மட்டக்களப்பு வரலாற்றை விபரிக்கும் நுல்கள் மற்றும் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. மட்டக்களப்பின் வரலாறு குறித்த முதல் நூலாக அமைவது S.O. கனகரெத்தினம் அவர்கள் 1923 ஆம் ஆண்டில் எழுதிய ‘“The Monograph of Betticaloa District of the Eastern Province”ஆகும். மட்டக்களப்பின் வரலாறு மற்றும் சாதியமைப்பு பற்றி விபரிக்கும் இந்நூல் நீண்டகாலமாக மட்டக்களப்பின் வரலாற்று ஆவணமாக பலாராலும் பயன்படுத்தப்பட்டது.
இதையடுத்து முக்கியம் பெறுவது வித்துவான் கு.ஓ.ஊ. நடராசா அவர்களால் 1962 இல் வெளியிடப்பட்ட ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஆகும். இந்நூலும்; மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை விபரிக்கும் நூலாக நீண்டகாலமாக விளங்கியது. அது மட்டுமின்றி மட்டக்களப்பு தமிழர்களுக்கு ஒரு தொன்மையான வரலாறு உண்டு என்ற ஒரு பெருமித உணர்வையும் இந்நூல் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தொடர்பாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முதலில் இந்நூல் விபரிக்கும் வராற்றுத் தகவல்கள் முரணானவையாக, சிக்கலாதனவையாக அமைந்திருப்பதனை பின்வந்த பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இரண்டாவதாக இந்நூலில் பிரித்தானியர் ஆட்சிக்காலம் பற்றிய விபரிப்புக்கள் இடம் பெறுவதனாலும், மைல், லோ போன்ற சொற்கள் இடம் பெறுவதன் காரணமாகவும், 1915 ஆம் ஆண்டில் அச்சுப்பதிப்பாக வெளிவந்த ‘இலங்கைச் சரித்திரம்’ எனும் நூலில் உள்ள விடயங்கள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் ஐரோப்பியர்; ஆட்சிக்காலத்தின் பின்னரே இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மட்டக்களப்பின் தொன்மையான வரலாற்றை விபிரிப்பதாகக் கருதப்பட்ட மட்டக்களப்பு மாண்மியம் மிகப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
கலாநிதி க.த.செலவராசாகோபால் அவர்கள், ‘மட்டக்களப்பு மான்மியம்’ செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை என்பவரின் ‘மட்டக்களப்பின் வரலாறு’ எனும் ஓலைச் சுவடியினை அடிப்படையாகக் கொண்டது எனவும், அவ்வோலைச்சுவடி 1900 த்திற்குப் பின்னரான காலத்திலேயே எழுதப்பட்டது எனவும், தக்க ஆதாரங்களுடன் கூறியிருக்கிறார்.
இவ்வாறு முரணான-சிக்கலான வரலாற்றை பதிவு செய்ததுமட்டுமன்றி, பிற்காலத்தில் மட்டக்களப்பின் வரலாற்றை எழுதுபவர்கள் திசை தடுமாறிச் செல்வதற்கும் கு.ஓ.ஊ. நடராசா அவர்களின் ‘மட்டக்களப்பு மான்மியம்’ வழியேற்படுத்தியிருக்கிறது. பிற்கால அய்வாளர்கள் ஒன்றில் மட்டக்களப்பு மாண்மியம் கூறும் செய்திகளின் அடிப்படையில் தவறான ஒரு வரலாற்றையே விபிரக்க முனைந்திருக்கிறார்கள், அல்லது மட்டக்களப்பு மாண்மியம் கூறும் வரலாற்று முரண்களில் சிக்கித் திணறியிருக்கிறார்கள்.
மட்டக்களப்பு மாண்மியத்தினை அடுத்து பல நூல்கள், கட்டுரைகள் வெளிவிந்திருப்பினும் முக்கியமானதாகக் கூறப்பட்டது, ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ ஆகும். இந்நூல் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எனும் வகையில் நான்கு ஓலைச் சுவடிகளும்; காணப்பட்டது. இந்நான்கு ஓலைச்சுவடிகளும் முரண்பட்டும் காணப்பட்டன. இதனால் இவற்றை ஒப்புநோக்கி நேர்த்தியான, வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படக்கூடிய சிறந்த பதிப்பொன்றைக் கொண்டு வரவேண்டும்’ என்ற நோக்கில் வித்துவான் சா.இ.கமலநாதனும் அவரது துணைவியார் கமலா கமலநாதனும் ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ எனும் நூலை தயாரித்தனர். இந்நூலின் தயாரிப்புக்கு த.சிவராம் துணைபுரிந்திருந்தார் என்பதுடன் நூலிற்கான வரலாற்று அறிமுகக் குறிப்பினையும் எழுதியுமிருந்தார்.
இந்த ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை என்பவரின் மட்டக்களப்பின் வரலாறு எனும் ஓலைச் சுவடியினை ஆதாரப்பிரதியாகக் கொண்டே அமைந்திருந்தது, அத்துடன் அவர்கள் ஒப்புநோக்கிய ஏனைய ஓலைச்சுவடிகளும் க.கணபதிப்பிள்ளை என்பவரினாலேயே எழுதப்பட்டது என்னும் விடயத்தினை கலாநிதி க.த.செலவராசாகோபால் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். எனவே ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலின் ஒரு மறு பிரதியாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. இவ்விரு நூல்கள் குறித்து க.த.செலவராசாகோபால் அவர்கள் ,
‘இதுவரை மட்டக்களப்பு மாண்மியம் எனும் பெயர்சூட்டப்பட்டு இருதடவைகள் மட்டக்களப்பு மக்களிடையே பிரபலியமாகிய அதே நூல் இப்போது மட்டக்களப்பு பூர்வீக சரித்திரமாகி மீண்டும் ஒரு தோற்றத்தை தந்துள்ளது. இவைகள் மூன்றிலும் உள்ள விசயங்கள் ஒன்றே என்பதையும் இதற்கான மூலப்பிரதி செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளை புலவர் பனை ஓவைலச்சுவடியில் படைத்த மட்டக்களப்பு வரலாறு என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளேன்.’ எனக் குறிப்பிட்டிருப்பதுடன், சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வரை மட்டக்களப்பு மாண்மியத்திலோ அல்லது மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்திலோ சொல்லப்படும் தகவல்களை எடுத்து ஆள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இம்மூன்று முயற்சிகளுக்கு அப்பால் மட்டக்களப்பு வரலாறு குறித்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர் கலாநிதி க.த.செல்வராசாகோபால் ஆவார். கலாநிதி க.த.செல்வராசாகோபால் எழுதிய ‘யாரிந்த வேடர்’ எனும் நூல் கட்டுரை 1965 இல் வெளிவந்திருந்தது. இவருடைய வதனமார் வழிபாடு ஓர் ஆய்வு, 1675இல் மட்டக்களப்பில் டச்சுக்காரரை எதிர்த்த இளஞ்சிங்கன் – தென்மோடி நாடகம், மீன்பாடும் தேன் நாடு, வசந்தன் கூத்து ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. ‘யாரிந்த வேடர்’ நூலில் இலங்கைக்குரிய சொந்தக்காரர்கள் காடுகளில் மறைந்து வாழும் வேட்டுவக் குலத்தவரே என ஆதராங்களுடன் எழுதியிருந்தமையால் நூலாசிரியர் நீதி விசாரணைக்கு உட்பட்டிருந்தார் என்பதுவும் நூலின் விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
கலாநிதி க.த.செலவராசாகோபால்(ஈழத்துப்பூராடனாhர்) அவர்கள் எஸ்.பி. கனகசபாபதி(கல்கிதாசன்) துணையுடன் 2005 இல் ‘மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள்’ எனும் நூலையும்; ‘மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள் பாகம் 2’ எனும் நூலையும் வெளியிட்டிருக்கிறார். க.த.செலவராசாகோபால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ மற்றும் ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ ஆகிய நூல்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அந்நூல்கள் தொடர்பான பல தகவல்களையும் அவரே வெளியிட்டிருந்தார். எனவே இந்நூல்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு மட்டக்களப்பு வரலாற்றை ஆராயும் தன்மை காணப்படுகிறது.
வித்தவானும் பண்டிதருமான வீ.சி.கந்தையா அவர்கள் எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூல் 1964 இல் வெளிவந்தது. அந்நூலிலுள்ள ‘அரசியலும் தமிழர் குடியேற்றமும்’ எனும் பகுதி மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை விபரித்துச் செல்கிறது. அந்நூலும் மட்டக்களப்பு மான்மியத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டு பல தவறான வரலாற்றுத் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. ஆயினும் அந்நூலில் மட்டக்களப்பு சமூகம் குறித்து பல தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை காணலாம்.
‘மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்;கையும்’ எனும் நூல் தொகுப்பில் (1980) கு.ஓ.ஊ. நடராசா அவர்கள் எழுதிய இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. அவை ‘மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்’, ‘மட்டக்கப்புத் தமிழ் மக்கள்’ என்பனவாகும். ‘மட்டக்களப்பு வரலாற்றுச் சுருக்கம்’ மட்டக்களப்பு மான்மியத்தை தழுவியது.
