மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன்.
மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக குறிப்பிட்டுள்ளன. வேடர்களை இயக்கருடன் தொடர்பு படுத்தியும் இயக்கர்களை திமிலர்களுடன் தொடர்பு படுத்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் என அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை குவேனி வம்சத்துடன் தொடர்பு படுத்தி நோக்கியிருப்பதுடன், கி.மு. 500 ஆண்டளவில் இவர்கள் மட்டக்களப்பில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. மட்டக்களப்பில் வாழ்ந்த வேடர்;, புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர் எனவம் கூறப்படுகிறது.
கலாநிதி சி. மௌனகுரு அவர்கள்: மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் பிற தகவல்களையும் கொண்டு வேடர்களை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகளாக தக்க ஆதாரங்களுடன் கூறியுள்ளார். அத்துடன் தற்காலத்தில் மட்டக்களப்பில் வேடர்கள் வாழ்கிறார்கள் என்ற கருத்தை மௌனகுரு அவர்கள் மட்டுமே உணர்த்தியிருக்கிறார். ஆனால் வேடர்கள் எப்போதிருந்து இங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. தற்கால களத்ததகவல்கள் மௌனகுரு அவர்களின் கருத்துக்களை மேலும் சான்றுபடுத்தக் கூடியதாக அமைகிறது என்பதனைக் கூறியாக வேண்டும். மட்டக்களப்பு வேடர்கள் மற்றும் அவர்களுடைய தெய்வ-வணக்க முறைகள் குறித்த தகவல்கள் அடுத்த கட்டுரையில் விபரிக்கப்படும். இக்கட்டுரையில் வரலாற்று நூல்கள் விபரித்துள்ள விபரங்கள் தொகுத்து முன்வைக்கப்படுகிறது.
கலாநிதி சி. மௌனகுரு அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினரைக் குறிப்பிடுகிறார். ஆயினும் வேடர்கள் பற்றிய விபரங்களையே விபரித்துள்ளார். அவர், “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்”(1998) எனும் ஆய்வு நூலில், மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள் குறித்து, “…சுருக்கமான வரலாற்றிலிருந்தும், கிடைக்கும் சான்றுகளிலிருந்தும் மட்டக்களப்பில் ஆரம்பத்தில் பூர்விகக் குடிகள் இருந்தனரென்று…”(பக்.86)ம் “மட்டக்களப்பு பகுதியிலே குடியேற்றங்கள் ஏற்பட முன்னர் இங்கு சில சாதியினர் வாழ்ந்தனர் என்பது கர்ண பரம்பரைக் கதைகளாலும், மட்டக்களப்பின் தெய்வ,வணக்க முறைகளாலும் அறிய முடிகிறது”(பக்.100) எனவும் “…இப்படி வாழ்ந்தோர் வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினராக இருக்கலாம்”. எனவும் “இவர்கள் தமக்கென சில தெய்வங்களையும் வணக்கமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை இன்றும் மட்டக்களப்புப் பகுதியில் வாழும் வேடர், வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினரிடம் காணப்படுகின்ற தெய்வங்களையும் வணக்க முறைகளையும் கொண்டு அறிய முடிகிறது” எனவும் குறிப்பிடுகிறார். இவர்களை “புராதான குலக்குழு”வாக அவர் இனங்காட்டுகிறார்.
மேலும் “வேடருக்கு குமாரர் பிரதான தெய்வமாகவும்” , “வம்சாவழியாக வந்த தெய்வமாகவும்”(பக்.111) குறிப்பிடுகிறார். வேடர் மரபில் வந்தோரால் அதாவது வேட வெள்ளாளரால் கடைப்பிடிக்கப்படும் குமார தெய்வத்தினை மையமாகக் கொண்ட பல புராதன தெய்வ – வணக்கமுறைகளை கள ஆய்வுத் தகவல்கள் மூலம் (கள ஆய்வு தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்டமைந்தது. விபரம் (பக்.110-119)) விபரித்து, அது புராதான வாழ்க்கை முறையைக் காட்டுகிற முறையினையும் விபரித்துள்ளார். “இச்சடங்கு முறைகள் அவர்களின் முன்னோர்களின் புராதான வாழ்க்கை முறையின் நினைவுகளாகும். பூச்சி பிடித்தல், தேனி கொட்டுதல், யானை பிடித்தல் ஆகிய சடங்கு முறைகளில் அவர்களின் தொழில் சார்ந்த கிரியைகளையும், ஏனையவற்றில் நோய்தீர்க்க ஏனைய தெய்வங்களை வேண்டும் கிரியைகளையும் காணுகிறோம்” (பக.;118) என அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் “இறந்த முன்னோரை வணங்கும் வழக்கம்(உத்தியாக்கள்) இவர்களிடம் இருப்பதும் இவர்களின் புராதானத் தன்மைக்கு உதாரணமாகும்.”(பக்.100) எனவும் , மட்-அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் வேடர்களே முன்பு வேல் வைத்து வணங்கினர் என்ற கதையும், கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர், மண்டூர்க் கந்தசாமி ஆகிய கோயில்கள் முன்பு வேல் வைத்து வேடர்களால் வணங்கப்பட்ட கோயில்கள் என்ற கர்ணபரம்பரைக் கதையும் ஆரம்பத்தில் இவ்வணக்க முறைகளே மட்டக்களப்பில் இருந்தன என்பதை மேலும் வலியுறுத்துகின்றன”;(பக்.101) எனவும் மௌனகுரு அவர்கள்; குறிப்பிடுகிறார்.
எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்களும் மட்டக்களப்பில் பூர்விக குடிகளாக வேடர்கள் வாழ்ந்தனர் எனக் குறிப்பிடுவதுடன், “மட்டக்களப்பு ஆதிக்குடிகளின் இராச்சியம்(வேடர்களின் இராச்சியம்)” என வரோஸ் குறிப்பிடுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.(வெல்லவூர்க்கோபால்pன் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம். பக்.49) மேலும், எஸ்.ஓ. கனகரெத்தினம் அவர்கள் குறிப்பிடும் மட்டக்களப்பிலுள்ள சாதிகள் 17 இல் வேடுவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
வி.சி.கந்கையா அவர்கள் “மட்டக்களப்புத் தமிழகம்”(1964) என்னும் நூலில், “விஜயன் கி.மு. 540இல், பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வந்த தமிழ் மக்களைக் ‘கதிராகல’ என்னும் மலைச்சாரலிற் குடியேற்றினான் என்றும், இப்பகுதி அக்காலத்து வேடராற் குடியிருக்கப் பெற்றதென்றும் சிங்கள சரித்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றுட் குறிப்பிடப்பெற்ற ‘கதிராகல’ மலைப்பகுதி ஏறக்குறைய 1200 அடி உயரமுள்ள குன்றுகளாக இத் தமிழகத்திலே மட்டுநகரின் தென்மேல் திசையில் 17 மைல் தூரத்தே இன்றும் உள்ளது”(பக்.6-7) எனக்குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பூர்வ சரித்தம் (2005) , சிறிகுலசேனனுடைய புத்திரன் கூத்திகன் மட்டக்களப்பில் குடியேற்றங்களை முதன் முதலில் உருவாக்கியவனாகக் குறிப்பிடுவதுடன், கூத்திகன் பின், மட்டக்களப்பை இரசதானியாக்கி அரசியற்றிய சேனனுடைய வமிசம் அருகிப்போக, நாகர் இயக்கர் என்னும் இரு குலத்தவர்கள் மேலெழும்பி, காலிங்கர், சிங்கர், வங்கர் என்னும் முக்குலத்தவரையும் அடக்கி, விண்டு அணையை இரசதானமாக்கி முப்பது வருச காலமாகக் கொடுங்கோல் செலுத்தினன் என (பக்13) குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் அனுரதன்புரியை அரசு செய்தவன் சோரநாகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இச்சோரநாகன் இயக்கர் துணைப்பிரியன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விபரிப்புக்களிலிருந்து, இங்கு “இரு குலத்தவர்கள் மேலெழும்பி” எனும் வரியானது அவர்கள் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினையே குறிப்பாய் உணர்த்துகிறது.
