மதுரை – திருமங்கலம் – டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் அருகே காட்டாற்றுப் பாலம் ஒன்று உள்ளது. இந்தத் தரைப்பாலத்தில் குண்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது இன்று காலை கண்டறியப்பட்டது.
ஒரு பிளாஸ்டிக் குழாயில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு, ஒயர் மூலம் பேட்டரி இணைப்பு ஏற்படுத்தி, குண்டு வெடிக்கச் செய்ய சதி நடந்துள்ளது.
ஆனால் உரிய நேரத்தில் கிடைத்த தகவலை அடுத்து தேசிய பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். குண்டு கண்டறியப்பட்டு, உடனே செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து அடிப்படைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் இந்தியா எங்கும் விதைக்கும் கட்சி வன்முறையை விதைத்துச் செல்கிறது என்பதன் குறியீடோ இதுவென ஜனநாயகவாதிகள் வியப்புத்தெரிவித்தனர்.