அண்மித்த பத்தாண்டுகளில் வேட்டைமனிதர்கள் மறுபடி மேற்கத்திய சமூகவியலாளர்களால் பேசப்பட்டார்கள். ரிச்சாட் லீ, இர்வென் து வொத்ர், மர்ஷால் சாலின்ஸ் ஆகியோர் இது தொடர்பான பல ஆய்வுகளுடனும் தரவுகளுடனும் லெஸ்லி வைட்(1949) என்ற சிந்தனையாளரைத் தொடர்ந்து முன்வந்தனர்.
டார்வின், ஏங்கெல்ஸ் போன்றோரின் கோட்பாடுகள் 60 களில் பல எதிர்ப்புக்களைச் சந்தித்த பின்னர் வெளியான பல ஆய்வுகள் குரங்கு நிலையிலிருந்த மனிதனின் பரிணாமத்தை பல வழிகளில் நிறுவுகின்றது.
மனிதவியல் அடிப்படையில் அன்றி சமூகவியல் சார்ந்தே எதிர்வினைகள் இக்கோட்பாடுகளுக்கு எதிரான எதிர்வினைகள் எழுந்தன.
மர்ஷால் சாலின்ஸின் கற்காலப் பெருளாதாரம் (1974) என்ற நூலும் ஆய்வுகளும் ஏங்கல்சிற்கு ஏதிர்வினையாற்றியவர்களால் பொதுவாக கோடிட்டுக்காட்டப்பட்டது. வேட்டையாடும் ஆதிமனிதர்கள் தமது உணவுக்கான மூலத்தை எப்போதும் பெற்றுக்கொள்ளாத நிலையில் அழிவின் விழிம்பிற்கு வந்தத் நிலைகளிலிருந்து உணவைச்ச்சேமிக்கும் பழக்கத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என்றும் (பக் 5, 24, 25) இதனால் உபரி என்பது அங்கும் காணப்பட்டது என்றும் வாதிடுகிறார். தவிர, இவற்றினூடான சமூக வாழ்னிலைகளான குறைந்த முயற்சி அதிக ஆடம்பரம், வேறுபட்ட உணவின் சுவை, கலையுணர்வு, இயற்கை மேலாதிக்க உணர்வு என்பவற்றைக் கொண்டிருந்தததாகவும் குறிப்பிடுகிறார்.
சாலின் தெளிவாகக் குறிப்பிடும் பரிணாம வளர்ச்சிக்கு உடற்கூற்றியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆதி மனித எலும்புகளின் தன்மை “மனிதக் குரங்குகளை” ஒத்ததாக அமைந்திருப்பதை நிறுவுகிறார். பொதுவாக இதனை எதிர்ப்பவர்களை விட சமூகவியல் காரணங்களே எதிர்ப்பின் பிரதான கூறாக அமைந்திருந்தது.
இது ஏங்கல்சின் ஆதிக் கம்யுhனிச சமூகத்தின் மேல் முன்வைக்கப்படும் விமர்சனமாகவும் மாற்று நிறுவலாகவும் முதலாளித்துவ சமூகவியலாளர்களால் முன்வைக்கப் படும் பிரதான கருத்தாக்கங்களில் ஒன்றாகும்.
அவுஸ்திரேலிய அப்ரோஜின் இன மக்கள் மத்தியில் மேற்கொளப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் பழக்கவழக்கக்ங்களை ஆதாரமாக முன்வக்கும் லீ மற்றும் சாலின்ஸ் போன்ரோர். சிலர் அறுவடை நாட்களில் சேமித்ததை மற்ற நாட்களில் விற்பனைசெய்வதாகக் சுட்டிக்காட்டுவதனூடாக உபரி என்பது ஆதிமனித சமூகத்தில் இவ்வாறே அமைந்திருக்கும் என வாதிடுகின்றனர்.