மேலும், மட்டக்களப்பிலுள்ள முற்குலத்தவரில் சில நிதியத் தலைவர்கள் வேண்டுகோளின் படி இயக்கர், நாகரை அகற்ற கலிங்க தேசத்து மதிவரகாகுணன் புத்திரன் ரணாசலன்(ரணாசல்-ரஞ்சன்-நிரஞ்சன்) சைனிய வீரர் முந்நூறுடன் இங்கு வந்தான் எனவும், இவன் நாகரைச் சிநேகம் பிடித்து, இயக்கர் என்னும் திமிலரை வாளுக்கிரையாக்கி, விண்டு அணையிலுள்ள இராசமாளிகையை உடைத்து, இயக்கர் அரசனையும் அவன் பிரதானிகளையும் வெட்டிக் கொன்று, மேற்கு வடக்கு மகாவலி கங்கையால் இயக்கர் குலத்திலுள்ள யாவரையும் துரத்தி எல்லைக்கல்லும் நாட்டி..”(பக்.14) எனவருங் குறிப்புக்கள் இயக்கரை திமிலராகக் காட்டுகிறது. பின்னால் வரும் ரணாசலன் கூற்றானது, “நான் காலிங்கதேசம் போய்க் குடிகள் கொண்டு வந்து இயக்கரிருந்த இடமெல்லாம் குடியேற்ற வேண்டும்” என வருகிறது. இதிலிருந்து இயக்கர்கள் பெரும் பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது.
இதேவேளை, ரணாசலன் அனுரதன்புரியை அரசு செய்த சோரநாகனுடன் இணைந்து, “இலங்கையை பன்னிரெண்டு பாகமாய்ப் பிரித்து, எட்டுப்பங்கை விசயதுவீபத்தோடு சேர்த்து மண்ணாறு, மணற்றிடரிரண்டையும் குருகுல நாகருக்கீந்து, தெட்சனாபதியை இயக்கர் குலத்திமிலருக்கீந்து, மட்டக்களப்பை ரணாசலனேற்றுக் கொண்டு…” எனவரும் செய்திகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இதன் மூலம் பின்னாளில் இயக்கர் வாழிடம் தெட்சனாபதியாக இருந்தது எனக் காட்டப்படுகிறது.
இதே வேளை இந்நூலிலுள்ள குலவிருதக் கல்வெட்டில் “நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு” என்ற குறிப்பும், சாதித்தெய்வக் கல்வெட்டில் “வேடருக்கு கன்னிகளாம்” (மௌனகுரு அவர்கள் குமார தெய்வச் சடங்கில் இணைந்துள்ள சடங்கில் கன்னிமார் சடங்கு நிகழ்வதனையும் குறிப்பிடுகிறார்.பக்.118) என்ற குறிப்பும் (பக்77) காணப்படுகிற போதும் சாதிகள் பற்றிய குறிப்பில், வேடர்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. அதாவது சிறைக்குடிகள்-ஊழியம் செய்யும் சாதிகளில் வேடர்கள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் அவர்கள் தனித்துவமான சாதிகளாக இனங்காட்டப்படுவதாக தெரிகிறது.
வெல்லவூர்க்கோபால் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு-ஒரு அறிமுகம் (2005) எனும் நூலில், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் குறிப்பிடுவதுடன், அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். (பக்.27,45) இலங்கைக்கு புத்தரின் முதலாவது வருகை என மகாவம்சம் கூறும் காலத்துடன் தொடர்பு படுத்தியே இக்காலக்கணிப்பை அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “இயக்கர் குடியிருப்புக்கள் நாடு முழுக்கப் பரவியிருந்தமையும் மட்டக்களப்புப் பிரதேசத்தே மாணிக்க கங்கை(கதிர்காமம்) மற்றும் விந்தனைப் பகுதிகளில் அவர்கள் பரவலாக வாழந்துள்ளமையும் தெரிகின்றது”(பக்.23) எனவும், நாகர்களின் இருக்கைகளாக “…மட்டக்களப்புப் பிரதேசத்தே நாகர்பொக்கணை(மன்னம்பிட்டி) , நாகர்முனை(திருக்கோவில்) , நாகன்சாலை(மண்டூர்) , சூரியத்துறை(மட்டக்களப்புப் பெருந்துறை) என்பனவும் குறிப்பிடப்படுகின்றன”(பக்.23) எனவும் வெல்லவூர்க்கோபால் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இயக்கர், நாகர் குழுநிலை ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்(பக்.45) எனவும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் ஈழம் முழுவதிலும் வாழ்ந்தவர்களாகவே இவ்வாசிரியர் குறிப்பிடுகிறார்.
இலங்கை வரலாற்றில், கி.மு.454 தொடக்கம் கி.மு.437 வரையான காலப்பகுதி சரியான தகவல்கள் குறிப்பிடப்படாத போதும், உள்நாட்டுக் கலகக் காலம் என வரலாற்றில் சொல்லப்பட்டாலும் மீண்டும் இயக்கர், நாகர் வலிமை பெற்ற காலமாக கருதமுடியும் எனவும் வெல்லவூர்க்கோபால் குறிப்பிட்டுள்ளார்.
வெல்லவூர்க்கோபால் அவர்கள் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதனையம் அதன் உன்மைத்தன்மை பற்றியும் அறிய முடியவில்லை. ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை.
க.த.செல்வரசகோபல் அவர்கள் “மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டை வரலாற்று அடிச்சுவடுகள்”(2005) எனும் நூலின் முதன்மைப் பதிப்பாசிரியன் உரையில், “ விந்தனை வேடரும் தம்பானையில் தாம் புலம்பெயர்ந்த தம்பன்னை எனும் இடத்தின் பெயரை மறந்து போகாமல் தாம் வாழும் இடத்திற்கு இட்டுக் கொண்ட தம்பானை வேடரும், புலிந்தரும், திமிலரும், கழுவந்தரும் முக்கிய பண்டை மட்டக்களப்பின் குடிகளராக வாழ்ந்தனர்”(இணையப்பிரதி-பக்.15) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேடர்கள் பற்றி விபரிக்கையில், “விஜயனின் இன அழிப்புக்கு அஞ்சிய இயக்கர்கள் எனும் பண்டைய தேசிய இனத்தவர்கள்”(இணையப்பிரதி-பக்.61) , “மகியங்கனையை அடுத்த விந்தனை எனும் இடத்திலும் மட்டக்களப்பு வாழைச்சேனையை அண்மித்த கழுவன்கேணியிலும் அம்பாரையை அடுத்த தம்பானை எனும் இடத்திலும் வாழ்ந்து வந்தனர்” , எனவும் “இவர்களை விட பெருந் தொகையானோர் இத்திசை வழியே கூட்டமாகச் சென்று மட்டக்களப்பைச் சார்ந்த சமவெளியில் தங்கலாயினர் (இணையப்பிரதி பக்.62) , எனவும் விபரிக்கப்படுகிறது.
தொடர்ந்து இவ்வாறு புலம்பெயர்ந்து குடியேறியவர்கள் பற்றிய விபரிப்பில், “விந்தனை தம்பான எனும் இடங்களிற் சென்றவர்கள் இருப்பிடம் மலைக் குன்றுப் பகுதிகளாக இருந்தபடியாலும் தமது சொந்த நாட்டில் அரச உத்தியோகங்களிலும் படைகளிலும் பணிபுரிந்தவர்களாதலால் தாம் முன்னர் வாழ்ந்த இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத நிலையை அடைந்தனர். நாளடைவில் தம்மைச் சுற்றியுள்ள காட்டு வளத்திலேயே தமது வாழ்க்கையை நடத்தத் தொடங்கினர், அதாவது வேட்டை ஆடுவதைச் சீவனோபாயத் தொழிலாகக் கொள்ளலாயினர். இதனால் வேடர் என்ற காரணப் பெயரையும் பெற்றனர்.”(இணையப்பிரதி-பக்63) எனக் விபரிக்கப்பட்டுள்ளது.
மேலும் “1911ம் ஆண்டு குடிசன மதிப்புக் கணிப்பின்படி வேடர்களின் தொகை முழு இலங்கையிலும் 5312 பேர் மட்டுமே. மற்றக் குலங்களான திமிலர், புலியர், முக்கியர் எனப்படுவோர் தமது அடையாளங்களை மறந்து தமிழராகிவிட்டனர். அந்தக் காலகட்டத்தில், வேடக் குடியிருப்புகள் மகியங்கனை(விந்தனை) , தம்பானை, கழுவன்கேணி எனும் இடங்களில் மட்டும் இருந்தன. நாளடைவில் கழுவங்கேணி வேடர்களும் தமிழர் என்ற என்ற தேசிய அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர்.” (இணையப்பிரதி-பக்.17) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பின் தொல்குடிகளாக இன்றும் வாழ்ந்து வரும் வேடர்களின் வரலாற்று மூலம் தெளிவாக கண்டறியப்படாத நிலையிலும் ஆரியக் குடியேற்றத்தினால் துரத்தப்பட்ட இயக்கர்கள் (இயக்கர்களை இராவணனுடன் தொடர்பு படுத்தியும் நோக்கப்படுகிறது) பற்றிய தெளிவு ஏற்படுத்தப்படாத நிலையிலும் இவ்வாறு ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க இயலாதது என்றே கருதலாம்.
