Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மதிப்பில்லாத சரக்குகள்! : அப்துல்

இனியொரு... by இனியொரு...
06/21/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

கடந்த மார்ச் மாதம் 25 – ஆம் தேதி 72 பேர் கொண்ட அகதிகள் குழு லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து “பூலோக சோர்க்கமாம்” ஐரோப்பாவை அடையும் நோக்கத்துடன் தமது கடல் பயணத்தைத் தொடங்கியது. 47 எத்தியோப்பியர்கள், 7 நைஜீரியர்கள், 7 எரிட்ரீயர்கள், 5 சூடானியர்கள் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த 6 பேர் அடங்கிய இக்குழு மத்தியத்தரைக் கடலைக் கடந்து இத்தாலியைச் சேர்ந்த லம்பேடுஸா தீவை அடைந்து ஐரோப்பாவில் காலடி எடுத்துவைக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், திரிபோலியை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே நடுக்கடலில் மாட்டிக் கொண்ட இக்குழுவினர், உடனடியாக சேமதி தொலைபேசி மூலம் (சேட்டிலைட் போன் மூலம்) இத்தாலி கடற்படையினரிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளனர்.

கடலில் தத்தளித்த 16 நாட்களில் ஒருமுறை நேடோ போர்க் கப்பலுடனும், ராணுவ ஹெலிகாப்டருடனும் இவர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு கூக்குரலிட்டுள்ளனர். ஆயினும், எந்த உதவியுமின்றி தாகத்திலும், பசியிலுமாக சிறுகச் சிறுக ஒவ்வொருவராக – பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் கொண்ட இக்குழுவினரில் 63 பேர் பரிதவித்துச் சாகவிடப்பட்டுள்ளனர்.

கடற்பரப்பில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் உதவி சேவது முதன்மையானதும், கட்டாயமானதும் ஆகும் என்று சர்வதேச கடல் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. இத்தாலி கடற்படையினரும், நேடோ படையினரும் இச்சர்வதேச சட்டவிதிகளை வேண்டுமென்றே காற்றில் பறக்கவிட்டுள்ளனர். இந்த 63 அகதிகள் நடுக்கடலில் பரிதாபகரமான இறந்து போயிருப்பது தனிப்பட்ட சம்பவம் அல்ல. துனிசியா, லிபியா நாடுகளில் நடக்கும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாகவும், அமெரிக்க-ஐரோப்பிய அரசுகளின் இராணுவத் தலையீடுகள் காரணமாகவும் வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது நாடுகளிலிருந்து அகதிகளாக வெளியேறி, கடல் வழியே உயிரையே பணயம் வைத்து ஐரோப்பாவிற்குச் சேல்லத் துணிகிறார்கள்.

கடந்த நான்கு மாதங்களில் ஏறத்தாழ 30,000 பேர் மத்தியதரைக் கடலை கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இந்த அபாயகரமான பயணத்தில் பலர் நடுக்கடலிலேயே இறந்து போய்விடுகின்றனர். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் வட ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 800 பேர் லிபியாவிலிருந்து கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகவும், எனினும் அவர்கள் அனைவருமே ஐரோப்பாவிற்குள் நுழைய முடியாமல், நடுக்கடலிலேயே பரிதவித்து இறந்து போயிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கடலைக் கடப்பவர்களில் 10% பேர் இவ்வாறு சாகடிக்கப்படுவதாக ஐ.நா. மன்றத்தின் புள்ளிவிவரக் கணக்கு காட்டுகிறது.

லிபியா மீது ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்துள்ள போரின் உடனடி விளைவாக, அந்நாட்டிலுள்ள வறிய உழைப்பாளர்களான கறுப்பின மக்கள் இனவெறி தாக்குதலாலும், வேலையின்மையாலும் தமது வாழ்வை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையின்மையின் பலன்களை நக்கிப் பருகப் போட்டி போடும் ஐரோப்பிய நாடுகள், அதன் உடன் விளைவாக நிகழும் இவ்வகதிகளின் வெளியேற்றத்திற்குப் பொறுப்பேற்பதில்லை. ஐரோப்பாவின் கொழுத்த பணக்கார நாடுகள் அனைத்தும் அகதிகளை உள்ளே நுழைய விடாமல் தமது கதவை இழுத்து அறைந்து சாத்துகின்றன.

