இன்று யாழ்ப்பாண நகரில் மக்கள் போராட்ட இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் வரை கலந்துகொண்டனர். யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு விட்டு உள்ளூர் ஊடகமொன்றின் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மக்கள் போராட்ட இயக்கத்தினர் பயணம் செய்த வாகனத்தின் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்றைய தினம் யாழ். நகரில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு விட்டு குடாநாட்டிலுள்ள ஊடக நிறுவனத்திற்கு மேற்குறித்த இயக்கத்தின் சார்பில் அதன் உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பயணம் செய்துள்ளனர்.
இந்தச் சமயம் இவர்கள் பயணித்த வாகனத்தைப் பின்தொடர்ந்த இராணுவப்புலனாய்வாளர்கள். வாகனத்தின் முன்புறமாகவும், பின்புறமாகவும், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதுடன், கடுமையாக சிங்கள மொழியில் தூற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவா மக்கள் போராட்டம்!!!! முதாலளித்துவத்திடம் கையேந்துகிறார். மக்கள் போராட்டகாரர்.
ஐரோப்பிய ஒன்றிய தலையீட்டைக் கோருகிறது மக்கள் போராட்ட இயக்கம்
திங்கட்கிழமை, 19 டிசெம்பர் 2011 04:09 (கெலும் பண்டார)
யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட தமது யாழ் மாவட்ட அமைப்பாளர் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முரளிதரன் ஆகியோரை விடுதலை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரவுள்ளதாக ஜே.வி.பியிலிருந்து பிரிந்த மக்கள் போரட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.
இவ்விருவரும் இனந்தெரியாத நபர்களால் கடந்த 9 ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டனர். இக்கடத்தல் தொடர்பாக அரசாங்கத்தின் மீது அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கொழும்பிலுள்ள பல்வேறு வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களின் தலைவர்களிடம் நேரஅவகாசம் கோரியுள்ளதாகவும் அவர்களுடன் இவ்வாரம் மக்கள் பேராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளதாகவும் அந்த இயக்கத்தின் அரசியல் விவகார செயலாளர் புபுது ஜாகொட கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய, சீனா, கியூபர் தூதுவர்கள் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோருடனும் சந்திப்புக்கு அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்க்கட்சி தரப்பிலுள்ள இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் இதற்காக ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் புபுது ஜாகொட தெரிவித்தார்.
தமிழ்மிரர்.
அவர்கள் நல்லநோக்கத்துடன் யாழ் சென்றனர், அவர்களுக்கு ஏற்பட்டநிலைமக்கு அரசே பதில் சொல்ல வேண்டும்