மட்டக்களப்பு மாவட்டத்தின்,காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ள நிவாரணத்தில் மோசடி செய்யப்பட்டதைக்கண்டித்து ஆரையம்பதி பிரதேச மக்கள் இன்று காலை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கினர். ஆயிரக்கனக்கான மக்கள் ஒன்று திரண்டு இப்போராட்டத்தை நடாத்தினர்.
வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பிரதேச செயலாளரின் ஆசியுடன் கிராம சேவகர்களினால் பதுக்கப்படுவதைக்கண்டித்தே இப்போராட்டத்ரதை நடாத்தியதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 7 மணியளிவில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆரையம்பதி இணைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு முறைப்பாடுசெய்த போராட்டக்காரர்கள் 8 மணியளவில் பிரதேச செயலகத்தையடைந்து அங்கு பதுக்கப்ட்ட நிவாரணப்பொருட்களை வழங்குமாறுகோரி பாரிய ஆர்ப்பாட்ம் மற்றும் போராட்டங்களிலீடுபட்டனர்.
அலுவலகத்தின் கதவுகளை உடைத்து பொதுமக்கள் உள்ளே நுழைந்து அதிகாரிகளைக்கடுமையாக தாக்கினர். அலுவலகத்தின் பல கதவுகள், ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஸ்தலத்திற்கு விரைந்த உதவி அபாலிஸ் அத்தியட்சசகர் கே வீ அல்விஸ்,காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் பண்டார ஆகியோர் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
ஆராயம்பதி பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்களை காவற்துறையினர் தாக்கி விரட்டியுள்ளனர்:-
நிவாரண உதவிகளை பெறுவதற்காக இன்று காலை மட்டக்களப்பு ஆராயம்பதி பிரதேச செயலகத்திற்கு சென்ற சுமார் 5 ஆயிரம் மக்களை காத்தான்குடி காவற்துறையினர் தாக்கி, அங்கிருந்து விரட்டியடித்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பலர் ஆரயம்பதி பிரதேசத்தில் இருப்பதுடன் இவர்கள் அனைவரும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களாவர். கடந்த மூன்று தினங்களாக இந்த மக்களுக்கு எவ்விதமான நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனவும் உணவுகள் கிடைக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை ஆரயம்பதி பிரதேச செயலகத்திற்கு நிவாரண தொகையொன்று கிடைத்துள்ளது. இதனை அறிந்து கொண்ட பிரதேசவாசிகள் சுமார் 5 ஆயிரம் பேர், நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளனர். கிடைத்துள்ள நிவாரணப் பொருட்கள் அங்கு வந்திருந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க போதுமானதாக இல்லை என்பதால், காத்தான்குடி காவற்துறையினர் வரவழைக்கப்பட்டு, மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பிரதேசத்தில் அரசியல்வாதியொருவரின் தலையீடு காரணமாகவே தமது நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட மக்கள் அங்கிருந்து செல்லாவது பிரதேச செயலக வளாகத்தில் காத்திருக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்தே காவற்துறையினர் மக்களை தாக்கி அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
1ஆம் இணைப்பு:- ஆரையம்பதி பிரதேச செயலகம் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது :
வெள்ள நிவாரணத்தில் மோசடி செய்யப்பட்டதைக்கண்டித்து ஆரையம்பதி பிரதேச மக்கள் இன்று காலை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இப்போராட்டத்தை நடாத்தினர்.
வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பிரதேச செயலாளரின் ஆசியுடன் கிராம சேவகர்களினால் பதுக்கப்படுவதைக்கண்டித்தே இப்போராட்டத்தை நடாத்தியதாக பொது மக்கள் தெரிவித்தனர்
நன்றி : உலகத் தமிழ்ச் செய்திகள்.