ஒரு அரசு தான் அதிகாரம் செலுத்துகின்ற மக்களின் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாகின்றது என்பதைக் கண்காணிக்கும் நோக்கிலேயே மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்ன்னிப்புச் சபை போன்றன உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சோவியத் ஏகாதிபத்திய முகாமிற்கு எதிராக உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் இன்று மனித உரிமை மீறல்களை தாம் சார்ந்த அரசுகளின் அரசியல் நகர்வுகளுக்கு ஒப்ப கண்டித்தும் வெளிப்படுத்தியும் வருகின்றன. வன்னிப் படுகொலைகள் நடந்த வேளையில் புலிகளுக்கும் அரசிற்கும் நடைபெறும் யுத்தம் என்றும், மக்களைப் புலிகள் விடுதலை செய்ய வேண்டும் என்றும், பல தடவைகள் இலங்கை அரசைக் கண்டித்தும் இத் தன்னார்வ நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. ஒரு வருடம் கடந்த நிலையிலும் எதுவும் நடந்தாகவில்லை. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மனித உயிர்களின் மீது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் போர்குற்றவாளிகளான ராஜபக்ச குடும்பம்.
இந்த நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றுமொரு கோரமான படத்தொகுப்பை வெளியிட்ட்டுள்ளது.
இங்கு மகிழ்ச்சிய்டைய எதுவுமில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இன்றுவரை அது நடைபெறுவதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. இந்திய சீன அரசுகள் இலங்கைக்கு ஆதரவான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் சூழலில் அதற்கு ஏற்றவாறு தமது அரசியலை மேற்கு நாடுகளும் நகர்த்திச் செல்கின்றன. இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் கண்டனங்களைத் தவிர்க்கவே மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவை நியமித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இலங்கை அரசின் அதிகாரத்திலிருப்பதே கொலைக் குற்றவாளிகள். இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்று தான் இன்னுமொரு முள்ளிவாய்க்காலிலிருந்து மக்களை விடுதலைசெய்யும்.
-எம்.திரு
தமிழக முதல்வர்?,கலைஞர் கருணநாதியின் “செம்மொழி மாநாட்டு பாடல்” வந்துவிட்டது!.- – “ஐயன் வள்ளுவன்படி,”தீதும் நன்றும் பிறர் தர வாரா,போரை தவிர்த்து பொருளைத் தேடு” என்பதே இவரின் சந்தர்ப்ப வாத “ஜாதிரீரீயான” அறிவுரை!.”பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்று,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அனைவருக்கும் தெரியும்.கலைஞரும் அவர் குடும்பத்தவரும் என்ன மின்சாரம் கண்டிபிடித்து,”பேட்டண்ட் வாங்கி”,அதை சந்தைப்படுத்தியா பொருளீட்டினார்கள்?.தங்கள் “குலத்தொழிலான மானாட்டம்,மயிலாட்டம்” மூலமாகத்தானே பொருளீட்டினார்கள்.புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் மட்டும் என்னவாம்,தங்கள் “குலத்தொழிலான அதிகார வர்கங்களின் காலைக் கழுவிக் குடித்துதானே(ஆங்கிலேய அடிவருடிகள்) பொருளீட்டினார்கள்.இதில் “வெங்காய தமிழ்த் தேசியம்” எங்கேயாவது காப்பாற்றப்பட்டதா?.இந்திய தேசிய தொலைக்கட்சியான என்.டி.டிவி. ஏற்கனவே இதை நக்கலடிக்கிறது.தமிழ்தேசியத்தை பேசியவர்கள்,நீங்கள் இருவரும்தானே!.ஆயுதம் தூக்கக் கூடாது,இந்திய இராணுவமே எங்கள் இறமையின் பாதுகாவலன்,என்று நூறாண்டு காலமாக கூறுகிறவர்கள் நாங்கள்!.தமிழ் என்ற சொல்லை வைத்து,வாய் சவாடல் விட்டு,ஹிந்தி அரக்கன்,சிங்களவன் தோலை செருப்பாக தைப்போம் என்றவர்கள் நீங்கள்!.இப்போது,”நீ தமிழனாக இரு ஆனால் ஆயுதத்தை தூக்காதே”! என்று சந்தர்ப்பவாதமாக பாடல் எழுதுகிறீர்கள்.தவளை தன் கத்தலால் கெட்ட மாதிரி,வல்லரசு பாம்புகளை வரவழைத்து விட்டு,எப்படி தடுப்பீர்கள்.ஓ!… அதுதான் இரண்டுபெண்டாட்டி முருகன் மாதிரிகட்ட வேண்டு,யாழ்ப்பாண்த்தில்,விதவைப் பெண்களுக்கு,உல்லாச பயணிகள் சேவை செய்ய,”ஹோட்டல்கள் கட்டவேண்டு” என்று “இளையோருக்கு” அறிவுறுத்துகிறீர்கள்!.ஒன்று செய்யுங்கள்,முன்பு தாய்லாந்தில்,உலகப் போரில் செய்தது போல்,உங்கள் வீட்டு பெண்களையெல்லாம் வீட்டு வாசலில் திரும்பி நிற்க சொல்லுங்கள்,நீங்கள் வெத்திலைப் பாக்கு பெட்டியுடன் வாசலில் நில்லுங்கள்!.
செம்மோழி மாநாட்டு படல் – http://beta.thehindu.com/multimedia/archive/00117/WCTC_Theme_117421a.mp3 –
“துட்டுக்கு ரண்டு கொட்டைப் பக்கு: இப்போது நாறல் பாக்காகி விட்டது.
நாறல் பாக்கிற்கும் தின்ன ஆள் உண்டு!!!
FRIED FISH
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று வள்ளுவர் எங்கே சொன்னார்?
By the way, what is your “kulath thozil”?