இரண்டாவதாக அவுஸ்திரேலிய அப்ரோஜின் களுக்கும் அமரிக்க செவ்விந்தியர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை முன்னிறுத்தும் மார்க்சிய எதிர்ப்பாளர்கள் ஆதிமனிதர்களின் ‘ப்ங்கிடும் உணர்வானது’ இடத்திற்கிடம் வேறுபடுவதாக வாதிடுகின்ரனர். காலனிலை, உணவின் மூலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இவ்வேறுபாடானது மனிதகுல வரலாற்ரைப் போதுமைப்படுத்த முடியாதென்று நிர்மலா படித்த பால பாடம் போல் ஒப்பித்தனர்.
ஆனால் பலமான ஆதரங்களுடன் ஏங்கெல்ஸ்ஸை நியாயப்படுத்தும் பின்னைய சமூகவியலாளர்களுள் முக்கியமானவர் ஜுடித் பிரவுண்(1981). ஏங்கல்ஸ் கூறுவதுபோல ஆதிக்கம்யுhனிஸ சமூகத்தில் தேவைக்கேற்ப உணவும் சேவையும் பங்கிடப்பட்டுக் கொண்டது என்று வாதிடும் இவரின் கருத்து ஆதிமனித சமூகம் தொடர்பான மிக அண்மைய ஆய்வுகளின் அடிப்படையிலமைந்த பெரும்பாலான சமூகவியலாளர்களால ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தமைவாகிரது. இந்த பங்கிடும் தன்மையானது பிரவுண் கூறுவது போல ஆதிச் சமூகத்தின் எல்லாத் தனிமனிதர்களும், நகர்ந்தவாறே இருந்த காலகட்டத்தில், உணவு சேகரிப்பிற்கான சாத்தியமின்மை இருந்ததாக நிறுவுகிறார். ஒருவருக்கு மற்ரவர் ஒத்துழைக்க வேண்டிய சமூக வாழ்க்கை காணப்பட்ட நிலையில் எல்லோருமே உழைப்பில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாகவும் வாதிடும் இவர், யாரும் தனித்தன்மை கொண்டதாக இருந்ததில்லை என்பதையும் வாதிக்கிறார்.
தவிர, பெண்களின் தலைமை கொண்ட குழுக்கள் அமைந்திருந்தை (பக்: 240) சுட்டிக்காட்டும் இவர், பெண்கள் பொதுவாக தங்குமிடங்களைத் தெரிவு செய்வதையும் பயிரிடுவதையும் தொழிலாகக் கொண்டிருந்தமையானது நிர்வகிக்கும் பொறுப்பை இலகுவாக்கியதாகவும் குறிப்பிடுகிறார். முன்னவர்களை விட வேறுபட்ட பிரதேசங்களான ஆசியா ஆபிரிகா போன்ற ஆதிமனிதக் குழுக்களை ஆராய்ந்த இந்த முடிபுகள், பல திரிபுகளின் பின்னர், ஏங்கல்ஸ, டாவினை ஏற்றுக்கொள்ளும் மறுக்கமுடியாத தரவுகளைக் கொண்டுள்ளது.
சி.ஹார்மனின் (1994) எங்கல்சும் மனித சமூகத்தின் மூலமும் என்ற ; கட்டுரையில் சுமார் 6000 வருடங்களுக்கு முன்னரே முதல் முதலில் உபரி எனப்படும் மேலதிக உற்பத்தியும் சேமிப்புத்தன்மையும் கண்டுணரப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.
வளர்ச்சிஐடந்த விவசாயக்காலகட்டம் எனக்குறிப்பிடும் இவர், முதலில் மொசப்பதொமியாவிலும் பின்னதாக எகிப்ப்து ஈரான் சிந்துவெளி மற்றும் சீனா போன்ற நாடுகளுக்குப் பரவியதாகவும் குறிகிக்றார்.
டீ.என்.ஏ தொழில் நுட்பம் டாவினின் கூர்ப்புக் கோட்பாட்டையும் மனித குழுக்களின் நகர்வையும் குறித்து புதிய விஞ்ஞான நிறுவல்களை முன்வைக்கிறது.
தவிர கணித உய்த்தறிதல் முறையை ஆதாரப் படுத்தி ஆராய்பவர்கள் பலரும் ஏங்கல்சின் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியானது என நிறுவுகின்றனர்.