உலகளாவிய மனிதஉரிமை நிலை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன
இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசு மனித உரிமைகளை மீறுவது ஒரு புறமும் மறுபுறம் அமரிக்கா போன்ற உலக மனித உரிமைக் கொலையாளிகளை இலங்கைக்குள் அழைப்பதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருபதும் மனிதவிரோதக் குற்றங்களாகும். ராஜபக்சவிற்குப் பதிலாக மற்றைய கொலையாளியான சரத் பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்ட்சி ஆகியவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்ப்பின் துணையோடு ஆட்சிக்குக் கொண்டுவருவதே ஆகும்.
வாசிங்டனில் நேற்றுக் காலை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் சுமார் 200 நாடுகளின் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை வெளியிட்டார்.
இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 44 பக்க அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை பல கட்சி அரசியலமைப்பைக் கொண்ட குடியரசு. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது ஆறாண்டு பதவிக்காக மீளத் தெரிவு செய்யப்பட்டார்.
அரசியலமைப்பு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடாளுமன்றம் 2010 ஏப்ரலில் தெரிவு செய்யப்பட்டது. இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதியின் குடும்பமே ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொருளாதார அமைச்சு என இரு நிறைவேற்று அதிகாரமுள்ள பதவிகளை வைத்துள்ளனர். மூன்றாவது ககோதரர் நாடாளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளார்.
ஜனாதிபதியின் மகன் உள்ளிட்ட பெருந்தொகையான அவரது உறவினர்கள் முக்கியமான அரசியல் மற்றும் இராஜதந்திர பதவிகளில் உள்ளனர். ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத தேர்தல் இரண்டுமே தேர்தல் சடடங்களை மீறப்பட்ட மோசடியாகவே இடம்பெற்றன.
பெருமளவு அரச வளங்கள் ஆளுங் கூட்டணியால் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்டன. தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளினதும் அரச ஆதரவுக் குழுக்களினதும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளே மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது.
அரசியல் நோக்கம் கருதி இந்தக்குழுக்கள் இயங்குகின்றன. குடியியல், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் துன்புறுத்தப்படுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் சுய தணிக்கைக்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது. இங்கு முக்கிய பிரச்சினை காணாமல் போனோர் விவகாரமாக உள்ளது. முன்னைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அதற்கு எவ்வித பொறுப்புக்களும் கூறப்படவில்லை.
பாதுகாப்புப் படையினர் தடுப்பிலுள்ளோரை சித்திரவதை செய்து துன்புறுத்துகின்றனர். அரச அதிகாரிகளினால் பொதுமக்கள் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் விசாரணைகளின் போது சிலர் மரணமாகியுள்ளனர்.
நீதி விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுகின்றனர். மற்றும் உண்மையான நீதி மறுக்கப்படுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. விதிகளை மீறும் வகையில் பொதுமக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசாங்கம் தலையிடுகிறது.
கருத்து வெளியிடுதல், ஊடக சுதந்திரம், ஒன்றிணையும் சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை நடமாடும் சுதந்திரம் என்பவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. தீவின் எல்லாப் பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்ற வரக்கூடிய நிலை உள்ள போதும், வடக் குகிழக்கில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் சோதனைச் சாவடிகள் அதிகமாக உள்ளன.
உயர்பாதுகாப்பு வலங்களில் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை விமரிசிக்கும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியே ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நீதியற்ற வகையில் தேர்தல் சட்டத்துக்கு முணராக அரசாங்கம் நடந்துள்ளதாக சந்தேககங்கள் உள்ளன. வெளிப்படைத் தன்மை அரசாங்கத்தில் இல்லை.
பெண்களுக்கெதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களைக் கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் என்பன இங்கு பாரிய பிரச்சினையாக உள்ளது. மேலம் சிறு பான்மைத் தமிழர்களுக்கெதிரான பாகுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.
மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறப்பட்ட உதிகாரிகள் குறைந்தளவினரையே அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல்கள், பொலிஸாரின் சித்திரவதைகள், ஊழல் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அதிகாரபூர்வமாக தண்டிப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பிருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது








President Mahinda Rajapakse (1945) said that he will embrace he electric chair for the sake of the country. I heard his brother Gothapaya (1950) has Permanent Residency in USA – New York.