ஈழத்தமிழ் அகதிகள் மிருகங்கள் போன்று நடத்தப்படும் தமிழ் நாட்டில் சினிமா நடிகர்கள் ஈழத் தமிழ் ஆதரவாளர் போல நடிக்கப்பதற்கு புலம்பெயர் நாடுகளில் திரைப்படங்களுக்கான வியாபாரமே பிரதான காரணம். போருக்குப் பின்னரான அவலங்கள், தென்னிந்திய சினிமாக் கலாச்சாரத்தின் வன்முறைக்குள்ளும் பாலியல் வக்கிரங்களுக்குள்ளும் மறைக்கப்படுகின்றன. இக்கலாச்சார அழிப்பின் பின்னணியில் இலங்கை அரச ஆதரவாளர்களும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தம் படைகளும் தமது வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துகின்றன.
புலம் பெயர் நாடுகளில் ஈழம் பிடித்துத் தருகிறோம் என்று போலி விம்பத்தை மக்களுக்கு வழங்கிவரும் இவர்களின் நடவடிக்கைகள் இலங்கையிலும் மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.
இது அப்பாவி மக்களின் தவறல்ல அவர்களின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளே இங்கு குற்றவாளிகள்.
பேரினவாத அரசு அழித்துமுடிக்கும் ஈழத் தமிழக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளை தென்னிந்திய சினிமாக்கள் அழிக்கின்றன.
தேசியம் பேசும் விதேசிகளின் வியாபார முகமூடி கிழிக்கப்பட்டு புதிய புரட்சிகரக் கலாச்சாரத்திற்கான அடிப்படைகள் உருவாக்கப்படுதல் என்பது இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Ms. Navi Pillay got a three year extension. They need an assisted return like the Afghan refugees in Pakistan. All are dragging their feet. Sri Lankan Tamils are now pawns in power play. They did change the course of history..
கருணாவின் கட்டவுட்டுக்கோ அல்லது பிள்ளையானின் கட்டவுட்டுக்கோ பால் ஊத்தியிருந்தால் பாராட்டியிருக்கலாம் ஏனென்றால் அவர்கள் ஒருகாலத்தில் விடுதலைக்காக போராடியவர்கள்