மகிந்த ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க இலங்கைக்கு வெளியில் வசித்துவருகின்றார். லசந்தவின் நினைவாக இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே இன்றைய எமது கடமை எனக் கூறும் இவர் அதற்கென இணையத் தளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். தங்கள் பெயருடன் அல்லது பாதுகாப்புக் கருதி பெயர் குறிப்பிடாமலும் தங்கள் பங்களிப்பையும் நிபுணத்துவத்தையும் இணையத்தள வளர்ச்சிக்கு வழங்கலாம் என்று அந்த இணையத்தளம் தனது கொள்கையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களிப்புக்கள் ஆழமான ஆய்வுகள், செய்திகள், அபிப்பிராயங்கள் சிறிலங்காவிற்கு முக்கியமானதாகக் கருதப்படும் முக்கிய விடயங்கள் குறித்த விமர்சனங்கள் ஆகியன அடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் 1992ஆம் ஆண்டிற்கு பின் 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத் தளத்தின் முகவரி:
www.lankaindependent.com
லசந்த விக்கிரமதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சண்டே லீடர் இணையத் தளம் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்சவினால் விலைக்கு வாங்கப்படுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரச எதிர்ர்பு இணையத் தளங்கள் பல மேற்கு சார்ந்த தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கள் கட்டுப்பாட்டினுள் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சோனாலியின் இணையம் குறித்த மேலதிக தகவல்களைப் பெற முடியாத நிலை காணப்படுகிறது.