இவரும் பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ள போதும் , குறிப்பிடும் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கும் முடிவுகளுக்கும் ஆதாரங்கள் சரியான முறையில் காட்டப்பவில்லை. பெருமளவு ஊக முறையிலேயே முடிவுகள் காட்டப்படுகின்றன.
வெல்லவூர்க்கோபால் அவர்கள், மட்டக்களப்பின் பூர்விக் குடிகளாக இயக்கர், நாகரைக் (வேடர்) குறிப்பிடுவதுடன் அவர்கள் காலத்தினை கி.மு.500க்கு முற்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இவ்விளக்கங்களினால், மட்டக்களப்பின் பூர்விக மக்கள் வேடர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகிறது. ஆனால் பின்வரும் விடயங்கள் தொடர்ந்தும் சரிதிட்டமாக விளக்க முடியாத வினாக்களாக எஞ்சியிருப்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மௌனகுரு அவர்களின் “குமார சடங்கினைச் செய்பவர்கள் வேடர் மரபில் வந்தோராவர்” என்ற குறிப்பும்(பக்.110) “வேட வெள்ளாளரிடம் நடைபெறும் இச்சடங்கு முறைகள்”(பக்.118) என்ற குறிப்பும், இது குறித்த கள ஆய்வும் தளவாயில் உள்ள பிரதான கோயிலை மையமாகக் கொண்ட அமைந்தது என்பதுவும் வேடர் மரபில் வந்த ஆனால் தற்போது அச்சமூகநிலையில் இருந்து வேறுபட்ட நிலையில் வாழுகின்ற சமூகத்தினையே அவர் குறிப்பிடுகிறார் என்பதனைக் காட்டுகிறது. அதாவது வேடர் மரபில் வந்தோர் அல்லது வேட வெள்ளாளர் பற்றியே அவர் குறிப்பிடுகிறார். மௌனகுரு அவர்கள், “ சில இடங்களில் முக்குவரிடையே வேட வேளாளர் என்ற ஒரு குடியும் காணப்படுகிறது. இது வேடரோடு முக்குவரிற் சிலர் கலந்தமையால் ஏற்பட்ட குடி என்று கூறலாம்”(பக்.93)எனவும் குறிப்பிடுகிறார்.
அப்படியாயின் இன்று வேடுவர்களாக அறியப்படுகின்ற சமூகங்களில் காணப்படும் தெய்வ-வணக்க முறைகள் எவை? அவற்றில் வெளிக்காட்டப்படும் அம்சங்கள் அவர்களின் வராலற்றினை அறிய உதவுகிறதா? என்பவை முக்கியமான வினாக்களாகும். இது குறித்து தற்போதைக்குப் போதிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
அடுத்து தொல்பொருள் சான்றுகள் மூலம் “வேடர்கள் மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள்” என்பதையும் நிருபிக்க முடியாமலும் உள்ளது. வேடர்கள் மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசங்களில்தான் வாழ்ந்திருக்க முடியும் என்ற நிலையில், அப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
வேடர்களுக்கும், இலங்கையின் பூர்விகக் குடிகளான இயக்கர் மற்றும் நாகருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் மற்றொரு வினாவாகும். அதே வேளை, இவ் வேடர்களுக்கும் இராவணன் காலத்து அரக்கர்களுக்கும், புராதான ஈமத்தாழிகள் மூலம் அறியப்பட்ட தொல்குடியினருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதுவும் மற்றொரு வினாவாகும்.
அடுத்து குவேனி குலத்திற்கும் மட்டக்களப்பின் தொல்குடிகளான வேடர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் ஆராயப்படல் வேண்டும்.
அடுத்து மட்டக்களப்பின் வரலாற்றில் வேடர்களையடுத்து ஆரம்பகால குடியேற்றவாசிகளாக கருதப்படும் திமிலருக்கும் வேடருக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுவும் விளக்கப்படுத்தப்படவேண்டும்.
முன்னைய பகுதிகள் :
மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்ட முறையும் சிக்கல்களும் : விஜய்(1)
மட்டக்களப்பு வரலாறு : வராலாற்று மூலங்களும் வரலாற்றின் பருமட்டான வரைபும் : விஜய்(2)
இந்த மட்டக்களப்பு வரலாற்றைை ஆவணமாக்கினால் எமது தலைமுறைக்கு பயம் படும். அத்துடன் பேஸ் புக்கில் தமிழை கிளிக் பண்ணிய போது தமிழீழ பெண்படை என படங்களுன் பார்த்தேன் வேதனையடைந்தேன். கையில் துப்பாகி இருக்கும் மட்டும் தான் வீரா;கள் இன்று சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வயிறு வளர்க்க முடியாமல் திண்டாடும் பெண்களை மாவீரா; என புகழ்பாடும் ஆண்களால் வாழ்வு கொடுக்க முடியுமா? ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது .
Great. New Information including Professor Mounaguru.
கட்டுக்கதைகளை விடுத்து(ஆண்ட பரம்பரை ) விஞ்ஞான பூர்வமான ஆய்வுக்கு முன்னுரிமை வழங்கும் விஜய் பாராட்டுக்குரியவர்.பலரும் அறியாத செய்திகள் உள்ளனன.தொடர்ந்து எழுதுங்கள் விஜய்.
வாழ்த்துக்கள்.
first of all very sorry for writing this in english.
it’s a very interesting subject, as noted by dr sri,it’s important to let our future generation to know the facts of our past; hundreds years old (at least). i am from puliyanthivu. when i was 6/7 years old our back of the land was mostly a paddy field, reason we were at that time (before the 60tees) not that much civilisedd” to say the truth my mother’s parents were “kurukulathor”, i can remember this well because my mum’s father was a bit “sathikkaran” and always remind me about this cast, even though he was from point pedro (this is another story). mum’s mother was a kurukula lady. my father’s side also (paternal) kurukulam. if, you see from the lake side(where i was born) you can see the “THIMILAI THEEVU”. this place now include from saint anne church, airport puthur and so on… you got puthur bridge and paduwan karai bridge for the sake to argue !. Thirdly when i was in my early twenties i used to go to “banda master” for shinhala class, in one of his classes he told the “students” that batticaloa living people are the “pure poorviga” kudikal,Sinhalesee came from india and they are known as “vantheru kudikal” but in fact he was a full shihalease. i have to agree with mr velavurkopal that the points he raised in his study was acceptable. you know when in my teens i had the opportunity to roam the certain jungle areas with my dad up to polonaruwa. once he took us(whole family) by jeep to a particular place, very very deep in the mannampitty area, ie- right side of the main road when you come from batty where we ended in big “mattu patty” and a small hut. dad explained to us that these are the very original vedar. they spoke a little tamil but not shihala i can still remember the scene, almost half covered bodies. their only weapon some sort of long handled “koduva katthy” and their shepard’s long stick. dad further explained that those people were not known to the world and he, by accident stumbled on to their area. they were as usual not that clean. i presume my dad might have helped them with his charity mind although he was a jungle man by his profession in the irrigation department. later on after some time beginning of the “milk board” i have seen milk board trucks going for collection you might see the sign board for these area. you may ask why i am telling this story. to tell you, I have seen the real real and original verdar, not the verdar colonised by the shihala modernn governments”. i believe that these authors know whether these verders are black and white. they can write volumes of books to pursue their goals. if they want they can get into google and surf the eastern province the particular area that i have mention might have visited by s o v somanader from batty the famous photographer and journalist of our time and another englishman. you have to read the foot notes at google. you got bird’s eye view of all these areas. another point i came across when i was flying (i mean the googling), as soon as you pass valaichenai a famous place known to the “those fighters” and mass burial ground for their final rest. this place is known as “kudumpii malal”. these areas also might have been place for the poorvigakudikal. this malai connects the rugam area unnichei, monaragala then amparai area where the vijaiyan and his 500 hooligan friends landed. and the story we studied taught us the shinhala race was started by the arrival of vijayan and the poorviga lady gooveni. this part of the story also true from the above papers. most of the submissionss and the so called books written from any proof at all. so why write a book(s) in the first place?. the proof and the evidence must be written with chiseled on the stone; then only it would provide the right information. and also i would like to alert the people who are interested in preserving our wonderful past must get in action to correct the informations in the google notes by the so called archaeological peoples and other amateur photographers must be stopped and put in perspective. if, not our tamil history would go, just like written on water. I think i have given you guys who are concerned and interested to dig deeper you would find the truth. ah!! i forgot to tell you a place where huge vessels made out of granite stones found by the then irrigation officials and kept quiet by them for the above reasons, twisted history like budda visited sri lanka (idiots). the place is somewhere between unnihchei tank and puluganavai tank areas. the huge stone pans and lids were used by the “sothyans” who built the unnihchei tank bund. they where strong and tall people, i heard from the people who have seen it and promised to take me there, unfortunately the person who related the story was shot and killed by the army as a suspect, but who worked with my father for a long time, a faithful guy. knock knock you will find it: but hurry up!!!.