வெல்லவூர்க்கோபால் அவர்கள் 2005 இல் ‘மட்டக்களப்பு வரலாறு – ஓரு அறிமுகம்’ எனும் நூலை வெளியிட்டிருந்தார். பத்தாண்டு கால தொடர்முயற்சியினால், தமிழ் நாடு, புதுவை, கேராளா மற்றும் ஒரிசாவிலமைந்துள்ள ஆவணக்காப்பகங்களிலிருந்து கிடைத்த தகவல்களையும் மட்டக்களப்பு பிரதேச கள ஆய்வுத் தகவல்களையும் பயன்படுத்தி எழுதப்பட்ட இந்நூல் புதிய பல தகவல்களை வெளிக்கொணர்கிற போதும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலை ஆதராமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. எனவேதான் பல இடங்களில் இந்நூலாசிரியரால் ‘மட்டக்களப்பு மான்மியம்’ கட்டமைத்த வரலாற்றுப் பொய்மைகளிலிருந்து விடுபட முடியாமல் போய்விடுகிறது.
இவை தவிர, அருள் செல்வநாயகம் எழுதிய ‘சீர்பாத குலவரலாறு’ எனும் நூல் சீர்பாதகுலத்தவரின் வரலாற்றை விபரிக்கிறது. இதனைவிட எஸ.டி.ராகவன் எழுதிய முக்கவ வரலாறு, ஞா.சண்முகம் எழுதிய மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறும் மரபுகளும் நூல்கள் பற்றியும் க.த.செலவராசாகோபால் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இந்நூல்களும் மட்டக்களப்பு மாண்மியத்தின் ‘ஆதிக்கம்’ நிறையவே இடம்பெற்றுள்ளது என்பதனையும் குறிப்பிட்டிருக்கிறாhர்.
தொல்லியல் ஆய்வை பல்கலைக்கழக மட்டத்தில் கற்ற தங்கேஸ்வரி அவர்கள் எழுதிய ‘மாகோன் வரலாறு’ எனும் ஆய்வு நூலும் மற்றும் அவர் எழுதிய ‘குளக்கோட்டன் தரிசனம்’, ‘முக்குவர் வரலாறு’, ‘மட்டக்களப்பு வரலாற்றுப் பின்னணி’ முதலிய வரலாற்று நூல்களும் மட்டக்களப்பு வரலாற்றை சரியான வரலாற்றாய்வு முறையில் அணுகியிருக்கின்றன எனக்குறிப்பிடப்படுகின்றன. தங்கேஸ்வரி அவர்கள் எழுதிய ‘மாகோன் வரலாறு’ எனும் நூல் குறித்துக் குறிப்பிடும் க.த.செலவராசாகோபால், ‘பலவரலாற்று நூல்களில் இருந்து திரட்டிய தகவல்களைக் கொண்டு ஆராயும் தொல்லியல் முறையில் வெளிவந்த பெருமைக்கு உரியது மாகோன் வரலாறு’ எனக்குறிப்பிடுகிறார்.
த.சிவராம், ‘மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்’ எனும் நூலிற்கு எழுதிய வரலாற்று அறிமுகக் குறிப்பில், 1960 களில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள்-கட்டுரைகள் பற்றிய குறிப்புக்களை தந்திருக்கிறார். அவற்றில், 1960களின் பிற்பகுதியில் மட்டக்களப்பில் களப்பணி செய்த அமெரிக்க மானிடவியலாளரான பேராசிரியர் டெனிஸ் பி.மக்கில்வ்ரே எழுதிய முக்குவ வன்னிமைகள் மற்றும் மட்டக்களப்பின் தாய்வழிக்குடிமை முறை பற்றிய ஒரு நூல், கட்டுரைகள் மற்றும் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
க.சண்முகலிங்கம்; அவர்களின் ‘இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும்'(2011) எனும் நூலின் மட்டக்களப்பில் சாதி எனும் அத்தியாயம், டெனிஸ் பி.மக்ஜில்வ்ரேயின் ‘முக்குவர்: இலங்கையின் மட்டக்களப்பில் தமிழர் சாதியும் தாய்க்குடிக் கருத்தியலும்’ எனும் நீண்ட கட்டுரையின்(63 பக்கம்) சுருக்கமான விபரிப்பாக அமைந்திருக்கிறது. மக்ஜில்வ்ரேயின் ‘மோதலின் உலைக்களம்’ எனும் நூல் மட்டக்களப்பு ஆய்வு தொடர்பானது. இந்நூலிலுள்ள விடயங்களை ‘இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும், முஸ்லிம்களும்’ எனும் அத்தியாயத்தில் அறிமுகம் செய்கிறாhர்; க.சண்முகலிங்கம்;. மற்றும் மக்ஜில்வ்ரேயின் இந்நூலை மிகச்சிறந்த ஒரு நூலாகவும் க.சண்முகலிங்கம்; குறிப்பிட்டுமிள்ளார். ஆயினும் இவை மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை ஆராயும் நூல்கள் அல்ல. மானிடவியல் சார்ந்த ஆய்வுகளாகும். மட்டக்களப்பின் குறித்த காலப்பகுதிக்குரிய சமூக அமைப்பை முக்கியமாக சாதியை மையமாகக் கொண்ட ஆய்வுகளாகும்.
இவை தவிர சிவராம் குறிப்பிடுகிற ஆவணங்கள், அமெரிக்கரான மார்க் விட்டர் மண்டூர் கோயிலை மையமாக வைத்து மேற்கொண்ட ஆய்வு, இலங்கையிலிருந்து பிரான்சிஸ்கன் பாதிரிமார் எழுதிய கடிதங்களில் உள்ள 1539 இலிருந்து 1542 வரையில் பிதா சைமாவே கொய்ம்ப்ரா அவர்களால் எழுதப்பட்ட கடிதங்கள், டிக்கிரி அபயசிங்க மொழிபெயர்த்து வெளியிட்ட போhத்துக்கீஸ் ரெஜிமென்டோஸ், மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்த ஒல்லாந்த அதிகாரி பிட்டர் டீ கிறாவ் என்பவருடைய 8.4.1676 திகதியிடப்பட்ட ஆண்டறிக்கை, ஜோஹான்ஸ் பிறாங் எனும் மட்டக்களப்புக்குப் பொறுப்பான அதிகாரியின் சுற்றுப்பயணக் குறிப்பு(1767), ஒல்லாந்தர்கள் வெளியிட்ட பிரகடனம்(1789-இது தமிழிலும் மட்டக்களப்பில் ஒட்டப்பட்டது),ஜேகப் பேணான்ட் என்பவரின் அறிக்கை(1794) போன்றவைகள் த.சிவராமால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பற்றிய ஆய்வுகள்; இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
டெனிஸ் பி.மக்ஜில்வ்ரே தனது கட்டுரையில் மட்டக்களப்பு பற்றிய மானிடவியல் குறிப்புக்களைத் தந்தவர் யல்மன் எனவும், அவரது ‘ருனெச வாந டீழ வுசநந'(1967) எ;னும் நூலின் அத்தியாயம் 14-15 இல் இக்குறிப்புக்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
காலத்திற்கு காலம் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கிற போதும் மட்டக்களப்பு வரலாறு பற்றிய தெளிவு இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. மேலாக ‘மட்டக்களப்பு மான்மியம்’ ஏற்படுத்திய தவறான செல்வாக்கு மட்டக்களப்பு வரலாற்றைக் கண்டறிவதில் பெரும் தடையாகவே இருந்து வருகிறது.
மட்டக்களப்பு வரலாற்றை எழுதும் இப்பல்வேறு முயற்சிகளின் பயனாக, மட்டக்களப்பிற்கு ஒரு தொன்மை வரலாறு உண்டு என்ற நிலைப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமான விடயமாகும். அதே போல மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இலங்கை வரலாற்று நூல்கள் தரும் செய்திகளும் அதனை உறுதிப்படுத்தக்கூடிய தொல்பொருள் சான்றுகளும் பெரும் பயனுடயன என்ற கருத்தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப முயற்சிகளை பல அய்வாளர்கள் மேற்கொண்டிருப்பதுடன் அதனை தன்னடக்கத்தடனும் பொறுப்பணர்வுடனும் கூறியும் இருக்கிறார்கள் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும்.
Useful article. Please give more information as you get them. Since I was born in Maddakkalappu in 1936, I am naturally interested in knowing all aspects of this town.Thank you.
K S Sivakumaran
Colombo
Sri Lanka
My email : dhasikaa@hotmail.com
யல்மன் “Undr the Bo Tree”(1967)
நல்ல ஆரம்பம். இது குறித்த ஆழமான தேடல் வேண்டும். தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்கள் அவதானிக்க, பல கேள்விகள் இங்கு எழுப்பப்பட்டு இருக்கிறது.
