கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதுந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிக அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, கொலன்னாவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் நிழல் உலக மாபியாக்களுள் ஒருவரான துமிந்த போது இடத்தில் தனது எதிராளியைக் கொலைசெய்யும் போது காயமடைந்தவர். தவிர, போதை பொருள் கடத்தல் உட்பட பல்வேறு அரசியல் கொலைச் சம்பவங்களோடு துமிந்த தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், துமிந்த சில்வா படுகாயமடைந்திருந்தார்.நீண்ட காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.