anton jessenby
தமிழில் எழுதுகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் திமிலைத்தீவு மட்டக்களப்பு வராலற்றுடன் குறிப்பாக – திமிலருடன் – தொடர்பு படுத்தி நோக்கப்படுகிறது. திமிலர்கள் மீது முக்கவர் மேற்கொண்ட ‘விரட்டியடிப்பு’ குறித்து தற்போது வேறு தகவல்களை அறிய முடியாதுள்ளது. ஆனால் வராலற்றில் ஒரு முக்கியமான விடயம் என்பதனை உணரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தற்போதும் வேடர்கள்’ வாழ்கிறார்கள். மன்னம்பிட்டிக்கு அருகே “சீரவண’ எனுமிடத்தில் தனித்துவமான இடத்தில் வாழ்கிறார்கள். உள்ளே வேறு சில கிராமங்கிளலும் அவர்கள் வாழலாம் என்றே கருதுகிறேன். குடும்பிமலைக்கு அருகே முறுத்தானை, கானந்தனை, அக்குறானி எனுமிடங்களில் வேடர்கள் தற்போது வாழ்கிறார்கள். இவர்கள் தமிழ் பேசினாலும் வேடபாசையைத் தெரிந்துள்ளார்கள். இவர்கள் 100 வருட காலத்திற்குள்ளாக மகியங்கணைப் பகுதியிலிருந்து இங்கு வந்த சிங்கள தெரிந்த 3 வேடர் குடும்பங்களிலிருந்து விருத்தியடைந்தவர்கள். அவர்களின் தலைவர் பண்டய்யா. ஆனால் பதிய தலைமுறைக்கு தமிழ்தான தெரியும். மிக அண்மையில் மகியங்கணை பகுதி வாழ் வேடர்கள் இங்கு வந்து, இவர்களைச் சந்தித்து சென்றிருக்கிறார்கள். இதனை அரசாங்க அமைச்சர் (விமல் வீரவன்ச)ஏற்பாடு செய்திருக்கலாம் என கருதுகிறேன். முன்னர் 1985களில் சென்ற போது அவர்களின் நிலை ‘பாரம்பரிய சமூக நிலையினைக் (வீடுகள்-பொருளாதார முயற்சிகள்- பேச்சு தமிழ் மொழி) கொண்டு காணப்பட்டது. தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதனைத் தவிர வாகரை-பனிச்சங்கேணி-பால்சேனைப் பகுதிகளிலும் வேடர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்பாக முன்னர் உயர்பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது எனினும் அது வெளியிடப்படவில்லை. அத்தகவ்லகளை வெளிக்கொணர்வதில் அன்பர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார். இவர்கள் நீண்ட காலமாக(தெல்காலமா எனத் தெரியாது) இங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றே அறிய முடிகிறது.
இவ்வேடர்கள் ஒரு குறுகிய கால வரலாற்றை(100 வருடங்களுக்கள்ளாக)கொண்டவர்களாகவே தெரிகிறது. ஆனால் அவர்களிடம் கால அறிவு இன்மை (வருடம்-மாதம் பற்றிய பதிவு) ஒரு பிரச்சினையான விடயம். ஆனால் கட்டுரையில் பேசப்பட்டு வரும் வேடர்கள் மட்டக்களப்பில் தொல்காலத்தில் முக்குவுர்கள் குடியேற முன்பிருந்து வாழ்ந்து வரும் மக்கள் பற்றியதாகும். இவர்கள் காலம் சரியாக கணிப்பிட முடியாதுள்ள போதும் மிக நீண்டது என்றே தெரிகிறது.
புலுக்கனாவி, சோதயன் கட்டு எனுமிடங்கள் முக்கியமானவை. சோதயன் பற்றிய உங்கள் குறிப்பு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. லாவனி(இந்திய வராலாற்றிலும் இப்பயெர் இடம் பெறுகிறதோ!) எனுமிடம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இவ்விடம் முன்னர் வேடர்கள் வாழ்ந்த இடமாக பேசப்படுகிறது. லாவனி ஆறும் இங்கு இருக்கிறது. மேலும் பண்டய தொழில் நுட்பத்திற்குரிய மாதுறு ஓயா அணைக்கட்டின் சிதைவுகள் பற்றியும் மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை.
குடும்பிமலை மற்றும் அதனருகே உள்ள நெலுகல் மலை என்பன, பழைய குகைக் குடியிருப்புக்களாக இருந்திருக்காலம். முன்னர் 1985களில் நெலுகல் மலையில் குகையாகப் பாவிப்பதற்கான தடயங்களைக் கண்டிருக்கிறேன். நீர் வழிந்தோடுவதற்கான பொழிப்பு, எழுத்துப் பொறிப்பு – அது சித்திர வடிவில் அங்கு கண்டிருக்கிறேன். திரும்பவும் அவற்றை வராலற்று கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும்.
குடும்பிமலைப் பகுதியில் சில வருடங்களிற்கு முன்னர் புதையல் தோண்டியதாகவும் அ;ப்போது பாண்டிய அரசுடன் தொடர்பு படும் மீன் சின்னங்கள் கிடைத்ததாகவும் தகவல் கிடைத்தது. தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமலுள்ளது.
ஆனால் இதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் பௌத்த துறவிகள் புதையல் தோண்ட முற்பட்ட இடங்கள் சில பற்றியும் தகவல் கிடைக்கிறது. அதிலொருவிடத்தில் சிறிய மேட்டுப் பகுதியாகவும், கற்தூண்கள் வெளித்தெரியும் வண்ணம் காணக்கிடைத்தது. இது சிலவேளை தொல்பொருள் இடமாக அமையாலமோ தெரியாது. அங்கு நிலத்தடியில் அடியில் ஒரு கோயில் இருப்பதாகவும் அது சக்தி வாய்ந்தது எனவும் ஒரு ஐதிகக் கதை நிலவுகிறது. இவ்வாறான ஒரு இடத்தினை தங்கேஸ்வரி அவர்கள் கரடியானாறு பகுதியில் இனங்கண்டிருக்கிறார்.
இப்பகுதி பெருமளவு கண்டி இராச்சியத்துடன் தொர்பு பட்டதாக இருக்கலாம். மேலும் பாரியளவிலான ஆய்வுகள் தேவை.
மட்டக்களப்பிலிருந்து வடக்குப் பகுதிகளில் பரவலாக புராதான தெய்வ-வணக்கு முறைகள் முக்கியமாக குமார தெய்வமும் அதனோடிணைந்த தெய்வங்களும் மற்றும் சடங்கும் ( தெய்வம் சன்னதம் கொண்டு ஆடும் முறை) தற்போதும் நிலவுகிறது. ஆனால் அவற்றை கைவிடும் தன்மையும் இருக்கிறது. இது குறித்து தேடலை மேற்கொண்டுள்ளேன்.
ஆச்சரியத்தக்க விடயம், எதிர்பார்த்ததை விட பெருமளவு வேடர்கள் என தம்மை அழைக்கின்ற குடிகள் இங்கே வாழ்கிறார்கள் என்பதுவும் அவர்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தங்கள் பாரம்பரியங்களை தொடர்ந்து பேணுவதில் சிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பதுவுமே. தங்கள் பாரம்பரியங்களைப் பேணுவதில் தங்களை வேடர்கள் என அழைத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவதும் இல்லை போல் தெரிகிறது.