நன்றிகள் இதயச்சந்திரன்.
மட்டக்களப்பு வரலாறு எழுதியவர்களின் பிரதான தொனிப்பொருள் தமிழ் தேசியவாதம் என்றே கருத வேண்டியிருக்கிறது. அவ்வளவு அற்புதமாக எழுதியருக்கிறார்கள்!
விஜய்
யாரப்பா இந்த விசை ?
மட்டக்களப்பின் மைந்தன் !!
மைந்தனே பாணமை தொடக்கம் வெலிக்கந்தை வரையிலுமுள்ள உந்த மட்டக்களப்புல எந்தப்பகுதியப்பா நீ ? உன்ர சாதியயோ குடியயோ கேக்க வரல்ல நான்.
பூர்விகம் களுதாவளை- வாழிடம் கிரான்-வளர்ந்தது என்னவோ வடமுனை எ என அழைக்கப்படுகிற கிரானின் மேற்கே உள்ள வயல்-ஆறு-குளம் சார்ந்த பிரதேசம்தான். இது இயக்கங்கள் முகாமிட முன்னர். பின்னர் …. அது சோகமான கதை….
விஜய்
அந்த களுதவளை பிள்ளையார் கோவில் மேல் எங்களுக்கு அளவுகடந்த மோகம். கேட்கவே பெருமையாக இருக்கிறது நீர் களுதாவளை என்னும் போது.
இங்கு மட்டக்களப்பு எனும் போது எந்த பகுதியை குறிப்பிடுகின்றீர்கள்.பாண்டிருப்பு,நீலாவணை தொடக்கம் வெருகல் வரையுள்ள நிலப்பகுதியா ? அல்லது திருகோணமலை தொடக்கம் பொத்துவில்,பாணமை,குடும்பிமலை வரையுள்ள பெருநிலப்பகுதியா. ஒரு முப்பது வருடத்துக்கு முன் கிழக்கின் பூர்வீகம் என்ன ? யார் பூர்வீகக் குடி என தோண்ட வேண்டிய ஒரு சின்ன தேவை எனக்கு எற்றபட்டது.
அப்பாடா ? பெரிய கல்லாற்றில் ஆரம்பித்த தேடல், தாந்தா மலை, புளியந்தீவு (மட்டக்களப்பு ), ஏறாவூர்,வாழைச்சேனை, திருகோணமலை, இறால் குழி,தங்க வேலாயுத புரம் என நகர்ந்து, அப்படியே ஒலுவில் கடற்கரை ஓரங்களில் ஒரு ஒய்வெடுத்தது.
அப்புறம் ஒலுவிலில் விரிந்து அம்பாரை ( இப்போது திகாமடுல்ல ),கொண்டைகட்டுவான் ( இப்போது அம்பாரை ஹாடி தொழில் நுட்ப கல்லூரி அமைந்திருக்கும் இடம் ), தம்பிலுவில்,இன்ஸ்பெக்டர் ஏற்றம் ( பொத்துவில் ),பாணமை,குடும்பிமலை ( இப்போது குடும்பியாகல) என பரந்து, அங்கிருந்து கண்டி சிறி விக்கிரம ராஜ சிங்கனில் முடிந்தது.
அங்கும் குப்பையை கிளறினோம். அது திடீரென கேகாலை,நாவலப்பிட்டி மலையடிவாரங்களில் ஊற்றெடுத்து கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள, எம்மவர்களால் பூக்கடை என இப்போது அழைக்கப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள கோயிலுக்குள் வந்து, கரு பீடத்திற்குள் வாலைச் சுருட்டிக் கொண்டது. அங்கு கருவறைக்குள்ளும் போகமுடியவில்லை.
மட்டக்களப்பு மகாத்மியத்தின் சகல தகவல்களும் அந்த கருவறைக்கு உரிமை கொண்டாடும்,சிறிவிக்கிரம ராஜசிங்கனின் இப்போதைய வாரிசுகளிடம் ( இவர்கள் இந்தியாவில் மதுரையை அண்டிய பகுதிகளில், பெரு நிலச்சுவாந்தர்களாக இருக்கின்றனர்),ஓலைச்சுவடிகளாக இருக்கின்றனவாம்.
இந்த ஓலைச்சுவடிகளில் உள்ள ஒன்றிரண்டை வைத்துக் கொண்டுதான் அனைவரும்,அய்வைன்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க பேராசியரான டெனிஸ் மக்கிவ்டே, அக்காலங்களில் ஆங்கிலம் நன்கு நற்ற சில ஆசிரியர்களிடம் பேட்டி கண்டார் என்றுதான் கேள்விப்பட்டேன்.
பிற்காலங்களில் 1975/1976 களில் இன்னுமொரு மானுடவியல் அமெரிக்க மாணவர் கிழக்கு வந்து, முதலில் இலக்கண சுத்தமாக தமிழை கற்றார். அதன் பின்னரே தெருத்தெருவாக இறங்கி ஆய்வில் இறங்கினார். அவர் இதில் 50 வீதம் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் திரட்டிய தகவல்களும்,ஒலைச்சுவடிகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.
நன்றி ariffchandrasri இவ் விடயம் தொடர்பில் தங்களால் முழுமையான ஆக்கமொன்றை ஆக்க முடியுமென நம்புகின்றேன்.
நன்றி சந்திரசிறிஇ
உங்களைப்போலவேஇ ஆனால் மட்டக்களப்பின் சமூக உருவாக்கம் பற்றி அறிய விரும்பிஇ அதற்காக மட்டக்களப்பு வரலாறு எனும் பெரும் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டுள்ளேன். அதனால் நான் விரும்பிய விடயத்தை அறிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தங்களால் குறிப்பிடப்படும் விபரங்கள் சில புதியனவாக உள்ளன. அத்துடன் தாங்கள் விபரம் தேடி அலைந்த இடங்களும் ஏனைய வரலாற்றாசிரியர்கள் செல்லாத ஆனால் முக்கியமான பிரதேசங்களாகவும் உள்ளன. குடும்பிமலை என்பது வடமுனையில் உள்ள குடும்பிமலையா?
நீங்கள் விபரங்கள் எதையாவது சேகரித்திருந்தால் அதனை வெளியிட்டால் புதிய விபரங்கள் கிடைக்கலாம்.
மட்டக்களப்பு பிரதேசம் எது என்பதற்கும் இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை. அதே போல் ஒரே ஏட்டை வைத்துக் கொண்டுதான் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. அது பற்றி ஏற்கனவே பலர் குறிப்பிட்டுள்ளார்கள். பல சிக்கல்கள் மட்டக்களப்பு மாண்மியத்தால் ஏற்பட்டுள்ள என்றே கருதுகிறேன்.
சிறிவிக்கிரம ராஜசிங்கனின் வாரிசுகள் பற்றி ஏற்கனவே பத்திரிகையில் கட்டுரை வந்த நினைவுண்டு. ஆனால் அவர்களிடம் ஒரு வரலாற்று ஏடு உள்ளது என்பது புதிய விடயம்.
அடுத்த கட்டுரையில் மேலும் சில விடயங்கள் குறித்து எழுத உள்ளேன்.
வேடர்கள் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. கண்ணகை அம்மன் சடங்குஇ குமாரர் சடங்கு போன்றவற்றை அவதானிக்க வேண்டும் போலுள்ளது. வசதி ஏற்படின் இவ்வருடம் அவை பற்றி அவதானிப்புக்களை மேற்கொள்ளலாம்.
தொல்பொருள் சான்றுகள் உள்ள இடங்கள் குறித்தும் கவனம் செலுத்தலாம். நம்மவர்கள் புதையல் தோன்ட முயன்ற – முனைகின்ற இடங்கள் பற்றி அவதாகமாக இருக்க வேண்டும் போலுமுள்ளது.
எனது தொடர்பு 0778426362-
dhasikaa@hotmail.com
நட்படன்
விஜய்
மட்டக்களப்பு மகாத்மியம் என்ற நூல்இமட்டக்களப்பு மாந்திரீகம் என்று எழுதப்பட்ட புத்தகத்துக்கு பின்னரே வெளியானது. உண்மையிலேயே மட்டக்களப்பு மகாத்மியம் என்ற புத்தகம் எங்களது பூர்வீகத்தை தொடவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.
எம்மவர்கள் நிறைய பேர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காகஇஅங்கொன்றும்இஇங்கொன்றுமாக பொறுக்கி எடுத்து விட்டு ஆய்வுக்கட்டுரை என்ற பெயரில் கிறுக்கி விட்டுஇஅதுதான் சரித்திரம் என பின்னாட்களில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றனர்.இதனால் உண்மைகள் உறங்கிவிடுகின்றன.
ஆனால் எம்மவர் மத்தியில் ஒரு புதிய இஉண்மையான தேடல் இருப்பதைஇஅறியக்கூடியதாக இருக்கின்றது.அதற்காக முதலில் விஜய் போன்ற மட்டக்களப்பின் மைந்தர்களுக்கு என் நன்றிகள்.