லிபியாவிலிருந்து வெளியேறும் அகதிகள் இத்தாலியின் லம்பேடுஸா வழியாகவும், பிரான்சின் காலாஸ் நகரம் வழியாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைகிறார்கள். இப்பயணத்தின்போது இறந்து போகாமல் தப்பும் “அதிருஷ்டக் கட்டைகள்” அகதிகளாக காலாஸ் நகரின் எல்லையில் கடும் குளிரில் தத்தளிக்கின்றனர். எந்த அடிப்படை வசதியுமற்ற வெட்டவெளி நரகமான இம்முகாமிற்கு “ஆப்பிரிக்க வீடு” என்று நயமாகப் பெயர் சூட்டியுள்ளது, ஐரோப்பிய ‘நாகரிக’ச் சமூகம்.
அகதிகளைக் கையாளும் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரான்சும் இத்தாலியும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதால், அகதிகளைச் சித்திரவதை சேது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு விரட்டிவிடும் வேலையைச் சேகின்றன, இந்நாட்டு அரசுப் படைகள்.

தினசரி ‘ரெடு’கள் நடத்துவது, குளிர் காயும் போர்வைகளிலும், சமைத்த உணவுகளிலும் தண்ணீரை ஊற்றி வீணாக்குவது, கைது சேது எல்லையில் கொண்டு போ விட்டுவிடுவதன் மூலம் முகாமிற்கு மீண்டும் நடக்க விடுவது – என்பன இச்சித்திரவதைகளில் சில.

“ஐரோப்பா என்றாலே மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படும் என்று நான் நினைத்தது பொ. பிரிட்டனும், பிரான்சும் லிபியா மீது போட்ட குண்டுகளால்தான் நாங்கள் வெளியேறினோம். பிறகு, ஏன் எங்களை இவ்வளவு கொடூரமாக நடத்துகிறார்கள்?” என்று கேட்கிறாள், 8 வயது சிறுமியான டெரெபா கிரோவ். “லிபியாவில் வாழ்வது விருப்பமானதாக இல்லையெனினும், வாழ்க்கை என்ற ஒன்றாவது அங்கு இருந்தது. ஆனால், போர் தொடங்கியவுடன் லிபியக் கொடுமையிலிருந்து தப்பி ஐரோப்பியக் கொடுமையில் மாட்டிக் கொண்டோம்” என்கிறார், 17 வயதான சேனே.

மத்தியத்தரைக் கடலில் பரிதவித்து மாண்டுபோன 63 பேரின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது என்கிறார், அகதிகளைக் கையாளும் ஐ.நா. நிறுவனத்தின் சேதித் தொடர்பாளரான லரா போல்டிரினி. மாண்டுபோன அகதிகளுடன் கடைசி நிமிடங்களில் தொடர்பு கொண்டவரும், ரோம் நகரில் அகதிகள் உரிமைக்கான அமைப்பை நடத்தி வருபவருமான பாதிரியார் மோசஸ் சேரா, குழந்தைகளையும் பெண்களையும் கொன்ற இக்கிரிமினல் சேயல் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்கிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உன்னதத்திற்கு உதாரணமாகக் காட்டப்படுகின்றன, மேற்கு ஐரோப்பிய நாடுகள். மனித நாகரிகமும், மனிதாபிமானமும், மனித உரிமைகளும் உயிரினும் மேலாக இந்நாடுகளில் மதிக்கப்படுவதாக பரவலானதொரு மூடநம்பிக்கை உள்ளது. ஆனால், இந்தப் பிரமைகளை உடைத்தெறிகின்ற ரத்தமும் சதையுமான உண்மைகளை வட ஆப்பிரக்க நாடுகளிலிருந்து வெளியேறியுள்ள அகதிகளின் கதைகள் சோல்லுகின்றன. ஜனநாயகத்தை காப்பது, மக்களைக் காப்பது என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதையும் இப்படுகொலைகள் காட்டுகின்றன. லிபியா மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வைத்துள்ள பெயர் – “விடியலுக்கான நீண்ட பயணம்” (ஆபரேசன் ஒடிசி டான்). விடியலுக்கான நீண்ட பயணத்தின் முடிவில் லிபியாவிலிருந்து கிளம்பிய அகதிகள் சந்தித்ததோ இன்னொரு நரகம். அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு நரகமே அது!

