பேர்சி மகிந்த ராஜபக்ச 18ம் திகதி நவம்பர் மாதம் 1945ம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள வெருக்கட்டியா என்ற கிராமத்தில் பிறந்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் 8 குழந்தைகளில் மூன்றாமவர் பேர்சி மகிந்த ராஜபக்ச ஆவர். மகிந்த ராஜபக்ச தனது கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில்(GCSE(A/L)) சித்தியடையவில்லை. சிறீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் லிகிதராக வேலைக்குச் சேர்ந்த மகிந்த 1970ஆம் ஆண்டு தனது தந்தையின் பாராளுமன்ற வேட்பாளர் இடத்தை நிரப்புவதற்காக வேலையிலிருந்து விலகிக் கொள்கிறார். அப்போது தனது 24ம் வயதில் இலங்கை வரலாற்றில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிறார். இத்தகவல்களை கொழும்பு ரெலிகிராப் இணையம் விக்கிலீக்ஸ் கேபிள்களிலிருந்து பெற்று வெளியிட்டுள்ளது. இத் தகவல் கொழும்பு அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.