முதலில் வேடுவர்களைப் பற்றி அறிய வேண்டும் என எழுதியிருந்தீர்கள். ஆம் அதுவும் ஒரு சரியான வழிதான். இப்போது சிறிலங்காவில் இருக்கும் வேடுவர் தலைவர் ( ஊரி வரியகே வன்னியா ) உண்மையான வேடுவத்தலைவர் அல்ல. அவர் பிரமதாஸ காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வேடர். ஆனால் உண்மையான வேடுவர் தலைவர் இன்னும் அதே பாணியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அம்பாரை – பிபிளை வீதியில்இபிபிளையிலிருந்து 18 மைல்தொலைவில்இஅடர்ந்த காட்டுக்குள் வாழ்க்கின்றார்கள். கடந்த ஆறுமாதத்துக்கு முன் ஒரு தகவலுக்காக அவர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களுடன் 15 நாள் வாழ்ந்தேன்.
அவர்களுக்கும்இஅதாவது இந்த உண்மையான வேடர்களுக்கும்இ கிழக்குமாகாணத்தில் பரவிக்கிடக்கும் வனக்குறவர்களுக்கும் நேரடித் தொடர்பே உண்டு.
அவர்களைப் பார்த்து நம்மவன் பரிகசிக்கின்றான். ஆனால் அவர்களை தோண்டினால்இ நம்மவர் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஓலைச்சுவடிகளும்இ ஆங்கிலேயர்கள் கொடுத்த செப்பு பட்டயங்களும் வைத்துள்ளார்கள்.
மட்டக்களப்பு என்பது பாணமைஇபொத்துவில் தொடக்கம் திருகோணமலை வரையுள்ள நிலப்பகுதியென்றே உண்மையாக அழைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான சில ஆதாரங்கள்இ கண்டியைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவழி தமிழரிடமும்இ பிபிளைஇகொட்டபோவ என்ற ஒரு இஸ்லாமியரிடமும் ஓலைச்சுவடிகளாக இருக்கின்றன.
ஆனால் எதைத் தோண்டினாலும்இ அனைத்தும் கண்டியை ஆண்ட சிறி விக்கிரம ராஜசிங்கனிலும்இ கதிர்காமம் தொடக்கம் பொத்துவில் பாணமை வரை ஆண்ட காபன் திஸ்ஸஇமகாராஜாவிலுமே வந்து முடிகின்றது.
குடும்பிமலை என்பதுஇபாணமையிலிருந்து 6 மைல் தொலைவில் உள்ள இடம். நட்டநடு காட்டுக்குள் அமைந்துள்ள இந்த மலைஇபல குகைகளை கொண்டது. ஒவ்வொரு குகையிலும்இஒவ்வொரு ஞானிகள் வாழ்ந்தார்கள். இங்கு மதம் இருக்கவில்லை. சிங்களம்இதமிழ்இஅரபிக் பேசக்கூடிய ஞானிகள் வாழ்ந்துள்ளார்கள். 1976/ 77/ 78 களில் நாம் தகவல் திரட்டுவதற்காக சென்றிருந்தோம். ஒரு பல்கலைக்கழகம் அங்கு இருந்தது.
நடுக் காட்டுக்குள் தேனையும்இவிளாம்பழத்தையும் உண்டு கொண்டு ஒரு ஞானிகள் பட்டாளம். அங்குதான் கிழக்கின் வரலாறை படிக்க கிடைத்தது.
அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில்இ வியாங்கொடை( நிட்டம்புவ )யில் இருந்து 8 மைல் தொலைவில் உள்ள ஒரு சிங்கள கிராமத்துக்கு சென்றுஇ அங்குள்ள பெரிய புத்த விகாரையில் போய் லொக்கு ஹாமுதுறு (பெரிய சாமியார்) அவர்களைச் சந்தித்தேன். அவர் ஒரு பச்சைத் தமிழன். முஸ்லீம்களின் குரானை ( குர் ஆன் ) தலைகுப்புற படிக்கின்றார். அந்த அரபி பதங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு அர்த்தம் சொல்லுகின்றார்.
அவர் தந்த தகவலின் அடிப்படையில் கேரளா காலிகட் போக வேண்டி ஏற்பட்டது.அங்குதான் கிழக்கின் பூர்வீகம் கிடைத்தது. யார் இந்த கண்ணகை அம்மன் என்ற என்ற குட்டு உடைந்தது. இவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டு விட்டுஇ மட்டக்கப்புக்கு வந்து ராஜன் செல்லப்பா ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ) அவர்களை தூர நின்று நோட்டமிட்டால்இ கழுத்தில் 40 பவுண் தங்கச் சங்கிலிஇஒரு கையில் கோள்ட் வோச்இ மறு கையில் சங்கிலியுடன் நாலடி உயர அல்சேசன் நாயை கட்டிக்கொண்டு மட்டக்களப்பு டவுணுக்குள்ளால் வீர நடை போட்டுக் கொண்டிருந்தார்.
இதே ராஜன் செல்லப்பாக்களும்இசாண்டோ சங்கரதாஸ்களும்இ முக்குவன்களும்இ காலிகட் முழுக்க நிரம்பி கிடந்தார்கள்.
அத்துடன் இந்த விடயத்தை தோண்டுவதை விட்டு விட்டேன். தோண்டினால்இ நாம் எல்லோரும் மொத்தமாக தற்கொலை செய்ய வேண்டிவரும்.
போன வாரம் சிறிலங்காவில் பாசிக்குடாஇஉல்லை பகுதிகளில் உள்ள காணிகளை வாங்குவதற்காக சிலருடன் செல்ல வேண்டி ஏற்பட்டது.
அனைத்து ஒரிஜினல் ஒப்பினை பிரதிகளும் இந்திய தமிழர்களின் பெயரில்தான் இருக்கின்றது. அவர்கள் வந்து ஒப்பமிட்ட பின்தான்
காணிகளை வாங்க முடிந்தது. அனைத்து பிரதிகளும் ஓசைசுவடிகளிலும்இ செப்பு பட்டயத்திலுமிருந்தது.
ariffchandrasri@ymail.com
ராஜன் ( எஸ் ஏஸின் ம்கன் ) அவர்கள் பூர்வீகம் யாழ்ப்பாணம் அல்லவா ? அவர்கள் பெண் எடுப்பதுவும் அங்குதானே. முக்குவரா அல்ல முக்கியரா சரியான தமிழ். ஒருக்கால் Wiki யிலும் சில தகவல்களை பார்த்தேன். எவ்வளவு உண்மை அதில் உள்ளதென்று தெரியவில்லை.
சரியான வழியில் யோசித்திருக்கீறீர்கள். புதிய விடயங்கள் பற்றியயும் குறிப்பிடுகிறீர்கள். தொடர்பு கொள்வோம். ஏதோ நாமும் மட்டக்களப்பு வரலாறு எனும் பெரும் கதையடலில் எதையாவது கிண்டிக்கிளறிப் பார்ப்போம். தொர்டபு கொள்ளவும்
விஜய்
அருமையான புதுமையான தகவல்களைத் தந்த ariffchandrasri அவர்களுக்கு நன்றிகள்.
இம் மண்ணின் ஆதிக்குடிகளான வேடுவர்களையும் 1990 ஆம் ஆண்டின் பின்னரான நாட்டு சூழ்நிலை பாதிப்புக்குள்ளாகியதை கண்ணுற்றுள்ளேன். அவ்வாறு வடமுனைக்கருகில் வாழ்ந்த பல வேடுவ குடும்பங்கள் நிர்க்கதியான போது பெண்டுகள் சேனைக்கருகில் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டார்கள்.
நோய் என்று வரும் போதெல்லாம் ஒரு வகையான ஆட்டமும் பாட்டும் இசையுமே அவர்களின் வைத்தியம். பௌர்னமி காலங்களில் அவர்களின் குடியிருப்புக்கள் திருவிழா கோலம் காணும்.
குளங்களில் சிறு ஆறுகளில் பாலாமைகளை பிடித்து வந்து அவைகளை உயிருடன் நெருப்பில் பொசுக்கி அதன் பின்னரே அவைகளை அவர்கள் வெட்டி சமைப்பார்கள். இதன் மூலம் அவைகளின் சுவைவான இறைச்சிகளை அவர்கள் எவ்வித சேதாரமுமின்றி பெறுவார்கள். சிறு குட்டைகளிலும் வற்றிய ஆற்றுப்படுகைகளிலும் நீரை இறைத்து விட்டு அதில் அனேகமாக இருக்கும் சுங்கான் எனும் மீனை பிடித்து அவ்விடத்திலேயே நெருப்பில் வாட்டி சுவையான கருவாட்டை செய்வார்கள். தேன் எடுக்கும் கலையிலும் வல்லவர்கள் அவர்கள், ஒரு தேனீ அவர்களின் கண்ணில் பட்டால் போதும் அதனை பின்தொடர்ந்து சென்றே தேனை கைப்பற்றிவிடுவார்கள்.
