பிரதம நீதியரசர் ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் குற்றவியல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சகல வழிகளிலும் போராடப் போவதாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கத் தெரிவித்துள்ளார் என டுவிட்டர் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டத்தரணிகளிடம் ஷிரானி பண்டாரநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போன்ற நாடுகளில் நீதிமன்றக் கட்டமைபின் ஊடாகக் கூட எதையும் சாதிக்க முடியாது என்பதை சிங்கள மக்களும் உணரும் நிலை உருவாகிறது.
மகிந்த பாசிசம் தனது கொல்லைப்புறத்திலேயே குறங்களையும் சுமத்தி தீர்ப்பையும் எழுதுகிறது. நீதியரசரின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜனநாயக முற்போக்கு சக்திகளின் குரல் அவசியமானது.