கடந்த மே மாதம் 30ம் திகதி கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிக் குண்டுத்தாக்குதலில் பலியான இளைஞன் ரொஷேன் ஷானகவின் இறுதிக் கிரியையானது அரசியல், தொழிற்சங்க உரைகள் மற்றும் ஊர்வலங்கள் ஏதுமின்றி கத்தோலிக்க மதப் பிரகாரம் குடும்பத்தவரது நன்றியுரையோடு மட்டுமே நடைபெற வேண்டும் என மினுவாங்கொட நீதவான் திருமதி கேமா ஸ்வர்ணாதிபதி கட்டளையிட்டுள்ளார்.
பலியான இளைஞன் ரொஷேன் ஷானகவின் சகோதரனால் வழங்கப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்துப் பார்த்ததன் பிற்பாடே நீதவான் இந்த உத்தரவை இட்டுள்ளார். இம் மரணத்தின் மூலம் பலவிதமான அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முயற்சிப்பதனாலேயே மேற்படி உத்தரவைப் பெற்றுத் தரும்படி பலியான இளைஞனின் சகோதரன் நீதிமன்றத்தை வேண்டியிருந்தார்.
பலியான இளைஞன் ரொஷேன் ஷானகவின் இறுதிக் கிரியைகள் ஜூன் மாதம் 04ம் திகதி சனிக்கிழமை மாலை நடைபெற இருக்கிறது.