நோவேயியபாரளுமன்றக்கட்டிடத்தில் முள்ளிவாய்கால் 3ம் ஆண்டு நினைவுக் கூட்டம்
முள்ளிவாய்காலின் 3ம் ஆண்டு துயரைப்பகிர்ந்து கொள்ளும் முகமாக நோர்வேயில் செவ்வாய்கிழமை 15.05.2012 அன்று பாராளுமன்றத்தின் தொழிற்கட்சியின் குழுமக்கூடத்தில் ஒன்று கூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்றைய முக்கியஸ்தர்களாக சுரேஸ் பிரேமச்சந்திரனும் முன்னை நாள் சுற்றுச்சூழல் அபிவிருந்தி அமைச்சரும் இலங்கையின் சமாதானத்தூதருமான எரிக் சூல்கெய்மும் பிரசன்னமாகி இருந்தார்கள். சுரேஸ் பிரேமச்சந்திரனைத் தொடர்ந்து எரிக் பேசினார். முதலில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இவருடைய கருத்துகள்களை பதிவு செய்தபின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்து பதிவுசெய்யப்படுகிறது.
ஏகபோகங்கள் எவ்வாறு தமது நலன்களுக்காக சில கணங்களுக்கு உள்ளாகவே தமது கருத்துக்களை மாற்றிக் கொள்கின்றன என்பதற்கு எரிக் சூல்கெய்ம் ஒரு உதாரணம்.
‘நான் இங்கே பிரதான விடயமாகிய தமிழர்களின் இன்றையநிலையும் எதிர்காலநடவடிக்கைகள் பற்றியும் பேசுமாறு பணிக்கப்பட்டுள்ளேன் என்று ஆரம்பித்த எரிக் சூல்கெய் அவர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகக்களை அள்ளிவீச ஆரம்பித்தார். அங்குள்ள தமிழர்களும் அவர்கள் தலைமையுமே தமது தலைவிதியை மதிப்பீட வேண்டுமே தவிர வெளியில் இருந்து எதையும் மதிப்பீடு செய்யவோ எதிர்பாக்கவோ முடியாது. இருப்பினும் நான் எனது நண்புரீதியான மதிப்பீட்டை நான் இங்கு கூறவிளைகிறேன். தமிழர்கள் சர்வதேசசமூகம் இலங்கைத்தமிழர்களின் பிரச்சனையில் தலையிட்டு மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு தீர்வை எட்டமுயற்சிக்க வேண்டும். அதற்கு தமிழர்கள் எப்படி தமது கைகளை சர்வதேசத்தை நோக்கி நீட்டுகிறார்கள் என்பதிலேயே இது தங்கியுள்ளது. சர்வதேசத்தைக் குற்றம் கூறிக்கொண்டு அவர்களிடன் இருந்து எப்படி உதவியை எதிர்பார்க்க முடியும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமானது. நான் இங்கு சொல்லப்போவது உங்களில் பலருக்குக் கசப்பாக இருக்கலாம். தனியே மகிந்தராஜபக்சவைக் குற்றம்சாட்டுவதினூடாக மட்டுமே தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடாது.
சிறீலங்கா ஒரு விசித்திரமானநாடு. உள்நாட்டுப்பிரச்சனைகளைத் தீர்க்க வெளிநாட்டு உதவிகள் உள்ளே வரும்போது மற்றைய நாடுகள் அதைவரவேற்கும் ஆனால் இலங்கையில் அத்தனை நல்நோக்கங்களும் உதவிகளும் எதிர்க்கப்படும். நான் அடிக்கடி நியாயமற்றமுறையில் பலதடவைகள் சௌனிய சிங்கள ஊடகங்களால் வெள்ளைப்புலி என்று குற்றம் சாட்டப்பட்டேன். போரின் இறுகிக்காலகட்டங்களில் கில்லறி கிளின்டனும், டேவிட் மினபாங்கும், நானும் தலைமைப்பயங்கரவாதிகளாக பதாகைகளில் தூக்கப்பட்டோம். சிறீலங்காவை உலகநாடுகளில் இருந்து தனிமைப்படுத்த முன்நின்று உழைக்கும் பயங்கரவாதிகள் நாங்கள் என்றே சிங்களத்தீவிரவாதிகளால் வர்ணிக்கப்பட்டோம். இதில் தமிழ்நெட்டும் குறைந்து விடவில்லை இவர்களும் போரின் இறுதிக்கட்டப்பேரளிவுக்கும் பிரபாரனின் முடிவுக்கும் எனது மதிப்பீடே காரணம் என்று குற்றம் சாட்டி எழுதினார்கள்.
