சிவசேனா கட்சியின் புதிய தலைவராக, போட்டியின்றி, உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவசேனா கட்சித் தலைவராக இருந்து வந்த பால் தாக்கரே, சமீபத்தில் காலமானார். அவரது மறைவிற்கு பின், புதிய தலைவரை தேர்வு செய்ய, கட்சியின் செயற்குழுக் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, உத்தவ் தாக்கரே, 52, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.புதிய தலைவர் தேர்வு குறித்து, கட்சி முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுபாஷ் தேசாய் கூறுகையில், சிவசேனா கட்சியின் புதிய தலைவராக, உத்தவ் தாக்கரே ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் அதிகாரியாக பாலகிருஷ்ண ஜோஷி செயல்பட்டார். கட்சி தலைவராக இருந்து மறைந்த பால் தாக்கரே, நான்கு தலைமுறைகளுக்கு முன்னால் கட்சியில் தோற்றுவித்த, செயல் தலைவர் பதவி, இனிமேல் இருக்காது, என்றார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உத்தவ்தாக்கரே கூறியதாவது:அடுத்தாண்டு, மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்கூட்டணியை தோல்வி அடையச் செய்து, அதிக தொகுதிகளை சிவசேனா கைப்பற்றவேண்டும். பால்தாக்கரே மறைவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியை பலப்படுத்த அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
சில நாட்களுக்கு முன்னர் மறைந்துபோன மனித குலத்தின் அவமானச் சின்னமான பால் தாக்ரேயைப் பிரதியிட பொருத்தமான பயங்கரவாதி உத்தவ் தாக்கரே.