தேடல்கள் “கிணறு வெட்டப் பூதம் வெளிவந்த” கதையாக இருக்கிறது. எதை எழுதுவுது, எப்படி எழுதுவது, என்ன முடிவுகளிற்கு வருவது என்பது பாரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இது குறித்து பெற்றுள்ள தகவல்களை சரியான வழியில் கணித்து எழுதுவதற்கு காலமும் உதவியும் தேவைப்படுகிறது. விரைவில் ஒரு கட்டுரையில் அவற்றை தெரிவிப்பேன்.
விஜய்
தமிழில் எழுதுகிறேன்.
நீங்கள் குறிப்பிடும் திமிலைத்தீவு மட்டக்களப்பு வராலற்றுடன் குறிப்பாக – திமிலருடன் – தொடர்பு படுத்தி நோக்கப்படுகிறது. திமிலர்கள் மீது முக்கவர் மேற்கொண்ட ‘விரட்டியடிப்பு’ குறித்து தற்போது வேறு தகவல்களை அறிய முடியாதுள்ளது. ஆனால் வராலற்றில் ஒரு முக்கியமான விடயம் என்பதனை உணரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தற்போதும் வேடர்கள்’ வாழ்கிறார்கள். மன்னம்பிட்டிக்கு அருகே “சீரவண’ எனுமிடத்தில் தனித்துவமான இடத்தில் வாழ்கிறார்கள். உள்ளே வேறு சில கிராமங்கிளலும் அவர்கள் வாழலாம் என்றே கருதுகிறேன். குடும்பிமலைக்கு அருகே முறுத்தானைஇ கானந்தனைஇ அக்குறானி எனுமிடங்களில் வேடர்கள் தற்போது வாழ்கிறார்கள். இவர்கள் தமிழ் பேசினாலும் வேடபாசையைத் தெரிந்துள்ளார்கள். இவர்கள் 100 வருட காலத்திற்குள்ளாக மகியங்கணைப் பகுதியிலிருந்து இங்கு வந்த சிங்கள தெரிந்த 3 வேடர் குடும்பங்களிலிருந்து விருத்தியடைந்தவர்கள். அவர்களின் தலைவர் பண்டய்யா. ஆனால் பதிய தலைமுறைக்கு தமிழ்தான தெரியும். மிக அண்மையில் மகியங்கணை பகுதி வாழ் வேடர்கள் இங்கு வந்துஇ இவர்களைச் சந்தித்து சென்றிருக்கிறார்கள். இதனை அரசாங்க அமைச்சர் (விமல் வீரவன்ச)ஏற்பாடு செய்திருக்கலாம் என கருதுகிறேன். முன்னர் 1985களில் சென்ற போது அவர்களின் நிலை ‘பாரம்பரிய சமூக நிலையினைக் (வீடுகள்-பொருளாதார முயற்சிகள்- பேச்சு தமிழ் மொழி) கொண்டு காணப்பட்டது. தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதனைத் தவிர வாகரை-பனிச்சங்கேணி-பால்சேனைப் பகுதிகளிலும் வேடர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தொடர்பாக முன்னர் உயர்பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது எனினும் அது வெளியிடப்படவில்லை. அத்தகவ்லகளை வெளிக்கொணர்வதில் அன்பர் ஒருவர் முயற்சி எடுத்து வருகிறார். இவர்கள் நீண்ட காலமாக(தெல்காலமா எனத் தெரியாது) இங்கு வாழ்ந்து வருபவர்கள் என்றே அறிய முடிகிறது.
இவ்வேடர்கள் ஒரு குறுகிய கால வரலாற்றை(100 வருடங்களுக்கள்ளாக)கொண்டவர்களாகவே தெரிகிறது. ஆனால் அவர்களிடம் கால அறிவு இன்மை (வருடம்-மாதம் பற்றிய பதிவு) ஒரு பிரச்சினையான விடயம். ஆனால் கட்டுரையில் பேசப்பட்டு வரும் வேடர்கள் மட்டக்களப்பில் தொல்காலத்தில் முக்குவுர்கள் குடியேற முன்பிருந்து வாழ்ந்து வரும் மக்கள் பற்றியதாகும். இவர்கள் காலம் சரியாக கணிப்பிட முடியாதுள்ள போதும் மிக நீண்டது என்றே தெரிகிறது.
புலுக்கனாவிஇ சோதயன் கட்டு எனுமிடங்கள் முக்கியமானவை. சோதயன் பற்றிய உங்கள் குறிப்பு ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. லாவனி(இந்திய வராலாற்றிலும் இப்பயெர் இடம் பெறுகிறதோ!) எனுமிடம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இவ்விடம் முன்னர் வேடர்கள் வாழ்ந்த இடமாக பேசப்படுகிறது. லாவனி ஆறும் இங்கு இருக்கிறது. மேலும் பண்டய தொழில் நுட்பத்திற்குரிய மாதுறு ஓயா அணைக்கட்டின் சிதைவுகள் பற்றியும் மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை.
குடும்பிமலை மற்றும் அதனருகே உள்ள நெலுகல் மலை என்பனஇ பழைய குகைக் குடியிருப்புக்களாக இருந்திருக்காலம். முன்னர் 1985களில் நெலுகல் மலையில் குகையாகப் பாவிப்பதற்கான தடயங்களைக் கண்டிருக்கிறேன். நீர் வழிந்தோடுவதற்கான பொழிப்புஇ எழுத்துப் பொறிப்பு – அது சித்திர வடிவில் அங்கு கண்டிருக்கிறேன். திரும்பவும் அவற்றை வராலற்று கண்ணோட்டத்துடன் ஆராய வேண்டும்.
குடும்பிமலைப் பகுதியில் சில வருடங்களிற்கு முன்னர் புதையல் தோண்டியதாகவும் அ;ப்போது பாண்டிய அரசுடன் தொடர்பு படும் மீன் சின்னங்கள் கிடைத்ததாகவும் தகவல் கிடைத்தது. தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமலுள்ளது.
ஆனால் இதற்குப் பல வருடங்களுக்கு முன்னர் பௌத்த துறவிகள் புதையல் தோண்ட முற்பட்ட இடங்கள் சில பற்றியும் தகவல் கிடைக்கிறது. அதிலொருவிடத்தில் சிறிய மேட்டுப் பகுதியாகவும்இ கற்தூண்கள் வெளித்தெரியும் வண்ணம் காணக்கிடைத்தது. இது சிலவேளை தொல்பொருள் இடமாக அமையாலமோ தெரியாது. அங்கு நிலத்தடியில் அடியில் ஒரு கோயில் இருப்பதாகவும் அது சக்தி வாய்ந்தது எனவும் ஒரு ஐதிகக் கதை நிலவுகிறது. இவ்வாறான ஒரு இடத்தினை தங்கேஸ்வரி அவர்கள் கரடியானாறு பகுதியில் இனங்கண்டிருக்கிறார்.
இப்பகுதி பெருமளவு கண்டி இராச்சியத்துடன் தொர்பு பட்டதாக இருக்கலாம். மேலும் பாரியளவிலான ஆய்வுகள் தேவை.
மட்டக்களப்பிலிருந்து வடக்குப் பகுதிகளில் பரவலாக புராதான தெய்வ-வணக்கு முறைகள் முக்கியமாக குமார தெய்வமும் அதனோடிணைந்த தெய்வங்களும் மற்றும் சடங்கும் ( தெய்வம் சன்னதம் கொண்டு ஆடும் முறை) தற்போதும் நிலவுகிறது. ஆனால் அவற்றை கைவிடும் தன்மையும் இருக்கிறது. இது குறித்து தேடலை மேற்கொண்டுள்ளேன்.
ஆச்சரியத்தக்க விடயம்இ எதிர்பார்த்ததை விட பெருமளவு வேடர்கள் என தம்மை அழைக்கின்ற குடிகள் இங்கே வாழ்கிறார்கள் என்பதுவும் அவர்கள் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ள போதும் தங்கள் பாரம்பரியங்களை தொடர்ந்து பேணுவதில் சிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பதுவுமே. தங்கள் பாரம்பரியங்களைப் பேணுவதில் தங்களை வேடர்கள் என அழைத்துக் கொள்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவதும் இல்லை போல் தெரிகிறது.
தேடல்கள் “கிணறு வெட்டப் பூதம் வெளிவந்த” கதையாக இருக்கிறது. எதை எழுதுவுதுஇ எப்படி எழுதுவதுஇ என்ன முடிவுகளிற்கு வருவது என்பது பாரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இது குறித்து பெற்றுள்ள தகவல்களை சரியான வழியில் கணித்து எழுதுவதற்கு காலமும் உதவியும் தேவைப்படுகிறது. விரைவில் ஒரு கட்டுரையில் அவற்றை தெரிவிப்பேன்.