குடும்பிமலை என்னும் போது பொதுவாக தரவையை அண்டிய குடும்பிமலையையே அநேகர் எடுத்தியம்புவதுண்டு, ஆனால், இதனை விட பாணமையை அண்டிய குடும்பிமலையே பூர்வீக சிறப்பு வாய்ந்ததென்று நான் கருதுகின்றேன் தங்கள் தகவல்கள் ஊடாக. பன்னலகம என்னும் பகுதிக்கு செல்கையில் அதன் அழகையும் எழிலையும் அருகில் நின்று ரசித்திருக்கின்றேன், தரிசித்திருக்கின்றேன். அத்துடன் அதன் அருகிலுள்ள பல குகைகளிலும் வாழ்ந்துமிருக்கின்றேன்.
அதனை அண்டிய பகுதியொன்றில் பெரிய முரட்டு மலையொன்று கடும் கோடை காலத்தில் அதன் அருகில் குடிப்பதற்கே நீர் என்பது கிடைக்காது ஆனால் அதன் உச்சியில் ஏறினால் குளிர்ச்சியான மீனாட்சி மரங்களுடன் கூடிய இயற்கையான நீர்த்தடாகம் காணலாம், அப்போது அதில் நீச்சலடித்து குளிப்பதென்பது ஒரு கொடுப்பனவு. மாரி காலமானால் அந்த நீர்த்தடாகம் நிரம்பி பொங்கி வழிந்து அந்த முரட்டு மலையையே குளிப்பாட்டும் அழகே அழகு. அப்படியான அந்த உச்சிமலையில் நின்று பார்வையை வட்ட வடிவாக சுழற்றினால் அந்த குடும்பிமலையும் அதனுடன் கூடிய காடுகளும் மலைத்தொடர்களும் மேகக்கூட்டங்களும் கண்கொள்ளாக்காட்சியாகவே தோன்றும். இவைகள் எம் தேசம்.
உண்மைகள் எதுவாகினும் அவைகள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது அன்பான தாழ்மையான வேண்டுகோள். தங்கள் முயற்சியும் ஆக்கமும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
Guys good effort. Keep up the good work ! Kudos to you all.
அரிச்சந்திரன்>
சுவையான தகவல்களை தந்திருக்கீறிர்கள். வடமுனைப் பகுதியில் கானந்தனை வேடுவர்களின் பிரதான வாழிடம். தற்போது எவ்வாறுள்ளது என்பது தெரியவில்லை. வாகரை-கதிரவெளி வேடுவர்கள் குறித்து யுவி தங்கராஜா என்பவர் ஆய்வு செய்ததாக அறிகிறேன். ஆனால் அது பற்றிய விபரம் எதுவும் தெரியிவ்லலை. வடமுனையப் பிரதேசத்தில் குடும்பிமலை> நெலுகல் அகிய மலைகள் முக்கியமானவை. அதனருகேக தொப்pகல> மலையும் உண்டு.
விஜய்
செல்வன்,வெரிகுட்.கிட்டத்தட்ட சரியான இடத்துக்கு வந்திருக்கின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் எந்தப் பகுதியில் பெண் எடுத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. யாழ்பாணம் என்பது தீவுப்பகுதிகளை உள்ளடக்காது என்பது நினைவிருக்கட்டும்.
காலிகட்,கொச்சின்,திருவனந்தபுரம் பகுதிகளில் உள்ளவர்களை பண்டாரிக்கள் என அழைப்பார்கள்.இவர்களுக்கும் சிறிலங்கா முழுக்க பரவியுள்ள சிங்கள பண்டார ( சிறிமாவோ பண்டாரநாயக்க) க்களுக்கும் என்ன தொடர்பு. இதுக்கும் சரியான ஆதாரம் பேருவளை,மாத்தறை பகுதிகளில் உள்ள புத்த விகாரைகளிலும், இஸ்லாமிய பள்ளவாயல்களிலும் இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஹிந்துக் கோயில்கள் அனேகமானவை, இந்தியர்களாலேயே கட்டப்பட்டுள்ளன.அதிலும் குறிப்பாக,நெய்வேலி,கல்லல்,காரைக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்களாலேயே கட்டப்பட்டுள்ளது. அதிசயம் என்னவென்றால் இஸ்லாமிய பள்ளவாசல்கள் பாரசிகத்தில் இருந்து வந்த அரேபியர்களால் அத்திவாரமிடப்பட்டு,பின்னர் வந்த நம்மவர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் அந்த வம்சாவழியினர் கிழக்கு முழுக்க பரவிக் கிடக்கின்றனர். அவர்களை மனதில் வைத்துக்கொண்டு,இப்போதுள்ள இஸ்லாமியர்கள் நாங்களும் அரபி தேசத்தில் இருந்து வந்தவர்கள் என கூறிக் கொண்டிருக்கின்றனர்.
கண்டி,கம்பளை,நாவலப்பிட்டி தொடக்கம் பிபிள மொனறாகல திஸ்ஸமகறாம பாணமை கதிர்காமம் தொடக்கம் திருகோணமலை வரையுள்ள அனைத்து நிலப்பரப்பும் ஒரே ஒரு ஒரே ஒரு வருக்குத்தான் சொந்தமாக இருந்துள்ளது.
பின்னர் பிரிந்து பிரிந்து பல கைகளுக்கு போயுள்ளது. ஆச்சரியம் என்ன வென்றால் நிறைய காணிகள்,பண்டைய மன்னர்களுக்கு விசுவாசமாக உழைத்த மலையக தழிழர்களுக்கே போயுள்ளது. அவர்களிடமிருந்து கிழக்கு தமிழர்களுக்கு போய் அங்கிருந்து கிழக்கு முஸ்லீம்களுக்கு விலையாக விற்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் இன்றும் நிறைய காணிகள் மலையக தமிழர்களுக்கே இருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்த பின் நிறைய மலையகத் தமிழர்கள் சத்தமில்லாமல் கிழக்கு வந்து காணிகளை முதலீட்டாளர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு பிந்தய சந்ததியினரை மட்டுமே தெரியும். அவர்கள் வட்டுக்கோட்டை பகுதியினர் என்பது எனது யூகம். நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். எனினும் கேட்டுப்பார்து தகவல் தருகிறேன்.
வெரி குட் செல்வன்.மீண்டும் சரியான இடத்துக்கு வந்துள்ளீர்கள்.வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள். வட்டுக்கோட்டையிலும்.நல்லூரடியிலும் நிறைய பேர் வெள்ளை வெளேர் என இருப்பதை கண்ணுற்றிருக்கின்றீர்களா.அமிர்தலிங்கம்,யோகெஸ்வரன் மற்றும் பல உயர்குடியினர். இது எப்படி என எந்த ஆய்வாளர்களும் யோசிக்கவில்லை. அதையும் ஒரு ஆய்வாளர் தோண்டினார்.அந்த முடிவும் கேரளா திருவனந்தபுரத்திலேயே முடிந்தது.சிறிலங்கா முழுக்க உள்ள சகல சிங்கள பண்டாரக்களும் வெள்ளை வெளெர் என்றுதான் இருப்பார்கள்.
அமிர்தலிஙம் வெள்ளாளன் எண்டு சொல்லக்குள்ளதான் உங்கட ஆராச்சி சறுக்குது – அவர் பண்டாரம் எண்டு அல்லவோ சொல்கிறார்கள். பண்டாரனாயக்கர்கள் நாயக்கர் பரம்பரை எண்டும நாயக்கர்களும் தமிழர் எண்டு அல்லவோ சொல்லுவினம்.
அமிர்தலிங்கம்.யோகேஸ்வரன் போன்ற
வர்கள் வெள்ளை நிறம் என்று சொன்னேன்.
அவர்கள் வெள்ளாளர் என்று சொல்லவில்லை.
நன்றி ariffchandrasri, யாழ்ப்பாணத்திற்கென தனித்துவமாக நடைமுறைகளிலுள்ள தேசவழமைச்சட்டம் கூட கேரள தேசத்துடன் தொடர்புபடுவதை அதனை கற்கின்றபோது கண்டுள்ளேன். மேலும்,
அக்கரைப்பற்றிலுள்ள முஸ்லீம் மக்களுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையில் குடிவழித்தொடர்புகளும் உள்ளது என்பதையும் அறிந்துள்ளேன்.
அன்பின் அரிச்சந்திரன், ஏறாவூர்.வாழைச்சேனை தொடக்கம் திருக்கோவில்.தம்பிலுவில்.தம்பட்டை.கோமாரி.பொத்துவில்.
பிபிளை.மொனறாகலை.தெஹியத்தங்கண்டிய.புத்தள வரையுள்ள அனைத்து சிங்கள,தமிழ்,இஸ்லாமியர்களும் ஒரே தாய் பிள்ளைகள்தான்.
படையான்ட குடி.எலவக்குடி.லெப்பைக்குடி.வடக்கன்னாகுடி என அது நீழும்.இன்னொரு அதிசயம் ஆரம்பத்தில் போராட்டத்தின் பால்
கவரப்பட்டு இணைந்து கொண்ட தொண்ணூறு வீதமான தமிழ்,
இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் படையான்டகுடியை சேர்ந்தவர்கள்.
