“மக்களை எமக்கு எதிராக திருப்பிவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். நவம்பர் மாதம் 22ஆம் திகதி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளியேறுமாறு அவர்கள் கேட்டனர். இதுவரை என்னால் மாற்று வீடு ஒன்றை தேடிக்கொள்ள முடியாததால் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கின்றேன்.
என்னை ஒரு வெளியாரைப் போன்று நடத்துகிறார்கள்.
40 வருடங்கள் சேவையாற்றிய பின் கனத்த இதயத்துடன் இராணுவத்தை விட்டு வெளியேறுகிறேன். எனது பாதுகாப்பைக் குறைப்பதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்த பின்னர் எனது உயிருக்கு ஆபத்து எதிர்நோக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் எனது பாதுகாப்புக்கு 600 வீரர்கள் தரப்பட்டது. அவர்களை 25 ஆக குறைத்த போது நான் அதனை ஆட்சேபித்தேன். அதனால் பாதுகாப்பு வீரர்கள் 70 ஆக அதிகரிக்கப்பட்டனர்.
எனது அலுவலகத்தை விலக்கிக் கொண்டாலும் எனது வீட்டை மாத்திரம் பாதுகாக்கவே 70 பேர் போதாது. பொது வைபவங்களுக்கு நான் செல்லும் போது எனக்கு மேலதிக பாதுகாப்பு தேவை.
இராணுவ தளபதி என்ற வகையில் பல தடவைகள் இந்திய உயர் அதிகாரிகளுடன் எனக்கு தொடர்புகள் இருந்தன. இரு நாடுகளும் நல்ல உறவுமுறையை பேணி வருகின்றன. நான் இந்தியா மீது பெருமதிப்பு வைத்திருக்கின்றேன். ஊடக விரோத போக்கை கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பினரும் என்னை விமர்சிக்கின்றனர்.
எப்பொழுதுமே நான் ஊடக சுதந்திரத்தை ஆதரிப்பவன். ஊடகங்கள் மக்களை தவறான வழியில் இட்டுச்சென்ற சந்தர்ப்பங்கள் உண்டு. அந்த சந்தர்ப்பங்களில் அதனை சுட்டிக்காட்டி நான் அவற்றின் தவறினை திருத்திக் கொண்டேன். நான் ஊடக விரோதி என்பது வெறும் பிரசாரமேயாகும்.
முதலில் அனைவருக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கச் செய்வேன். இலங்கை ஊழல் அற்ற நாடாக இருக்க வேண்டும். நீதியான சமுதாயம், ஊடக சுதந்திரம், மத ஜனநாயகம், அயல் நாடுகளுடன் நல்லுறவு, மனித உரிமை பேணல் ஆகியன குறித்தும் கவனம் செலுத்தப்படும்