இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் இளைய சகோதரர் குமாரசிங்க சிரிசேன சிறீ லங்கா ரெலிகொம் இன் தலைவராக நியமிக்கப்பட்டமை தெரிந்ததே. குடும்ப ஆட்சியை நிறைவுக்குக் கொண்டுவருவதாக தேர்தலில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த மைத்திரிபால ஒரு வாரங்களின் உள்ளாகவே தனது சகோதரரை இலங்கையில் மல்ரி பில்லியன் வியாபாரத்திற்கு தலைவராக்கியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மைத்திரிபாலவின் நேரடி உத்தரவை அடிப்படையாகக் கொண்டே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நியமனக் கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபயகோன் கையொப்பமிட்டுள்ளார்.
மைத்திரிபால சிரிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிரிசேன முன்னதாக லங்கா ரிம்பர் கோர்பரேசன் இன் தலைவராக 2006 இலிருந்து பதவை வகித்துள்ளார். தவிர இலங்கை அரசால் நிர்வகிக்கப்படும் ‘காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி’ (Land Reclamation & Development Company Ltd) நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் இயக்குனராகவும் 2013 ஆம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கிறார்.
2005 ஆம் ஆண்டு ராஜபக்ச அதிகாரத்கைக் கையகப்படுத்தி ஒரு வருடங்களுக்கு உள்ளாகவே காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி சபையின் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டன. புதிய சட்டத்தின் அடிப்படையில் சட்டவிரோதக் காணிகளையும், நீர் மாசடையும் நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் காணிகளையும் கையகப்படுத்தும் அதிகாரம் சபைக்கு வழங்கப்பட்டது. ராஜபக்ச அரசு நிலப்பறிப்புச் செய்வதற்கும் இந்த அதிகார சபை பயன்படுத்தப்பட்டது. இதற்காக நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் இயக்குனராக 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ராஜபக்சவின் நம்பிக்கைக்குரிய குமரசிங்க சிரிசேன நியமிக்கப்பட்டார்.
இச்சபை முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கவந்தது. நகர அபிவிருத்தி சபையுடன் இணைந்து ராஜபக்ச ஆட்சியின் கீழ் இச் சபையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.
மக்களின் நிலங்களைக் கொள்ளையடித்து பல்தேசிய நிறுவனங்களிடம் தரகுப் பணத்தைப்பெற்றுக்கொண்டு காணிகளைத் தாரைவார்த்துக் கொடுத்த கோத்தாபயவின் அடியாளாகச் செயற்பட்ட குமாரசிங்க சிரிசேன இப்போது மல்ரி பில்லியன் வியாபாரமான சிறீ லங்கா ரெலிகொம் இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம் கிடைத்த முதல் நாள் சிறீ லங்கா ரெலிகொம் இனுள் நுளைந்த குமாரசிங்க சிரிசேனவைவிடம் அங்கிருந்த தலமை நிர்வாகி, புதிய ரெலிகொம் அமைச்சரான மங்கள சமரவீரவிடமிருந்து தமக்கு உத்தரவு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த குமாரசிங்க தான் ஜனாதிபதியின் சகோதரர் என்றும் அவர் தன்னை தலைவர் பதவிக்கு நியமித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
22ம் திகதி காலை பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்காக சிறீ லங்கா ரெலிகொம் அலுவலகத்துள் நுளைந்த குமாரசிங்க சிரிசேன ஒரு பிக்குகள் கூட்டத்தோடு சென்றிருந்தார். அங்கே சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சமய விழாவிற்கு குமாரசிங்க சிரிசேனாவினால் அழைக்கப்பட்டிருந்த அவரது நண்பர் ரஞ்சித் ரூபசிங்கவும் வந்திருந்தார்.
ரஞ்சித் ரூபசிங்க ராஜபக்ச ஆட்சியின் போது மொபிரெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரரியாக்ச் செயற்பட்டவர். அவ்வேளையில் நிறுவனத்தைச் சூறையாடிய ரூபசிங்க பல கோடிகளைக் கொள்ளையிட்டதாக ஊழியர்கள் கருதினர். மைத்திரிபால ஆட்சியில் அமர்ந்த நான்கு நாட்களுக்குள் மொபிரெல் ஊழியர்கள், ரஞ்சித் ரூபசிங்கவைக் கைது செய்து விசாரணை செய்யுமாறு மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தனர்.
சிரிசேனவின் சூறையாடல் ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறியே இது. ராஜபக்ச குடும்ப ஆட்சி நடத்தி பேரினவாதத்தின் பெயரால் நாட்டைச் சூறையாடிய போது பல ஊடகங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இன்று மைத்திரியுடன் இணைந்துள்ள பல கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. கடந்த ஒன்பது ஆண்டுகள் லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ராஜபக்ச குடும்பத்திடமிருந்து அதிகாரத்தைத் தனது கைகளுக்கு மாற்றிக்கொண்ட சிரிசேன மற்றொரு அரசியல் குடும்பத்தை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்.
Maithiri brother better than mahinda’s relation. He is actually qualified person.