இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் குடும்பங்களுக்குள் நடைபெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் என்பது பெண்ணின் விருப்பமின்றி அவரை அபகரித்துக் கொள்ளும் உரிமையை ஆண்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் கட்டாயமாக மனைவியுடன் உடலுறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண் வன்கொடுமை அல்லது பாலியல் வன்முறைச் சட்டத்தில் கணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது விருப்பமின்றி கட்டாயமாக நடைபெறும் உடலுறவுகளை பாலியல் வன்முறையாக சட்டம் கருதாமல் இருந்தது.
இச்சட்டத்தில் இருந்து ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக மாதர் சட்டங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதாடிய பெண் வழக்கறிஞர் “மனைவியுடன் கட்டாய உடலுறவு நம் வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய பாலியல் வன்முறை,. திருமணம் என்ற அமைப்பில் எத்தனை எத்தனையோபாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றது. ஆனால் இது போன்ற வன்முறைகளில் பெண்களுக்கு எவ்வித நீதியும் கிடைப்பதில்லை. வழக்கும் பதியப்படுவதில்லை”என்று வாதிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி ”கணவன் என்ற உரிமையுடன் மனைவியுடன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது இந்தியாவில் நடக்கும் கொடுமையான குற்றம். திருமணம் ஆன பெண்ணும், திருமணம் ஆகாத பெண்ணும் ஒவ்வொரு சட்டத்திலும் வித்தியாசமாகக் கருதப்படுகிறார்கள். இந்த வழக்கிற்கு அடிப்படையான நிகழ்வில் இந்த வழக்கின் பின்னர் மனைவியுடன் கட்டாய உடலுறவில் ஈடுபட்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.