கல்லூரியில் சேருவதற்கும் போலி மதிப்பெண் சான்று அளித்த மோசடியில், உ.பி. பாஜக எம்எல்ஏ கப்பு திவாரிக்கு, நீதி மன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியா மாவட்டத்திற்கு உட்பட்ட கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் இந் திரா பிரதாப் திவாரி என்ற கப்பு திவாரி.
இவர், கடந்த 1990-ஆம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்தியாவில் உள்ள சாஹேத் கல்லூரியில் சேர்ந்தி ருக்கிறார். இதனை 1992 -ஆம் ஆண்டு கண்டுபிடித்த அக்கல் லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி, திவாரியின் மோசடி தொடர்பாக காவல் நிலையத் தில் புகார் அளித்தார்.
இதன்மீதான வழக்கு, கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், எம்பி- எம்எல்ஏக் கள் மீதான வழக்குகளை விசா ரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூஜா சிங் திங்களன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, எம்எல்ஏ திவாரியின் மோசடி நிரூபண மாகி இருப்பதால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும் ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார். தீர்ப்பு வழங்கும்போது இந்திர பிரதாப் திவாரி நீதிமன் றத்தில் ஆஜராகி இருந்ததால், போலீசார் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத் தனர்.