இந்த குடிவழித் தொடர்பை இப்போதைக்கு ஆராயாமல் விடுவது நல்லது.ஆராய்ந்தால் நாங்கள் அனைவரும் ஒரு தாய்
பிள்ளைகள் என முடியும். அதன் பின் கிழக்கை அனைவரும்
சேர்ந்து அழித்துவிடுவார்கள்.இந்த நிம்மதியே போதும்
என்பதால் தான் ஆய்வை இடைவழியில் நிறுத்திவிட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
அருமையான பதிவும் ஆவலைத் தூண்டும் பின்னூட்டங்களும். மேலும் வாசிக்க ஆவலாய் உள்ளது.
கிழக்கை மட்டுமல்ல சிறிலங்காவின் பண்டைய நாகரீகங்களை
தோண்டினால். ஆச்சரியங்களும்.அதிசயங்களும். சல்லாபங்களுமாகவே இருக்கின்றது. குவேனியா.விஜயனா என பல பேர் ஆய்வுசெய்ய.இந்த
அமெரிக்க ஆய்வாளர்கள். இவர்களை ஆய்வாளர்கள் என்று சொல்வதை
விட ஒட்டுக்குழுவினர் என்று அழைப்பதே பொருந்தும். சகல தகவல்
களையும் நம்மவரை வைத்தே சேகரிக்க ஆரம்பித்து பல காலம் ஆகின்றது.
உதாரணமாக 1965/66 களில் வந்த ஒரு அமெரிக்கர்.பெயர் டெனிஸ்.
நிறைய தகவல்களை திரட்டினார்.அவருக்கு கிடைத்த ஓலைச் சுவடிகள்தான். தங்கவேலாயுத புரத்தில் ( இப்போது சேருவாவில) பாரிய தங்க படிவு உண்டு. திருக்கோயிலிலிருந்து 12 கி.மி.தொலைவில்
உள்ள சங்கமான்கண்டி என்ற இடத்தில் எண்ணை படிவு இருக்கின்றது
என்ற தகவல்களை கூறியது.
ஆனால் அவை இன்னும் அடக்கியே வாசிக்கப்படுகின்றது.
கிழக்கின் மகாத்மியம் பற்றி அறிய ஆவலாக உள்ளவர்கள் முதலில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் அங்குள்ள 64 நாயன்மாரின்
சரித்திங்களை அக்குவேறு ஆணி வேறாக அறிய வேண்டும்.அதன் பின்
கன்னியாகுமரி தொடக்கம் கொச்சின்.காலிகட் ஊடாக கன்னனூர் வரை
பயணித்து அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிந்தாக வேண்டும்.
கட்டுரையாளர் விஜயன் தனது சொந்த ஊர் கிரான் என கூறுகின்றார்.
வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்தேடி அலைகின்றார்.
அவரது ஊரில்தான் முதலாவது ஓலைச்சுவடி எனக்கு கிடைத்தது.
மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு ஒரு வயோதிபர் நன்னாரி பிளேண்டி விற்பார்.ஒரு பிளேன்டீ 5 சதம்.1965 களில் அவருக்கு 65 வயதிருக்கும்.கறுத்த ஏழடி உயரமான மனிதர். கிரானில் இருந்து பொடி நடையாகவே மொனறாகலை போய் தேன் சுமந்து வந்த கதை சொல்வார்.கிட்டத்தட்ட 120 மைல்.
சகல ஓலைச் சுவடிகளும் இந்த புதையல் தோண்டுபவர்களின் கையில்
சிக்கியே நமது சரித்திரம் சின்னா பின்னமாகிவிட்டது. புதையல் தோண்டுபவர்கள் பெறுமதியான பொருட்களை எடுத்துவிட்டு
இந்த ஓலைச்சுவடிகளை காட்டிலேயே விட்டு விட்டு வந்துள்ளனர்.
அந்த ஓலைகளில் உள்ளதை வாசிக்க எம்மவர்கள் எவராலும்
முடியவில்லை. பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள
பிரபல மண்ணியல் ஆய்வாளர்களை கொண்டும் முயற்சி பண்ணி
னோம் முடியவில்லை. இறுதியில் சென்னை பர்மாபஜார் பகுதியை
அண்டிய பகுதிகளில் உள்ள நாயக்க வம்சாவழியினரைக் கொண்டுதான்
படிக்க முடிந்தது.
அமெரிக்கர்கள் ஏன் நமது ஓலைச்சுவடிகளை தேடுகின்றார்கள்
என ஒரு ஆய்வு செய்தோம்.மலைக்குகைகளில் வௌவால்கள் கூட்டம்
கூட்டமாக வாழும்.அந்த குகைகளில் வௌவால்களின் மலம்
குவியல்களாக இருக்கும். அந்த வௌவால் மலத்துடன் இன்னும்
இரண்டே இரண்டு நமது காட்டு இலையை சேர்த்து அரைத்து
உருண்டைகள் செய்தால் பாரிய வெடிகுண்டு தயார் என்ற செய்தி
தெரிய வந்தது.
போர்த்துக்கீசரும்.ஒல்லாந்தரும் இதை பீரங்கிகளில் பாவித்ததற்கு
சான்றுகள் உண்டு..
இப்போதும் புதையல் தோண்டுபவர்கள் தோண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். கிழக்கின் 75 வீதமான புதையல் பிபிளை காடு
களிலேயே புதைந்துள்ளது. சிறிலங்கா அரசு புதையல் தோண்டுப
வர்களை பிடிப்பதற்கு ஒரு படைப்பிரிவை உருவாக்கியுள்ளது.
அதிசயம் என்ன என்றால் அந்த பிரிவே புதையல் தோண்டி
கோடிக் கணக்கில் உழைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஆறுமாதத்திற்கு முதல் அவர்களுக்கு ஒரு புதையல்
கிடைத்துள்ளது. அதில் கிடைத்த மாணிக்க கல் ( அமத்திஸ்ட்)
லின் இன்றைய சிறலங்கா பண பெறுமதி 300 கோடி ரூபா.
இப்போது புதிதாக பொலன்னறுவையிலும்( கதுறுவெல) புதையலும். ஓலைச்சுவடிகளும் கிடைக்க தொடங்கியுள்ளது.
புதையல் தோண்டுபவர்கள் நவீன தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி
மலைக்குகைகளை உடைக்க பெரும் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மகியங்கனையிலுள்ள உண்மையான
வேடர்கள் சில பச்சிலைகளை இடித்து.துவைத்து மலையில் வட்டமிடுகின்றார்கள்.அந்த கல் அப்படியே கரைந்து விடுகின்றது.அந்த
பச்சிலை நமது கிராமம் எங்கும் நிரம்பிக்கிடக்கின்றது.
சமூகவிஞ்யாணத்தை விட ஓலைச்சுவடி விஞ்யாணம் பலே ஜோராக இருக்கிறது!. பச்சிலையில் எரிபொருள் தயாரித்து இந்தியாவில் கார் ஓட்டுகிறார்களாம். கேள்விப் பட்டிருக்கிறேன். நான் காணவில்லை. இனி வெளவ்வால் எச்சத்தில் வெடிகுண்டும் தயாரிக்க முடியுமென்றால் விரைவில் இலங்கையும் வல்லரசாகிவிடும்?.
ஏன்தான் தலைவர் மக்களை வருத்தி வரியும் கப்பமும் தங்கமும் வாங்கி வெளிநாடுகளில் இருந்து கப்பல்கப்பலாக வெடிமருந்துகளை கொண்டுவந்து மக்களையும் அழித்து தானும் அழிந்தாரோ தெரியவில்லை.
இப்படியே ஓலைச்சுவடி தத்துவத்தில் கால்லூண்றி நடந்தால் இலங்கைக்கு செல்வத்தை ஈட்டிக்கொடுக்கிற வெறும் 200 வருடவரலாற்றை கொண்ட மலையகமக்களின் வாழ்வும் அதோ கதிதான்.
நாம் தொடர்ந்தும் இப்படியா? சீரழிந்து போக வேண்டும்.எமக்கு மீட்சியே கிடையாதா? உழைப்பின் பெருமையைும் வலுவையும் அறியமாட்டோமா? மனிதர்களாக மாற மாட்டோமா??.
பலவிதமான மரங்களிலிருந்தாலும் எந்த இடத்துக்கு போனாலும் வேதாளம் முருங்கை மரத்தில்தான் ஏறுமாம்.
உங்களை மகிழ்ச்சி உல்லாசம் பொழுதுபோக்குகளில் யாரும் தடைசெய்ய மாட்டார்கள். ஆனால் “தமிழன்” “விடுதலை” “ஆய்வு” என்று பீலா விட்டு திரும்பவும் உழைப்பாளர் கண்களில் எண்ணை விட்டு உல்லாசம் காணாமல் ஜமாச்சு கொட்டுங்கள். வேதாளம் தன் பாட்டுக்கே போய்விடும். தொந்தரவு செய்யாது.