நன்றி  :  புதியஜனநாயகம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை அரசிற்கும் கூட்டமைபிற்கும் இடையே நாளை பேச்சுவார்த்தை

Comments 8

  1. நிர்மலன் says:
    15 years ago

    பிரான்சினதும் இத்தாலியினதும் மிக ஈனத்தமான செயல். லிபியா கனியவளக்கொள்ளைக்கு லிபியாவில் உள்நாட்டு போரை தூண்டிவிட்டு அதனால் அகதியானவர்களை பட்டினியால் கொல்வது அரகத்தனமே.ஐநா சபைக்கு உடனடியாக இவ்விடயத்தை எடுத்துச்செல்லாது
    ரசியா சீனா என வீட்டோ அதிகாரத்தை வைத்திருப்பவர்களும் ஈரான் கியூபா வெனிசுலா ஆட்சியாளர்களும் என்னதான் செய்கிறார்கள்!

    • kosalan says:
      15 years ago

      சீனா என்பது ஏகாதிபத்தியமாக வளரும் இன்னொரு நாடு. ஈரான் ஒரு ஜனநாயக நாடு கூட இல்ல. கியூபா தன்னைப் பாதுகாக்க முடியாமல் மரணிக்கும் நிலையில் உள்ளது. நிர்மலன், ஒருநாட்டுக்கு எதிராக இன்னொரு நாட்டை நிறுத்தும் அதிகார விளையாட்டை விட்டுவிட்டு. மக்கள் கருத்தைக் கேளுங்கள் அவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உலக அரசியல் என்ன சூரிய மண்டல அரசியல் கூடப் புரியும்.

      • நிர்மலன் says:
        15 years ago

        நீங்கள் சொல்லும் மக்கள்தான் ஐனநாயக நாடுகளில் பெரும்பாலான வாக்குத் தெரிவுமூலம் அரசுகளை தேர்ந்தெடுக்கின்றனர்.இந்த யதார்தத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்நிலையில் நீங்கள் சொற்ப சதவீத மக்களையா “மக்கள்” என வரையறை செய்கிறீர்கள். இவர்களது உணர்வுகளை வைத்தா உலக அரசியலை புரியவைக்கப் போகிறீர்களா! மேதினத்திற்கும் ஜீ-8 மாநாட்டு வேளைகளிலும் உணர்சிவசப்படுவதோடு அவர்களின் உணர்வு வடிந்துவிடும். அதிலும் பெரும்பாலானவர்கள் வேலை செய்யும் வலுவிருந்தும் சமூக கொடுப்பனவில் வாழ்பவர்கள். இந்த ஆண்டிகளா கூடி மடம் கட்ட போகிறார்கள்! .பெரும்பாலான மக்களின் தெரிவுதான் இன்றைய அரசுகள். இந்த நடைமுறை யதார்தத்தை முதலில் புரிய முற்படுங்கள் பிறகு உலக அரசியல் சூரியமண்டல ஆராய்ச்சியை பார்க்கலாம். “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத கூட்டம் வானமேறி வைகுண்டம்” போகப்போகிறீர்களா!

