11.03.2009.
இராக்கின் முன்னாள் துணைப் பிரதமர் தாரிக் அஜீஸுக்கு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த குற்றத்திற்கான 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வருடங்களுக்கு முன் 1992ல் அரசாங்க விலைக் கட்டுப்பாடுகளை மீறிய இராக்கிய வர்த்தகர்கள் நால்வர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விஷயத்தில் விசாரணை நடத்திய பாக்தாத் நீதிமன்றம் இவருக்கும் அதில் தொடர்பு இருந்ததாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
குற்றச்சாட்டுகளை அஜீஸ் மறுத்திருக்கிறார்.
2003ல் இராக்கிற்குள் அமெரிக்கப் படையினரால் கவிழ்க்கப்பட்ட அதிபர் சதாம் ஹுசைனின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக விளங்கியவர் இந்த தாரிக் அஜீஸ்.
இதே வர்த்தகர்கள் கொலைச் சம்பவத்தில் பங்குகொண்டிருந்த சதாம் ஹுசைனின் உறவினரான கெமிக்கல் அலி எனப்படும் ஹசன் அல் மஜீதுக்கும் 15 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருகிறது.
சதாம் ஹுசைனின் வேறு உறவினர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
BBC.