கடந்த 13-ஆம் தேதி காஷ்மீர் மக்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய கொளத்தூர் மணி உள்ளிட்ட 46 பேரைக் கைது செய்து வேலூர் சிறையிலடைத்தது தமிழக போலீஸ். இன்று இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் சிறை வாயிலில் நிருபர்களிடம பேசிய கொளத்தூர் மணி,காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக சென்னை சைதாபேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். பின்னர் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. இதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டோம். தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு மீது நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான் இலங்கை மீனவர்களுடன் ராமேஸ்வரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தவிறவும் தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக சக்திகள் போராட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை தாமதமின்றி உடனடியாக தொடங்க வேண்டும். இது தமிழக அரசின் கடமை. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி வழக்கம்போல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் மக்கள் போராட்டம்தான் அதற்கான விடிவை தேடித் தரும் என்றார்.