தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதனால், தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். என போலி கம்யூனிஸ்ட் கட்சியைசியின் தலைவரான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற தலைப்பில் அதன் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாத சந்தர்ப்பவாதக் கட்சிகள் சமூகத்தின் சாபக்கேடாக முளைத்து நிற்கின்றன.
டியூ குணசேகர மகிந்த ராஜபக்சவின் பயங்கரவாத அரசில் அமைச்சர்.
நாட்டில் மும்மொழியறிவு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை கம்யூனிஸ்டுக்களே அறிமுகப்படுத்தி அதற்கான போராட்டங்களிலும் ஈடுபட்டனர் என்பதை வசதியாக மறந்துவிடும் போலிக் கம்யூனிஸ்டான குணசேகரவின் பேஇனவாதக் கருத்துக்கள் தேசிய இன முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும்.