கடந்த சில நாட்களாகவே இந்திய நாடாளுமன்றம் கடும் அமளியைச் சந்தித்து வருகிறது. எதிர்கட்சிகளின் தொடர் பிரச்சனைகளால் நாள் முழுக்க அவை ஒத்தி வைக்கப்படுகிறது. இடது சாரிகள் காங்கிரஸ் அரசு மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வருவதால் டில்லி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய இராசாயணத்துறை அமைச்சருமான மு.க அழகிரி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் தனது நண்பர்களுடம் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளார். மதுரை
நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஷ் பாபு, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், ஒரு டாக்டர் உள்பட 10 பேருடன் அழகிரி மாலத்தீவுக்கு ஏப்ரல் 16ம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.தனது மாலத்தீவு பயணம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அழகிரி தெரிவித்து விட்டாராம். அதேசமயம், அழகிரியின் மாலத்தீவு பயணம் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதற்குக் காரணம், இது தனிப்பட்ட கோடை விடுமுறைப் பயணம் என்பதால் என்று கூறுகின்றனர் அழகிரி தரப்பினர்.
சோனியா நீ என்ன மாமியா
கருணாநிதி நீ என்ன தமிழுக்கு நீதியா
சிதம்பரம் நீ பம்பரம் சுத்திச்சுத்தி பொய்சொல்லும் இயந்திரம் மு க முத்து முதுகிலே குத்து