கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை வழங்கி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த சேவையை நிறுத்துமாறு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்காக அபராத தொகை செலுத்தவும் தொலைத்தொடர்பு துறை செயலாளர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 67,719 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே 3ஜி ஒப்பந்த சேவையை நிறுத்தி விட்டதாகவும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. தொலை தொடர்புத்துறையின் உத்தரவினால் 3ஜி சேவையைப் பயன்படுத்தும் ஒருகோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், ஆபரேட்டர்களும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.
உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் கால்பதிக்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஒரு புறத்தில் நடைபெற மறுபுறத்தில் இவற்றின் ஏஜன்டுகளான அன்னா ஹசாரே போன்றோரும் மேற்கின் நிதி உதவியில் இயங்கும் பல் தேசிய நிறுவனங்களும் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுப்பதாக மக்களை ஏமாற்றுகிறார்கள்.