இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிறேசிலின் றியோடிஜெனீரோ நகரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். பிறேசிலில் நடைபெறும் றியோ பிளஸ் 20 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய – இலங்கைத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு குறுகிய நேரமே இடம்பெற்றுள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன் அவரது செயலர் லலித் வீரதுங்கவும், இந்தியப் பிரதமருடன் அவரது செயலரும், சந்திப்பின் போது உடனிருந்தனர். எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட வாய்ப்பில்லை என்று முன்னதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர், மன்மோகன்சிங்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
What is happening in Geneva is just an exercise in human rights enforcement on a global basis. Sri Lanka became a covenient Guinea pig. That is all to it and that is far removed from the realities and the day to problems in the North and East.