நான் அரசியல் இடைத்தரகராக இருந்தபோது ஐ.நா சபையில் இரண்டாவது ஸ்தானத்தில் இருக்கக்கூடியவரும், பாங் கி மூனின் சகோரதராகக் கருதப்படுபவருமான ஜெனரல் நம்பியாரிடம் உயர்பாதுகாப்பு வலையத்தை எப்படி உருவாக்குவது, கையாளுவது என்று அறிவுரை செய்வதற்காக இலங்கையரசால் அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய பதிவுக்கோர்வை உடனடியாகவே இலங்கை அரசாலேயே நிராகரிக்கப்பட்டது. புலிகள் அதை நேரடியாக மறுதலிக்கவில்லை. இதன்பின்னர் நம்பியாரிடம் இருந்து எதையும் கேட்க முடியவில்லை. இப்படியான நடைமுறைகளே உலகநாடுகளின் நம்பிக்கையையும் தலையிடுகளையும் தடுத்தன. இதன்விளைவே இறுதிக்கட்டப்போரில் தமிழர்களின் பேரவலமாகப் பரிணாமம் பெற்றது.
அன்றைய இந்தியப்பிரதமரான இராஜீவ்காந்தியைக் கொன்றமை, இலக்ஸ்மன் கதிர்காமரை கொன்றமை, இலங்கை சர்வதேசவிமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தாக்குதல் போன்றன புலிகள் சர்வதேசத்தின் நன்மதிப்பை இழப்பதற்குக் காரணமாக இருந்தது. அயல்நாடான இந்தியாவின் அனுசரணை என்பது இலங்கைக்கு அவசியமானது. இராஜீவ்;காந்தியைக் கொன்றுவிட்டு இந்தியகாங்கிரசில் செல்வாக்குக் கொண்ட அவரின் மனைவியிடம் இருந்து எப்படி நல்ல அனுரசணைகளை எதிர்பார்க்க முடியும். அமெரிக்க ஜனாதிபதியைக் கொன்றுவிட்டு அமெரிக்கா நோக்கி எப்படி உதவிக்கரம் நீட்டமுடியும்?
இப்படியான நடவடிக்கைகள் சர்வதேசத்தின் நன்முயற்சிகளுக்குத் தடையாகவே அமைகின்றன. உண்மையின்படி தமிழர்களும் அரசும் உலகநாடுகளின் உதவியை மனதார வரவேற்பதே விருப்புக்குரியது.
பிரபாகரன் பலஆண்டுகளாகவே அதிகாரம் கொண்டவராக தனிமைப்படுத்தப்பட்டே இருந்தார். நான் நினைக்கிறேன் முதன்முதலில் சந்தித்த வெள்ளையன் நானாகத்தான் இருக்க முடியும். அரசியல், உலகஜதார்த்தங்களை சொல்லவோ, அறிவுரைவளங்கவோ யாரும் இருக்கவில்லை. அன்ரன் பாலசிங்கத்துக்கு அதற்கான உரிமை இருந்தது. அவர் இறந்ததும் அந்தச்சந்தர்பமும் இழக்கப்பட்டது. இந்த செயல்திட்டத்தை சர்வதேசங்கள் செய்திருக்கலாம். பிரபாகரனை அணுகி அலசி ஆராய்ந்து ஒரு சுமூகமான முடிவை எட்ட முயற்சித்திருக்காலாம், பேசியிருக்கலாம்.
புலிகள் யாழ்பாணத்தை விட்டு துரத்தப்பட்ட பின்னர் அமைதிக்காக அரசியல்தீர்வு நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டும். அதைச்செய்யவில்லை
2002ல் புரிந்துணர்வு ஒப்பந்தகாலத்தில் சர்வதேச அழுத்தங்களின் பின்னர் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட மாநிலசுயாட்சி ஒன்று வடகிழக்குக்காக முன்மொழியப்பட்டு அனைவராலும் ஆதரிக்கப்பட்டு இறுதியில் பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டபோது அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இராணுவவெற்றிகளால் ஒவ்வொரு இடத்தையும் புலிகள் இழந்து தோல்வியைச் சந்தித்தபோதுகூட புலிகள் திடமான அரசியல்முடிவை எட்டமுயற்சிக்கவில்லை. அதுமட்டுமல்ல பல்லாயிரம் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டு இராணுவம் முன்னேறும் போது கூட புலிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தோல்வி என்பது உறுதி அரசியல் தீர்வுதான் ஒரேவழி என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
இன்நிலையில் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதனூடாக இலக்குகளை அடையமுடியாது. இது இன்னமும் சிக்கல்களையே ஏற்படுத்தும். இன்றுள்ள நிலைப்படி தமிழர்கள் சுயமாக அரசியலைவரையறுத்து சரியான இலக்குகளை தெரிவுசெய்து ஐக்கிய இலங்கை என்னும் வரம்புக்குள் செயற்படுவது அசியமானது. இன்று இலங்கைக்குள் இருக்கும் சர்வதேச அழுத்தங்கள் இதற்கு உதவியாக இருக்கும். சர்வதேசமும் இதற்கே உதவிசெய்யவும் விரும்பும்.