        • Bharathi says:
          15 years ago

          நிர்மலன்
          எத்தனை வருடமாக பல முட்டாள் தனத்துள் இருக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு சாம்பிள். பிருதானியாவை எடுங்கள் 70 வீதமானவர்கள் வாக்களித்தார்கள். 40 வீதம் வரை எதிர்க்கட்சிகளுக்கு. ஆக ஆளும் கட்சி 40 வீதமானவர்கள் மட்டும் தான் ஆட்சிசெய்யும் கட்சிக்கு வாக்கு கொடுத்தர்கள். அதுவும் இந்த சிலரை தவிர வேறு வழி இல்லாமல். ஆட்சி சிறுபான்மை ஆட்சி.

      • THAMIL MARAN says:
        15 years ago

        கோசலையின் மைந்தன் இராமனை புத்தரின் அவதாரம் என்பாரும் உளர் என்னைப் புத்தனாக்கினீர் தலைவா?

  2. Pingback: Indli.com
  3. நிர்மலன் says:
    15 years ago

    //எத்தனை வருடமாக பல முட்டாள் தனத்துள் இருக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு சாம்பிள். பிருதானியாவை எடுங்கள் 70 வீதமானவர்கள் வாக்களித்தார்கள். 40 வீதம் வரை எதிர்க்கட்சிகளுக்கு. ஆக ஆளும் கட்சி 40 வீதமானவர்கள் மட்டும் தான் ஆட்சிசெய்யும் கட்சிக்கு வாக்கு கொடுத்தர்கள். அதுவும் இந்த சிலரை தவிர வேறு வழி இல்லாமல். ஆட்சி சிறுபான்மை ஆட்சி.
    //
    40+40= 70. நீங்கள் ரொம்பத்தான் அறிவாளி. எதிர்கட்சி ஆளும் கட்சியையே எதிர்கிறதே தவிர அரசெனும் கட்டமைப்பையல்ல. இன்னும் தெளிவாக சொன்னால். எதிர்கட்சி அடுத்த முறை ஆட்சியை பிடிக்க துடிக்குது. அரசெனும் கட்டமைப்பு அப்படியேதானிருக்கும்.

  4. Kumar says:
    15 years ago

    கடாபி என்கின்ற மனநோய் பிடித்த சா்வாதிகாரி பல வருடங்களாக செய்து வந்தது என்னவென்றால் வறுமையில் வாடும் நாடுகளின் கறுப்பின மக்கள் லிபியாவை நோக்கி வேலை தேடி வருகின்றபோது அவா்களுக்கு படகுகளை வழங்கி இத்தாலியை நோக்கி செல்வதற்கு உடந்தையாக இருந்தார், இதன் காரணம் இத்தாலி தனது நாட்டை(லிபியாவை) காலனித்துவ ஆட்சியில் சீரளித்ததற்கு மிகப்பெரிய தொகையை நஸ்டஈடாக கேட்டிருந்தார் ஆனால் இத்தாலி அந்தளவு தொகையை வழங்காவிடினும் ஓரளவையேனும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு அகதிகள் வருவதை நிறுத்தும்படி ஒப்பந்தம் ஒன்றை இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்பு செய்திருந்தார்கள். இப்போது நிலமை வேறுவிதமாக போவதை உணா்ந்த கடாபி மறுபடியும் அகதிகளை இறக்கிவிட்டு நிலைமையை திசை திருப்ப முயல்வதாகவே உணரப்படுகின்றது.

    அகதிகளை வைத்து பராமரிக்கும் நிலையில் இத்தாலி போன்ற நாடுகள் இல்லை என்பதே இங்கு நகைப்பிற்குரிய உண்மை,அத்தோடு உலகின் 8 வழா்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது இன்னும் அதிசயமான விடயம்.
     இத்தாலியா்கள் இன்றும் வேலைதேடி வேறுநாடுகளிற்கு போவதை யாருமே அறியமாட்டார்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...