்தனை முறையை நடைமுறைப்படுத்த பணம் வாரி இறைக்கப்படுகிறது. படுகொலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்தி அதுகுறித்து உலகெங்கும் பரந்திருக்கும் மனிதாபிமானிகள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. ஐ. நாவிற்கு அழுத்தம் கொடுக்க இவ்வாறான எந்த பலத்தை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தனி நபர்களிடம் முடங்கிப் போயிருக்கும் புலிகளின் பணம் இவ்வாறான தேவைகளுக்குப் பயன்படுமானால் நாளைய சமூகம் புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றிகூறும்.
“அதுதான் காலத்தின் தேவையாக இன்று இருக்கின்றது.”
ஆம் இந்த காலத்தின் தேவைகளை முன்னெடுக்க நாம் என்ன செய்யவேண்டும்? என்பதிலே எமது செயல்பாடு வினைத்திறனுடனும் சமூகப் பொறுப்புடனும் இருக்க வேண்டும் அதன் மூலம் போர்குற்றத்தை ஆவணப் படுத்துதல், அம்பலப்படுத்துத்துதல் என்பன அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் தமிழர் தாயகத்தில் நிகழ்த்தபட்ட மனித உரிமைமீறலையும் இன அழிப்பையும் வெளிபடுத்தும் தகவல் மையங்களையும் திறந்து அவற்றின் ஊடாக சகல ஊடகங்களினையும் எமது நியாயங்களை உள்வாங்கும் தன்மையை ஏற்படுத்துதல். அவை தொடர்ச்சியாக சகலவிதமான முறைமைகளின் மூலமா க சர்வேதேச முன்றலில் நியாயம் வேண்டிய போராட்டங்களை முன்னெடுத்தல். எனவே போர்குற்ற ஆவண காப்பகமும் தகவல் மையமும் இன்றே ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படட்டும். அத்துடன் இப்போதும் தொடர்ச்சியாக தமிழர் தாயகத்தில் நடைபெற்று வரும் பாரிய நேரடி மறைமுக இன அழிப்பையும் அம்பலப் படுத்தும் முயற்சியை சமாந்திரமாக முன்னெடுப்போம். வெறும் இணையத்தள எழுத்தில் இல்லாமல் நடைமுறையில் எதாவது மிக விரைவாகச் செய்வோம்.
S.G.Ragavan
Canada