விஜய்
In any society the aborigines ( Vedas ) existed and they were the starting point. That doesn’t mean BCO Tamil people are from that breed. It appears the various rulers from India when they were in power settled their people in these regions. Societies consisted of the rulers, the fighters ( Chathriyas ) and the workers ( Suthras ). The Indian societies also had the Brahmins as a fourth leg to advice the rulers on spiritual issues. When the rulers lost and retreated they took only their close ones with them leaving most of the fighters and the workers behind. Most of BCO or other Tamils are the leftovers like this. That should be the foundation of the ancestry of BCO Tamils I think.
விஜயின் முயற்சிக்கு பாராட்டுக்கள்,
ஆண்ட பரம்பரையென்பது கட்டுக்கதை என்ற பின்னூட்டத்தை ஏற்க முடியவில்லை. இன்று போல் என்றும் தமிழர்கள் வீழ்ந்த போது அவர்களின் வரலாறுகள் உருத்தெரியாதவாறு திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன என்றே நான் நம்புகின்றேன், இதனை நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நின்று ஆய்வுகளே எண்பிக்க வேண்டும்.
இன்று வட பகுதிக்கென தனித்துவமாக திகழும் தேசவழமைச்சட்டம் போன்று, அன்று கிழக்குக்கென தனித்துவமான முக்குவர் (முக் குகர்) சட்டம் புழக்கத்தில் இருந்துள்ளது.
போத்துக்கேசரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வடபகுதி மக்களின் வழக்காறுகளையும் நடைமுறைகளையும் நூலுருவில் தேசவழமைச்சட்டமாக கொண்டுவர பங்களித்தது போல் முக்குவர் (முக் குகர்) சட்டத்தினை அவர்கள் அவர்களின் காலத்தில் கொண்டுவர தவறியதனால் அல்லது அக்கறையில்லாமையினால் வழக்கழிந்து போனது என்றே கூறலாம். இதன் மூலம் (முக்குவர் சட்டம்) சட்டத்தை கைக்கொள்ளும் தமிழ் மக்கள் சமூகமொன்று அங்கு வாழ்ந்து வந்துள்ளமை புலன். (இன்றும் பல ஊர்களில் குடிவழிகளில் முக்குவர்குடி மக்களும் ஒரு பகுதியினராவர்.)
அத்துடன் கிழக்கு மக்கள் இன்றும் தாய்வழி உரித்து மரபினை கடைப்பிடித்து வருபவர்கள் என்பது கண்கூடு, இது அழிந்து போன முக்குவர் (முக் குகர்) சட்டத்தின் கூறாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது.
I don’t understand this “முக்குவர் (முக் குகர்) சட்டம்”. முக்குவர் means in english “broodies”, who carried the dead bodies to the cemetery. in jaffna, shundukully is famous for this particular cast. whoever writes or speak, must verify the words in use. I think that harrychandiran is not speaking about the cast. in prof mounaguru’s book –that “மட்டக்களப்பின் பூர்விக குடிகளாக வேடர், புலிந்தர், இயக்கர் ஆகிய சாதியினரைக் குறிப்பிடுகிறார்”. are we talking about cast or race ? we are all TAMIL RACE and we were in the beginning VERDAR. everybody in that stage(s) lived naked that is another fact. in CEYLON, only the batticaloa people speak the pure TAMIL !!. I think all these pundits must sit together and produce a foolproof print a final “BOOK” for the sake of our new generation. in google for மட்டக்களப்பு some Shinhala person had given the meaning,but it’s not satisfying. wake up people before it’s too late. THANKS.
I think in Jaffna Koviar from Chunnakam were considered the people who did undertaking.
முக்குவர்கள் வெள்ளாலருக்கு அடுத்தபடியானவர்கள், கரையார் அதற்கு அடுத்வர்கள். முகுவர்கள் வெள்ளாலரைபோல் நிலச்சுவாந்தர்கள். அவர்களிடையே மணம் முடிப்பதும் உண்டு.
Dr. Jayampathy Wickremeratne did talk about caste in 1978. He became President’s Counsel after he put together a committee for President Chandrika Bandaranaike Kumaranatunga. Dr. Navaratna Bandara and Dr. Sumanasiri Liyanage are in it. The Traditional Homeland concept applies to both East and North. I am in Indiana, USA. with Dr. William J. Brett (1923). Acthung Amerikaner!
அரிச்சந்திரன்
மட்டக்களப்பு தமிழகம் எனும் நூல் நு{லகம்.கொம். இல் கிடக்கிறது. அருமையான ஆவணப்படுத்தல். மட்டக்களப்பின் தனித்துவம் பற்றி உரு பகுதி இருக்கிறது. வாசித்துப்பார்கக்லாம். முடிந்தால் அது குறித்து எழுதுவேன்.. விஜய்
பண்டிதர் எல்லாம் பண்ணியிருக்கிறார் தனது மாணவர்களுக்கு பாடம் சொல்லிகக்கொடுத்ததை தவிர. ஒரு பின்ச் ஒப் சோல்ட் ஓடதான் அவ்ருடைய புத்தகத்தை வாசிக்க வேண்டும். அவர் இந்த புத்தகம் வெளியிட்ட மேடையுல எஸ் போ போட்ட குண்டு, கேட்டா நீங்க சிரிப்பீங்க.
ஆனால் அவருடைய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவை மிக முக்கியமானவை. பெரும் தேடல் ஒன்றை அக்காலத்தில் அவர் செய்து அதனைப் பதிவு செய்திருக்கிறார். — வஜய்
His academic honesty is questionable, that is why I said that his research needs to be taken with a pinch of salt. You cannot take everything in it as bible. No harm in having it as part of your literature search. Others like FX, Padit Periyathamby Pillai, Prof Chandrasekaram et. al. can be more reliable if you can find any.
I also like to write in English like Anton. I heard S.P. is also in Australia. Adel (1950) must have given the satellite phone to Dr. Palitha Kohona: when India sneezes, Sri Lanka catches a cold!
இங்கிலீஸோ, தமிழோ இல்ல் சிங்களமோ எதுவேணும்னாலும் எழுதுங்கோ ஆனா புரியுபடியா எழுதுங்கப்பா.
I am a smaller man than Professor Mounaguru. He had said that he met the wives of late Professor Karthigesu Sivathamby. Dr. Jayampathy Wickremaratne talked about Caste Buisiness in 1978. Selvan, me drear, you find out, who betrayed who and where? Sinhala Buddhists are God fearing people. Lee Kuwan Yu the King of Singapore had said that the Tamils have also lived here as long as everybody else.
LKY is no authority on SL history, it was more of a political statement.
Anton, you have a lot to unload. Please write a book. I intend to write one titled, Arasady to America. probably with help from Xilbris Publishers in Australia. Selvan , I am a Shasthriyar. General Sathasivam Selvanayagam. Hindu Vedantas were given in the banks of river Ravi in Punjab. The Hooles are also Vellalars though they are Christians, now. Sangiliyan was a Velallar. The primary four catergories are basically four levels of brain and intellectual developments. That got translated into something in later times. So, Batticaloa and Jaffna are two ploes. Interesting things are going on here, now. Thank you.
You are all over the place when you write. Please try to focus on one thing at a time. If you ask me we two are also two pole also apart. That doesn’t discount the fact that we are Tamils irrespective of where we come from.
நீண்ட காலமாக என் மனதில் ஓடிய விடயமொன்றை இப் பந்திக்கு பின்னூட்டமாக வரைகின்றேன், சிறிய வயதில் X எனும் கிழக்கு மாகாண கிராமம் ஒன்றில் எனது பெற்றோருடன் வசித்து வந்திருக்கின்றேன்.
அங்கு எமக்கு பல ஏக்கரில் நெற்செய்கைக்காணிகள் இருந்தன. நான் ஏடு தொடங்கி எழுத்தாணி பிடித்ததும், என் முதல் நண்பனை கண்டு பிடித்ததும் அங்குதான்.
