நேற்று (19/12/2011) பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்பாக மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. மகிந்த பாசிச அரசிற்கு எதிரான சுலோகங்களைத் தாங்கியவாறு சிங்களத்திலும் தமிழிலும் முழக்கங்களை எழுப்பினர். மகிந்த அரச கூலிப்படைகளால் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக் காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
முப்பது வருடப் போராட்டத்தில் இழப்புக்களைச் சந்தித்த புலம் பெயர் தமிழ்ப் பேசும் மக்கள் இப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்கவில்லை. தென்னிந்தியச் சினிமாக் காரர்களின் குத்தாட்ட நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்கும் தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதி போக இன்னொரு பகுதியினர், புலி சார் புலம் பெயர் அமைப்புக்களின் களியாட்ட நிகழ்வுகளில் மூழ்கிப்போயுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிரான போராட்டங்களை களியாட்டங்கள், அறிக்கைகள் ஊடாகத் திசைதிருப்பி அவற்றை மளுங்கடிக்கும் இவ்வமைப்புக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே இரகசிய ஒப்பந்தங்கள் இருக்கலாம் எனப் பரவலாகச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எது எவ்வாறாயினும் மகிந்த பாசிசத்தைப் பலவீனப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன என்ற உண்மை நேற்றைய போராட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.
மகிந்த அரச பாசிசத்திற்கு எதிரான பதாகைகளோடும் முழக்கங்களோடும் புதிய திசைகள் அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் மற்றும் புதிய திசைகள் அமைப்பினர் போராட்ட முடிவில் உரை நிக்ழத்தினர். தமிழில் புதிய திசைகள் அமைப்புச் சார்பில் உரை நிக்ழத்திய பாலன், மகிந்த அரசைப் பலவீனப்ப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் இன்று அவசியமானவை எனக் குறிப்பிட்டார்.
இரயாகரனின் இரு பிரதினிதிகள் 5நிமிடம் போராட்டத்தில் கலந்து கொண்டனரே அதை நிங்கள் தெரிவிக்கவிலையென இரயா அண்ணா ஒரே புலம்பல்
2வந்த்தவங்கள் துண்டு பிரசுரம் குடுத்துப்போட்டு துண்டைக்காணோம் துணியக்காணோ,ம் என்று ஒடிட்டினமாம், இதுக்குள்ள புலம்பல் வேற..
புதிய திசைகள் அமைப்புச் சார்பில் உரை நிகழ்த்திய பாலன் மகிந்த அரசைப் பலவீனப்படுத்தும் மக்கள் போராட்டங்கள் இன்று அவசியமானவை எனக் குறிப்பிட்டார். என்று இதில் எழுதியுள்ளீர்கள். ஆனால் பின்னூட்டத்தில் கருத்தெழுதிய கங்காவும் மாமணியும் எந்த அரசில் அடிப்படையில் இராயாகரனை இதற்குள் வம்புக்கிழுக்கின்றனர். எனக்கு அதனைப் புரிய முடியவில்லை. மகிந்தவின் அரச அடாவடித்தனங்களை தமிழ்க் குறுந்தேசியப் பித்தலாட்டம் நடாத்தும் நாடு கடந்த அரசாங்கத்தினைத் தூக்கிப் பிடிப்பதன் மூலமா சீர்குலைக்க முடியுமென இவர்கள் நினைக்கிறார்கள்.
நீஙக்க நாடுகடந்த அரசு, குறுந்த்தேசியம். புலிகள் பூனைகள் என்று எப்படித்தான் குற்றஞ்சுமத்தினும் அது இனிமேல் யாரும் நம்பப்போவதில்லை. உங்களை திருத்திக்கொள்ள கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் வாருங்கள்.
+1 #1 RE: காணாமல் போன தமிழருக்காக போராடிக் காணாமல் போன சிங்களவர் — Sumana S 2011-12-21 13:36நீங்கள்இந்த கட்டுரையில் ” புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் புதிய திசைகளைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அதில் பங்கு கொண்டனர்” என குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் இன்யோருவும் புதியதிசைகளும்
தாம் மட்டுமே பங்கு பற்றியதாக கூறுகிறனர் . புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கண்டன அறிக்கை வெளியிடதயோ அல்லது போராட்டத்தில் பங்கு கொண்டதையோ அவர்கள் இருட்டடிப்பு செய்துள்ளனர் . காரணம் தமக்கு
மட்டும் மக்கள் போராட்ட இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என காட்டவேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது என நினைக்கிறன்.
நீங்கள் இங்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் பங்கு கொண்டது என எழுதியதால் தான் பொது மக்கள் நாம் தெரிந்து கொண்டோம் . இப்படியான
இருட்டடிப்பு செய்வதனால் குறுகிய காலத்தில் சில தனி நபர்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம் . ஆனால் இப்படியான அரசியல் மக்கள் நலன் சார்ந்ததல்ல .Quote