இனியொருவின் சிறப்பே சுதந்திரமான பின்னூட்டம். சுதந்திரமான கருத்துக்களை கொட்டும் பின்னூட்டக்காரரும் தான்.
அதற்காக வாழ்த்துக்கள்.
விஜய்
வெளிநாடு ஒன்றில் ஜேர்மன் நாசியிடம்,இந்தியப் பிராமணன் “சுவாஸ்திக்கா” சின்னத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பதையும்,நேதாஜி ஹிட்லரிடம் உறவாடியதையும் நினைவு கூர்ந்தான்.
பின் அந்த இந்தியன் “கங்காணியாக”த் தரமுயர்த்தப்பட்டான்.
தமிழினப்படுகொலையின் இறுதி நாட்கள் முள்ளிவாய்க்கால் என்றபடியால்,மட்டக்களப்பு மாந்திரீக வரலாறு,விமல வீரவன்சவால் “வேடுவ முதல்வராகப் புதிதாய்ப் பிறந்த” பிள்ளையானுக்கு,யாரோ வூடு காட்டுவதாகப் படுகிறது.
வட கிழக்கு இணைப்பை பிரித்த தலைமை நீதிபதியே,கொடுக்கல் வாங்கல் தகராறில் பிரிந்து நிற்கிறார்.வடக்கு கிழக்கைப் பிரித்து வைக்க,இந்த வரலாறு கை கொடுக்க வேண்டும்.
யாருக்கு கங்காணிப் பதவி கிடைக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
நக்குண்டு நாவிழந்தோர் எந்த வரலாற்றைக்கொண்டிருந்தாலும், அவர் நாவுக்கு எந்த வலுவும் கிடையாது. ஒன்றுபட்ட வடக்கு கிழக்கே தமிழர்களின் தாயகம்.
பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழத்துக்கள்
விஜய் எழுதிய அறியதகவல்களைக் கொண்ட கட்டுரையை மாந்திரீகம் , பச்சிலை சமாச்சாரங்களால் திசை திருப்பவேண்டாம்.
இலங்கை வாழ் மக்கள் எல்லாம் கலப்பின மக்களே. கேரளா ,தமிழ்நாடு பண்பாட்டுக்கூறுகள் கொண்டவர்கள். உண்மையான நடுநிலையான ஆய்வுகளை மேற்கொண்டால் இதை நிரூபிக்கலாம்.இங்கே முக்குவர் என்பதும் கேரளாவில் உள்ள சாதிகளில் ஒன்றே.
பண்டொரு முக்குவன்
முத்தினு போயி
பதினாரன் காட்டற்றத்து
முங்கி போயி
அரயத்தி பெண்ண தபசிருந்து
அவனை கடலம்மா
கொண்டு வந்ன்னு …..என்று செம்மீன் பாடலிலும் வரும். பெண்ணாலே பெண்ணாலே என்ற பாடல்.
வாழ்த்துக்கள் விஜய்.
யாரும் யாரையும் திசை திருப்பவில்லை சௌந்தர் அவர்களே. கட்டுரையாளர் விஜய்.இன்னும் அமெரிக்கர்களின் ஓய்வுக்கட்டுரையை வைத்து எழுதுவதா அல்லது மட்டக்களப்பு மகாத்மியத்தை வைத்துக்கொண்டு எழுதுவதா என தடுமாறுகின்றார்.அதற்காகத்தான் உண்மையான ஓலைச்சுவடிகள் இன்னும் எங்கு கிடைக்கும் என்பதற்கு ஒரு வழிகாட்டினோம்.
நாம் அப்படி தடுமாறி அலைந்த வேளையில் ஓலைச்சுவடிகளில் கண்ட சிலதை கோடிட்டு காட்டினோம்.நன்றி
தமிழருக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இருந்ததில்லை. ஒரு உதாரணம் நீராவிதான் ! நாம் அதில் அவித்து அவித்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் அதுதான் பெரும் சக்தியாக கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டும் உள்ளதே.
நிற்க. அதற்காக எப்போதும் அப்படியே வாழந்து விட முடியாது.
நம் கடந்த காலத்தில் அறிவயலற்ற முறையில் கூறப்பட்டவற்றை- மாந்திரிகம்-மருந்து-எல்லாவற்றையும் அறிவயில் நோக்குடன் ஆராய வேண்டும். அதன் பின்ன அதில் ஏதும் இருக்கிறதா இல்லையா என முடிவெடுக்கலாம். விஜய்
தமிழ்னாட்டிலும் முக்குவர் ஜாதி உண்டு.பெரும்பாலும் மீனவர்கள்.
இது ஒரு சோதனை முயற்சி
சில வருடங்களுக்கு முன் நான் றகங்கலை – குருத்தலாவைப் பகுதியில் பணியாற்றியபோது ஒரு நாட்காலை தூரத்தில் மட்டக்களப்பில் கண்ணகியம்மன் குளுத்திச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களின் அதே இசையில் ஆனால் சிங்களத்தில் ஒலி பெருக்கியில் சப்தம் வருவதை அவதானித்தேன். என்னுடனிருந்த ஓர் முஸ்லீம் நண்பரிடம் விசாரித்தபோது, அவர் அது பத்தினி தேவாலயத்தில் நடைபெறும் சடங்கில் பாடப்படுகின்றது எனப் பதில் சொன்னார். அதுபற்றி நான் அந்த நேரத்தில் அதிகம் அக்கறை எடுக்கவில்லை. தற்போது யோசிக்கும்போது சிங்களவர்களின் பத்தினி தேவாலயச் சடங்குகளுக்கும் தமிழர்களின் சடங்குகளுக்கும், பாடப்படும் பாடல்களுக்கும் ஓர் ஒற்றுமை இருப்பது புலனாகின்றது. இது பற்றிய மேலதிக ஆய்வுகளைச் சம்பந்தப்பட்ட கட்டுரையின் ஆசிரியரோ அன்றி வேறு யாருமோ செய்ய முடியுமாயின் பலவிடயங்களளை அறியக் கூடியதாயிருக்கும். இவ்வளவு காலமும் வேற்றுமைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த நாம் இனிமேலாவது ஒற்றுமைத் தன்மைகளையும் சற்று நோக்குவது நல்லது என்பதால் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறேன்.
பண்டைய சிங்கள வரலாற்று நூல்களினாலும் மட்டக்களப்பு வரலாற்று நூல்களினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள பல பொய்மைக் கட்டமைவுகளை உடைத்து புதிய விடயங்களைக் கண்டறிவது மிகப் பெரிய பணி !
சிக்கலான கனதியான வேலை. யாராவது இணைந்து கொண்டால் சில முன்னேற்றங்களை எட்டலாம்.-விஜய்
ஓர் ஆய்வை ஆரம்பத்திலேயே முன் அனுமானத்துடன் தொடங்குவது பொருத்தமாகாது. எல்லாம் பொய் என்னும் முடிபினை வைத்துக்கொண்டு ஆய்வைத் தொடங்காமல்> உள்ளவற்றிலிருந்து நல்லவற்றைக் காண முற்படுவதும் மேலும் ஆய்வுகளைத் தொடர்வதுமே சிறப்பானது. என்னால் முடிந்த ஒத்துழைப்பை உங்களுக்குத் தரத் தயாராய் இருக்கிறேன்.
http://www.thamilarivu.com / .co.uk
அவுங்க டெஸ்காட்டீசோட முறைய பின்பற்றுறாங்க போலிருக்கு.
நான் குறிப்பிட்ட விடயம் இலங்கை வரலாறு மற்றும் மட்டக்களப்பு வரலாறு எழுதப்பட்டுள்ள முறை குறித்த நீண்ட கால விமர்சனம். அதனைக் கடந்து செல்ல முடியாது என்றே கருதுகிறேன். ஆயினும் சரிதிட்டமான முடிவுகளை நாம் புறக்கணிக்க முடியாது என்பது மட்டுமல்ல மிக நீண்ட காலத்திற்கு முற்பட்ட வரலாற்றை எழுதுகையில் உள்ள சிக்கல்களையும் புரிந்து கொள்ள வேண்டும். எனது கட்டுரை விமர்சனத்தை நம்பி முடிந்த முடிவுகளாக எதனையும் முன்வைக்கவில்லை. நன்றி விஜி
MMMMM
டெஸ்க்காட்டடீஸ் என்பவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவர் ஒரு தத்துவவியலாளராக இருக்கக் கூடுமென்றே எண்ணுகிறேன். அவரது அணுகுமுறைகள் சாதாரண தொல்லியல் ஆய்வு முறைகளுக்குப் பொருந்தக் கூடுமோ தெரியவில்லை. இங்கே அப்படியெல்லாம் வழிமுறைகளைப் பின்பற்றி ஆய்வுசெய்ய ஒன்றுமில்லை. கிடைக்கக்கூடிய தொல்லியல் சான்றுகளை வைத்தும்> தற்போதுள்ள தகவல்களை வைத்தும் ஓர் ஆய்வினைச் செய்து அதனை ஓர் நூலாகவோ அல்லது கட்டுரையாகவோ வெளியிட முடியும். அவ்வளவே. இருப்பினும் இனிவரும் காலங்களில் தக்க உசாத்துணைகளுடன்கூடிய ஆய்வுத்தகவல்களை வெளியிட்டு ஒரு நவீன காலத்துக்குரிய முன்மாதிரியோடு கட்டுரைகளைச் சமர்ப்பிக்க தமிழறிஞர்கள் முன்வரவேண்டும். அதுவே தமிழை அறிவியல் ரீதியில் முன்னேற்ற உதவும்.
http://www.thamilarivu.com
ரெனெ டெஸ்கடேஸ் தான் நீங்க படித்க கோடினேற் ஜோமெட்றிய கண்டுபிடிச்சவர். அதனாலதான் காட்டீசன் கோடினேற் என்ற சொல் வந்தது. அவரது உன்மை கண்டறிடயும் முறை எல்லாவற்றையும் பிழைஎன்று ஆரம்பித்து உண்மையை கண்டறிவது. சும்மா ஒருக்கா கூகிழ் பண்ணிப்பாருங்க.