கோடை காலங்களில் ஆக்காண்டி இடும் (ஆட்காட்டி) முட்டைகளுக்காகவும், கீழே விழும் தேத்தாங்காய் கொட்டைகளுக்காகவும் உச்சிவெயிலில் அலைந்து திரிந்ததும், குருவி அண்ணனின் எருமைமாட்டு குட்டியிலும், ஆத்தை வீட்டு கறுப்பு, வெள்ளை பட்டி ஆட்டினிலும் சவாரி செய்து விளையாடியதும் அங்குதான். இது போன்று இன்னும் பல பொழுது போக்குகளும் எமக்கு அங்கு இருந்தன. அதன்போது பல முறை என் தந்தையிடம் மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிக்கொண்டதும் உண்டு.
நாங்கள் சேகரித்த ஆக்காண்டி (ஆட்காட்டி) முட்டைகளை உண்ணும் முறையைச் சொல்வது கூட அலாதியானதும் ஆனந்தமானதும் ஆகும். அதனை பார்க்கின்ற போது சிலருக்கு இது புதிதாகவும் புதுமையாகவும் இருக்கலாம் எனினும் அவைகளே எமக்கு இனிமையான பசுமையான காலங்கள்.
அதாவது, அவற்றை (ஆக்காண்டி முட்டைகளை) நாங்கள் பொறுக்கிக்கொண்டு வந்து காய்ந்த மண்ணைத்தோண்டி மண்ணுக்குள் அவற்றை வைத்து மூடி விடுவோம், பின்னர், மேலே குச்சி விறகுகளை வைத்து அடுக்கி தீமூட்டி வேகவைப்போம். அதன் பிறகு அவற்றை வெளியே எடுத்து ஆறவைத்து சுத்தப்படுத்தி பங்கிட்டு உண்ணுவோம்.
இவ் முட்டை விடயத்தில் நல்ல முட்டைகளை கண்டு பிடிப்பதற்கும் (ஓரளவுக்கு) மூன்று முட்டைகளை கொண்ட ஒரு தொழில்நுட்ப முறையொன்றை அப்போது நாங்கள் கையாள்வோம். அதாவது, நீள வடிவில் முதல் முட்டையை மணலில் நிறுத்தி அதன் மேல் இன்னொரு முட்டையை அடுக்கி அதற்கு மேல் மூன்றாவது முட்டையை வைத்து கைகளால் பிடித்திருப்போம்.
இப்போது, நடுவில் உள்ள முட்டையானது நீளப்பாட்டில் மேல் கீழாக இரு முட்டைகளின் தொடுகைகளினால் மட்டுமே பிடிப்பில் இருக்கும். அப்போது மத்தியில் உள்ள முட்டையை அவதானிக்கின்றபோது நடுவில் உள்ள முட்டை அசைவுகளைக் வெளிக்காட்டும் அல்லது காட்டாது விடும். அசைவுகளைக்காட்டுகின்றவை குஞ்சு முட்டைகளாகவும் அசைவுகளைக்காட்டாதவை நல்ல முட்டைகளாகவும் இருக்கும் என்பதே எமது முடிவு. இவ்வாறு ஒவ்வொரு முட்டையையும் பரிசோதனை செய்த பின்னரே பயன்படுத்துவோம்.
இதைவிட வயல் வெளிகளிலும், வயல் வரப்புகளிலும் முட்டையிடும் ஆட்காட்டிகளுக்கும் எங்களுக்குமிடையில் முட்டையை கைப்பற்ற நடக்கும் தந்திர விளையாட்டுக்களை விளக்கினால் அதுவும் ஒரு வகை இனிமை தரும் புதினமாக இருக்கும். ஆனால், இவ்விடத்தில் அதனை தவிர்த்து விடுகின்றேன் எனது முதன்மையான விடயத்துக்கு வரவேண்டியுள்ளதால்.
எங்களது விளையாட்டுக்கள் அனைத்துக்கும் எப்போதும் முதன்மையான மைதானமாக இருப்பது சோதையன் கட்டு. அது வயல் நிலங்களுக்கு மத்தியில் கரையாண் புற்றுகளுடனும் சிறு சிறு பற்றைகளுடனும் பல வகை புற்களுடனும் கூடிய சமாந்தர மேட்டு நிலப்பரப்பாக காட்சியளிக்கும்.
அறுவடை காலங்களில் வயலில் நீர் வடியாவிடின் சூடுவைப்பும், சூடடிப்பும் இங்குதான் நடக்கும். வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் எல்லாம் உப்பட்டிகளை (வெட்டிய நெற்கதிர்க்கட்டுகள்) வயலிலிருந்து கரையேற்றி காப்பாற்றி காய வைப்பதற்கு இந்த சோதையன் கட்டே பயன்படும்.
அக்காலகட்டங்களில், சோதையனால் இக்கட்டு கட்டப்பட்டதாகவும், அவர்கள் அரக்கர்கள் போன்று திடகாத்திரமானவர்களாகவும், மிகவும் பலசாலிகளாகவும் எக்கச்சக்கமான சாப்பாடுகளை அவர்கள் சாப்பிடக்கூடியவர்கள் எனவும் செவிவழிக்கதைகளாக பலமுறை கேள்விப்பட்டிருக்கின்றேன். அப்போதைய எனது சிறு வயது அறிவில் அவர்களை நான் அரக்கர்களாகவும் பூதங்களாகவுமே கற்பனை பண்ணி வைத்திருந்தேன்.
பிற்காலத்தில் படிக்கின்ற காலங்களிலும் சோதையன் கட்டு என்பது எவரும் உடமை கொள்ள முடியாத ஒரு பகுதி எனவும் ஆனால், அப்பகுதியில் வேளாண்மை செய்கின்ற அல்லது காணியுள்ள எவரும் அதனை பயன்படுத்திக்கொள்ளுகின்ற உரிமையை மாத்திரம் கொண்டவர்கள் எனவும் தெரிந்து வைத்துருக்கின்றேன்.
அதன் பின்னர், சோதையன் கட்டு பல இடங்களில் அதே பெயரில் அழைக்கப்பட்டு வருவதையும், அவைகள் பல இடங்களில் விவசாயத்துடன் தொடர்புபட்டு பயன் படுத்தப்பட்டு வருவதையும் சில இடங்களில் மரபு மருவி வேறு தேவைகளுக்காக அவைகள் உபயோகப்பட்டு வருவதையும் கண்டிருக்கின்றேன்.
இதன் அடிப்படையில், நீண்ட காலத்துக்கு முன்னர் இருந்து பல பகுதிகளில் சோதையன்களால் கட்டப்பட்ட சோதையன் கட்டுக்கள் பல கிழக்கு மாகாணப்பகுதிகளில் வேளாண்மைச்செய்கையை மையப்படுத்தி பரந்துபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளதையும் அவைகள் அவற்றுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதையும் அறியக்கூடியதாகவும் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. எனவே, யார் இந்த சோதையன்கள்? அவர்களின் வரலாறு என்ன? இந்த சோதையன் கட்டுக்களை கட்டுவித்தவர்கள் யார்? அவர்களின் வரலாறுகள் என்ன? என்பதே இன்று என் முன்னுள்ள கேள்விகள். விடை யாருக்குத்தெரியும்?
சோதயன் கட்டு பற்றி அறிந்துள்ளேன். அன்ரன் பின்னூட்டத்தில் சோதயன் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சோதயன் கட்டு பல இடங்களில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு புதிய தடம். வேறு ஏதாவது தகவல் தெரியுமா?
விஜய்
Just make General Sarath Fonseka (December 18, 1950) a Sengunthar like Sri Sabaratnam. American Originale.
my dear friends, whoever participate in this very rare and interesting forum must keep in mind, ” now, whoever speaks about batty tamil should be a batty born and should not be shy about saying ” I am a batty ‘ rather than writing in ugly jaffna tamil. people like selvan is a no.1 half boiled pundit. He mix up castes and degrading a very good author of a research piece written by VAKARAI pundit. his article more or less (above my) fine tuned to my fluke guesses and my genuine thoughts. he should be land ed. More over the above half boiled pundit said about the author on 03/02/2012 is very pathetic to read. another example keep on saying that we all started from VEDAHS – that was my point to, then how on earth this” the fighters ( Chathriyas ) and the workers ( Suthras ) ” came from ???. stupidity. moreover ” இங்கிலீஸோ, தமிழோ இல்ல் சிங்களமோ எதுவேணும்னாலும் எழுதுங்கோ ஆனா புரியுபடியா எழுதுங்கப்பா ” . what a tamil ??. why ?? ” thaan arriya sinkalum than puradiku setham ” enpathi arriyano intha mukkuva tamilan. i think his generation is from KERALA.
remember, i have written earlier that my grandfather is from point pedro his father came and landed in AMIRTHAKALI to sell abbin, tobacco or cigar in return took rice to jaffnapeninsulaa, because the jaffna so called wellalardidn’tt havepaddy fieldd to produce rice. this practice was carried out by my wife’s parents side from MUTHUR. people should notunnecessarily wag their tails. now you understand why i said non batty born should not open their mouth, anybody in the world can get into and give their most golden opinions (I hope the author of this page would agree with me). thanks.
