பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 தயாரித்த ஆவணப்படம் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒன்றுகூடலில் நேற்றுக் காண்பிக்கப்பட்டது. பார்வையாளர்கள்சிலர் கண்ணீரோடு ஆவணப்படத்தைப் பார்வையிட்டனர். இலங்கை அரச இராணுவத்தின் கொடுரமான மனிதவிரோத இனப்படுகொலை நிகழ்வுகள் அங்கே காண்பிக்கப்பட்டன எனத் தெரியவருகிறது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்திக் கொலை செய்யும் காட்சிகள், என்ற மனித குலத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட இது வரை வெளிவராத வன் முறைக் காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் பதியப்பட்டிருப்பதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாகத் தெரிவித்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
தவிர, தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் மீதான வன்முறைகளும் கட்சிப்படுத்தப்படிருப்பதாகவும் தவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணப்படம் இம்மாதம் பதின் நான்காம் திகதி குறித்த தொலைக்கட்சியில் இம் மாதம் பதின் நான்காம் திகதி பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
இதே வேளை இலங்கையின் பேரினவாத ஊடகங்கள் இக்காட்சிகள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்பட்டவை எனச் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சேர்,துரை,பியூன் எல்லாரும் எங்கே போய் விட்டார்கள்?
சணல் 4 தார்மீகக் கடமைக்கு தலை வணங்குகிறேன்.முதலில் நான் மனிதனாய் இலங்கை மண்ணீல் நிகழ்ந்த கொடுமைகள தாங்க முடியாது தவிக்கிறேன் தமிழ் பேசும் தமிழ் மகனாய் துடித்துப் போகிறேன்.சரணடையாது சாவைத் தழுவி இருந்தால் இந்தளவு கொடுமை நிகழ்ந்திருக்காது.
இராணுவ உடை தரித்த விடுதலைப் புலிகளே, பெண்களை சுட்டுக் கொன்றார்கள் என்று, இங்கு பின்னூட்டம் எழுதும் , புலி எதிர்ப்புவாதிகள் சொன்னாலும் ஆச்சரியமில்லை