கிடைக்கக்கூடிய தொல்லியல் சான்றுகளை வைத்தும்> தற்போதுள்ள தகவல்களை வைத்தும் ஓர் ஆய்வினைச் செய்து அதனை ஓர் நூலாகவோ அல்லது கட்டுரையாகவோ வெளியிட முடியும்.
விடயம் இத்துணை எளியதாகத் தெரியவில்லை. பலலரும் – மானிடவியலாளர்-வரலாற்றாய்வாளர்- ஒன்று கூடி செய்ய சவண்டிய காரியம் போல் தெரிகிறது.
பல்வேறு தெளிவற்ற பகுதிகளுக்கு சரியான விடை காணவேண்டியிருக்கிறது என்பதே தற்போதைக்கு தெரிய வரும் உண்மை
விஜய்
நல்ல தகவல். ஆள் கூறுகளை உயிரியல் விஞ்ஞானத்தின் சில ஆய்வுகளிலும்> புள்ளிவிபரவியல்> பொருளாதாரம் போன்றவற்றிலும் மெலிதாக பிரயோகித்துப்படித்ததைத் தவிர ஆள்கூற்றுக் கேத்திர கணிதத்தை முழுமையாகக் கற்றேனல்லேன். ஆரம்ப நிலைத் திரிகோண கணிதத்திலும் காட்டீசியன் எங்காவது எட்டிப்பார்தாரா என்பது இப்போது ஞாபகமில்லை. ஆனாலும் அவர் மட்டக்களப்பு வரலாற்றுக்குள் தற்போது வந்திருப்பது மட்டைக்களப்பான் என்ற வகையில் பெருமையளிக்கிறது.
http://www.thamilarivu.com / .co.uk
பட்டய கெளப்புங்க மட்டக்களப்பு கரு. இன்னும் ஒரு தகவல், பெரும்பாலான விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு வித்திட்டதே பிலோசோபர்கள்தான். நியூட்டனும் ஒரு பிலோசோபர்தானே.
Prabaharan is too from Kolam/quailon(kerala),Amirthalingam is notbelong to pandaram cast , portugal,holand army rapeid our jaffna during that period.Ever month army in chief need elephants,foods,meat amoung these we shold offer a fresh vergin girl to that army.in this way they changed our color,not from kerala pandaram,
பண்டாரம் என்தும் தமிழ்னாட்டில் ஒரு ஜாதிஉன்டு!!!
நாம் (வீரசைவர்கள்) யார் ?
ஓம் நமசிவாய,
அனைவருக்கும் வணக்கம்
நாம் அனைவரும் சித்தர் வழி வந்த தொன்மையான இந்தியகுடி மக்களில் ஒருவர்கள்.
புலி பாணி மற்றும் கோரக்கர் போன்ற சித்தர் வழி வந்த மரபை சார்ந்தவர்கள்.
நம்முடைய குல தெய்வம் சிவன் மட்டுமே. இப்புவியில் சிவன்சேவை செய்யவே நாம் அவதரிக்க பட்டோம்.
பொதுவாக சிவனை ஆராதிக்க 18 வகையான வழிபாட்டு முறைகள் உள்ளது. அதில் மிக உயர்த்த கடவுளுக்கு நெருக்கமான தாந்த்ரீக வழிபாட்டு முறைகளை நாம் கடைபுடிக்கிறோம். இந்த பழைமையான தாந்த்ரீக வழிபாட்டு முறைகள் முதலில் காஷ்மிரி வீரசைவர்களால் உருவாக்கப்பட்டது. அந்த வழிபட்டு முறைகளை பின்னாளில் தமிழ் மற்றும் கன்னட வீரசைவர்களால் கடைபிடிக்கபட்டது.
இந்த வீரசைவர் இன மக்கள் சுமார் 4கோடி பேர் இந்திய முழுவதும் பரவி வாழ்கின்றனர். இதில் கர்நாடகாவில் மட்டும் சுமார் 2கோடி மக்கள் வாழ்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர, தெலுங்கான மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மிக அதிகமா பரவி வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும் தோரயமாக 25லட்சம் மக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இனம் மற்றும் மொழியால் வேறுபட்டாலும் அந்த ஈசனை வணங்கும் கொள்கைகளால் ஒருவரே. அந்த ஈசனின் அருளால் நம் மக்கள் உலகின் பல துறைகளில் மிக உயர்த்த இடத்தை அடைந்திருகிறார்கள். கர்நாடக மற்றும் இந்திய அரசியலை தீர்மானிக்கும் மிகபெரிய சக்தி மிக்க மக்களாக நாம் வாழ்கின்றோம். கர்நாடகவில் மட்டும் ஒன்பது முதலைச்சர்கள், ஒரு இந்திய குடியரசு தலைவர், அதிகமான மத்திய அமைச்சர்கள் இந்த வீரசைவ மக்களில் இருந்து வந்தவர்களே. இன்றைய அரசியல் மட்டும் அல்ல , பழங்காலங்களில் கர்நாடகாவில் பல அரசவம்சம்கள் இந்த வீரசைவர்களாகவே இருந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கம்கள் வீரசைவர்களால் மட்டுமே பூஜை செய்யபடுகிறது. இதுவே நாம் சிவனுக்கும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதர்க்கு ஒரு சான்று.
ஒரு காலத்தில் தமிழகத்தின் பல சிவாலயங்கள் வீரசைவர்களால் தமிழில் மட்டுமே பூஜிக்கப்பட்டது, பின்னாளில் சோழர்களின் காலத்தில் பல அரசிய சூழ்ச்சிகளால், அனைத்து சிவாலயங்களில் இருந்தும் வீரசைவர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் செய்யும் ஆகம வழி பாட்டுமுறைக்கு கொண்டுவரப்பட்டது. வீரசைவர்களோட சேர்ந்து தமிழும் சிவாலயங்களை விட்டு வெளியேறிவிட்டது. அதனால் இங்கு வாழும் தமிழ் வீரசைவர்கள் வறுமையின் காரணமாக கிராமங்களில் உள்ள சிறுதெய்வங்களை வழிபாடு செய்யும் நிலைக்கு தள்ளபட்டார்கள். மேலும் பழனி தண்டாயுதபாணி நவபாசன சிலையை உருவாக்கியவர் போகர், அவரின் முதன்மை சீடரான புலிபாணி சித்தர் வழிவந்தவர்கள்தான் இந்த வீரசைவ பழனி ஆண்டி பண்டாரதார்கள், இவர்களின் கட்டுப்பாடு மற்றும் வழிபாடு முறைகளுக்குதான் பழனி கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து வந்தது. பின்னாளில் வந்த நாயக்கர் காலத்தில்தான் பழனி கோவிலில் இருந்து வீரசைவர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் செய்யும் ஆகம வழிபாட்டுமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
சூழ்ச்சியால் ஒடுக்கப்பட்ட நம் இன மக்கள் மீண்டு எழ மீண்டும் ஒரு வாய்ப்பு அந்த ஈஸ்வரன் அருளால் வழங்கப்பட்டுள்ளது. இதுவே நாம் வீரசைவர்களாக ஒன்றுபட நமக்கு கிடைத்த மிகபெரிய வாய்ப்பு. ஒன்றுபடுவோம் தோழர்களே.
வருகிற 19-06-2016 அன்று மதுரை மாநகரில், நமது “வீரசைவ மாநில மாநாடு ” கர்நாடக முன்னாள் முதல்வர் திரு. எடியுரப்பா, இஸ்ரோ தலைவர் திரு. கிரண்குமார், மத்திய அமைச்சர் திரு.சித்தேஸ்வரா மற்றும் நம்முடைய மாநில தலைவர் திரு. நாகரத்தினம் அவர்கள் தலைமையில் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்ந்துகொண்டு விழ சிறப்புபெற வேண்டுகிறோம்.
நன்றி
ஓம் நமசிவாய ..
ஜெய் பசவேஸ்வரா..
இவன்,
ஸ்ரீ கணேசன் லிங்கதார்.