நான் எங்கப்பா உன்னுடய சாதியை இதுக்குள்ள இழுத்தேன். யாரந்த வாகரை பண்டிதர், நான் குறை கூறியது ? வி சி கே மண்டூர் அல்லவா. சமுதாயங்கள் எவ்வாறு உருவாகின அமைந்து இருந்தன என்று அறியவேண்டுமென்றால் வாசித்துப்பாரும். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும்கூட. வேடுவர்கள் வேடுவர்களாயே சிறுபான்மையினராகி அழிந்துபோயினர். குடியேறிய தமிழரும் சிங்களவரும் அவர்களை இல்லாமலே ஆக்கிவிட்டனர். நீங்கள் யாழில் இருந்துவந்து மட்டக்களப்பில் நிலச்சுவாந்தர்கள் ஆகியதை போல. என்னை முக்குவன் என்பதற்கு முதல் உன்னை நீ யாரென்று அறிந்துகொள். நான் சக்கிலியன் என்றாலும் அதற்கு வெட்கப்படப்போவனல்ல. எனது சாதியை சொல்லி இங்கு கருத்து சொல்ல வரவில்லை. எது உண்மை என்று நினைக்கிறோனோ அதை சொல்கிறேன். யாரிங்கே வாலாட்டுகிறார்கள், உம்போலவர்கள்தான். எனக்கு மட்டக்களப்பை பற்றிபேச என்ன உரிமை இருக்கிறதென்று வாதிட இது என்ன உமது வீட்டு முற்றம் என்று நினைத்து விட்டீரோ. உமக்கு நகைசுவை கலந்து எழுதுவதென்பது புரிவதில்லைபோலும். சும்மா இஙுகு எகிறி உமது இரத்த அழுத்ததை கூட்டாமல் ஆக்கபூர்வமாக உமது பங்கை அளியும். உம்மைநினைத்தால் எனக்கு பின்வரும் பாடல்தான்நினைவில் வருகிறது, “முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே காசு முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே …” – 🙂
again this stupid keep on saying brainless stories. who told you that mukuvar is second to wellalar caste? here I have explained what is my caste according to my grandfather, a caste fanatic. you don’t understand english well or to think what others writing about.வேடுவர்கள் வேடுவர்களாயே சிறுபான்மையினராகி அழிந்துபோயினர். குடியேறிய தமிழரும் சிங்களவரும் அவர்களை இல்லாமலே ஆக்கிவிட்டனர். who is veduvar ?, who is tamilar ?, who is sinhalavar ? .
think idiot carefully, before you put them in writting. think twice. when you write on www, it becomes the playground of everyone. that is the unwritten law of writers of web. running down any authurs or pandits is not a joke, four legged man. wagging tail is not as you think – it’s like don’t talk too much like a qualified pandit. o.k. another thing i would like to tell you, first learn to write the correct tamil – we don’t understand the “untha thamel”.
I am not going to call you names like brain dead or a moron or a hole anything else like that because I not from the lower rungs of the society to try to degrade others. Only you have done it to yourself by exposing your character here. But let me try to respond to you kindly in English since you don’t seem to get it in Tamil when I write in the pure literary version of it.
It is given below as a Q&A type of response. Q: again this stupid keep on saying brainless stories. who told you that mukuvar is second to wellalar caste? A: I am not saying that that is what the Vellalar say to themselves. Q: here I have explained what is my caste according to my grandfather, a caste fanatic. A: I am not a caste fanatic. I have had friends who are from the barber class, dhoby class and nalavar class. Had been to their homes and eaten the good food they serve. Q: you don’t understand english well or to think what others writing about. A: If I don’t know English how did I earn a credit pass in my OL English and get through my college degree programs conducted in English only.
Q: வேடுவர்கள் வேடுவர்களாயே சிறுபான்மையினராகி அழிந்துபோயினர். குடியேறிய தமிழரும் சிங்களவரும் அவர்களை இல்லாமலே ஆக்கிவிட்டனர். who is veduvar ?, who is tamilar ?, who is sinhalavar ? . A: When you are a aborigine ( Veddah ) you don’t have a language. Their society hasn’t developed to the level to label themselves as Tamils or Singahalese with a language with proper spoken and written forms. By the time the Tamils came to SL they have stripped that aborigine label from themselves hundreds or thousands of years ago. Q:
think idiot carefully, before you put them in writting. A: You are the one who is doing the name calling. You are letting down the BCO Tamils and make others think all BCO Tamils are like you. Fortunately they are not. A: think twice. when you write on www, it becomes the playground of everyone. May be the www is something new to you. A: For me I have had the opportunity of working with computers for a very long time even before the advent of PCs. Probably you did not even know they existed at that time. News groups, forums, e-mail etc. existed even before the www times. Q: that is the unwritten law of writers of web. running down any authurs or pandits is not a joke, A: Critiquing writings is part of the process of refining the writings so that we can elucidate the truth. Q: four legged man. A: I think you deserve to see a shrink. Q: wagging tail is not as you think A: well my dog does it and it appears she is smarter than you.Q: – it’s like don’t talk too much like a qualified pandit. o.k. A: I am not a pundit of languages but I have every right to express what I think and tell what I have come to know and learned as I grew up in SL Q: another thing i would like to tell you, first learn to write the correct tamil – we don’t understand the “untha thamel”. – A: I will keep you guessing using all kinds of slangs to confuse the hell out of you. You think Jaffna Tamils speak a lesser Tamil than BCO Tamils ? Here are some from the BCO vocabulary: IRIKAAN, AVANUKAL, KIRUKI, and more. May be I should compile a list and publish it for benefit of your pea brain.
செல்வன்>
கினியிருக்க இரும்பை…. நாம் ஆரோக்கியமான வழியில் செல்வோம் என உறுதி பூண்டுதான் ஆக வேண்டும்.
விஜய்
விஜை அவுஸ்திரேலிய பாசையில சொல்கிறேன் -நோ வொறீஸ் மேற் .
dear vijey. just now i installed the google earth and went through the couple of places you mentioned in your reply to me on the th of this month. a brush up – i think the place i mentioned where i saw the first vedar probably between ” sewanapitiya ” and “manampitiya ” and toward one of the tanks. sorry for the sinhala ” pitiya ” – it’s google.
Anton. Great. I am saving all these information for my book. Kasi Ananthan is also from Amirthakali. Lionel Bopage is also in Australia. Sirisena Cooray came to Batticaloa and was trying to say something. Somawansa Amerasinghe is right. Sri Lanka do not need an Army, anymore.
the brain dead, is still keep on writing and neglecting what he had quoted in his previous replies. i think this moron needs a little bit of batty “partty vaitiyam”. first of all if you could manage to write in english, run the spell checker and then you would or anybody submit it. stupid now run the spell checker and count how many mistakes in your last reply. ” His academic honesty is questionable, that is why I said that his research needs to be taken with a pinch of salt. You cannot take everything in it as bible. No harm in having it as part of your literature search”. how dare you question a research scholar like this. and later you are advising dr sri sriskanda ” You are all over the place when you write. Please try to focus on one thing at a time. If you ask me we two are also two pole also apart. That doesn’t discount the fact that we are Tamils irrespective of where we come from. in this second sentence also two “pole” is not plural. now tell me sar in india, which caalageela you got your degree by presenting your thesis. KOVINTHA !!!. hereafter do not, i repeat ” do not ” reply to this comment. waste of time.
Spell checker doesn’t check grammer. I am not going to check every word here bacause it is not my thesis to get a grade. Now you have lost countering my arguments in substance. Empty vessels like you make a lot of noise. Let this be the last time you pick on me. Play with Google earth and learn something in your life.
The book Root won awards and a popular TV series was made on it. Later it was found the author faked the story. If everyone accepts everything on face value only truth will never be found. Criticism may sound bitter but it helps.
Late S. P. Thamil Selvan said it all right. Look like they are trying to woo Sumanthiran. The parliamentarian is a lawyer that went to the Royal College in Colombo-07, Sri Lanka – Shri Lanka..
விஐய் ! உமது தொடர்புகள் தேவைப்படுகின்றன .