பிரிட்டனின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் மற்றும் பிரான்ஸின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேர்னட் குச்னெர் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறுதிக் கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் தெளிவாக அறிக்கையிடப்பட்டுள்ளதாக இரு நாடுகளினதும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப் படுகொலைகளில் ஒன்றான இலங்கை இனப்படுகொலையை வெறும் மனித உரிமை மீறல்களாக ஏகாதிபத்தியங்கள் சுருக்கி அவற்றைத் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த முனைகின்றன.
எவரும் எதுவும் சொல்லக் கூடாது!அது தானே உங்கள் விருப்பம்?நல்ல கொள்(ல்)கை!