ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி வெளியேறி உள்ளார். பாமகவில் இருந்து விலகிய அவர் அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
ராமதாஸ் அண்மைக்காலமாக சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்து காதல் திருமணங்களுக்கு எதிராகவும் தலித்துகளை விமர்சித்தும் பேசி வருகிறார். இதனாலேயே அவர் ராமதநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சொந்தக் கட்சியிலே ராமதாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாமகவின் நிர்வாகக் குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுசாமி ராமதாஸின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து கட்சியைவிட்டுமின்றி அரசியலைவிட்டே வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். 1999-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 2 முறை சிதம்பரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக பொன்னுசாமி இருந்தார். அவர் 99 முதல் 2001 வரை பெட்ரோலிய துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.