இந்தத்தமிழர்களின் பிரச்சனையானது உள்நாட்டு அரசியல்தீர்மானங்களால் நிறைவேற்றப்படவேண்டியது அப்படி இல்லாவிடில் சர்வதேசங்களின் அனுசரணையுடன் எட்டப்படவேண்டியது. அதற்கான சந்தர்ப்பம் உள்ளது என்பதை ஐ.நா மனிதவுருமை மன்றின் தீர்மானம் சுட்டுடிக்காட்டியுள்ளது. நானறிந்தவரை முதல்தடவையாக இப்படியான ஒன்றுக்கு இந்தியா வாக்களித்திருப்பது ஒருமுக்கியமான மைல்கல் என்பதை மறந்துவிடலாகாது. இந்தப்பேரவலம் நடந்து முடிந்து 3ஆண்டுகள் கடந்தும் தமிழர்களின் அடிப்படைப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது. வடக்குக்கிழக்கின் சுயாட்சியோ, சிங்கள,தமிழ், இஸ்லாமியரின் சமவுரிமைகளுக்கான ஆரம்பமோ இன்னும் காணப்படவில்லை. இதை நடைமுறைப்படுத்தவேண்டியது இன்று அதிகாரத்தில் இருக்கும் மகிந்தராஜபக்சவின் அரசே.
தொடர்ந்து சூல்கெய் பேசுகையில் இன்று இலங்கையின் பெருமொழிகளாக சிங்களம் தமிழ் இரண்டுமே உள்ளன. இதன் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நல்ல முடிவுகளைக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் கூறுகையில் சர்வதேசத்தின் கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து செய்யப்படுவது அவசியமானது. அவையாவன ‘சர்வதேசமானது இலங்கையில் எந்தவடிவமான பலாற்காரத்தையோ ஆயுதப்போராட்டத்தையோ ஆதரிக்காது’ ‘ நாட்டைக் கூறுபோடுவதை அனுமதிக்காது’ பல்லினம், பல்லின்காலாச்சாரம், பல்மதக்கோட்பாடுகள் கொண்ட சமஉரிமையுள்ள, சமபெறுமதியுள்ள ஒரு ஐக்கிய இலங்கையையே சர்வதேசம் ஆதரிக்கும்’ ‘ அதாவது ஐக்கிய இலங்கைக்குள் வலுவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட சுயாட்சியையோ, அதற்குக் குறைவான மாநிலசுயாட்சியையோ, அதாவது பெடரல், கொன்-வெடரல், அதிகாரநிறைவேற்று வடிவங்கொண்ட எதாவது ஒன்றையோதான் வடகிழக்கிற்கு கிடைப்பதையே உலகநாடுகள் எதிர்பார்க்கின்றன: இதைத்தெரிந்து கொள்ள ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு வந்துபடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அயல்நாடான இந்தியாவிலேயே இதைக் காணலாம்.
இந்தியா பல்லினக் கலை, கலாச்சார, மத, இனங்களைக் கொண்ட நாடு. இவர்கள் சமஉரிமையுடனேயே வாழ்கிறார்கள். வித்தியாசமான மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் வித்தியாசம் வித்தியாசமான வலுவான சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒற்றுமையுடனான ஒரு மாநிலசுயாட்சி நடைபெறுகிறது.
இவர்தன்பேச்சின் இறுதியில் தமிழர்கள்தான் தமது அரசில்குறிகளையும் தேவைகளையும் தாங்களாகவே ஐக்கிய இலங்கைக்குள் தீர்மானிக்க வேண்டும் என்பதையே உலகநாடுகள் விரும்புகின்றன. இலங்கையரசால் ஏற்றுக்கொள்ளப்படா நியாயமான கோரிக்கைகள் உலகநாடுகளின் அழுத்தத்தின் கீழ் நிறைவேற்றுவதற்குக் சாத்தியங்கள் உண்டு. தமிழர்களின் பலமான முயற்சிகள் உலகநாடுகள் தமதுபிரச்சனைக்காகக் கைகொடுக்க வேண்டும் என்பதே. இதற்காக சர்வதேசங்களுடன் பேசவேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.
பலர் நம்புகிறார்கள் இலங்கைப்பிரச்சனைதான் சர்வதேசங்களின் நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் இருப்பதாக. ஆனால் நாம் யதார்த்தத்தை உணர்தல் அவசியமானது. ஏதோ ஒருசிலதடவைகள் மட்டும் பராக்உபாமா இலங்கைப்பிரச்சனை பற்றிக் கதைத்துக் கலந்துரையாடியுள்ளார். இன்றைய முக்கியபிரச்சனையாக வோசிங்டனில் இருப்பது உலகத்தை உலுப்பும் பொருளாதாரப்பிரச்சனையே. அடுத்து இருப்பது அமெரிக்காவுக்கு வெளியில் உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, ஈரான், எகிப்த், லிபியாவினுடைய வௌ;வேறு பிரச்சனைகளே. எதுவானாலும் சிறீலங்காவின் பிரச்சனை முதலிடத்தைப் பெறவில்லை. ஒருவருடத்துக்கு முன்னர் மியன்மாரின் பிரச்சனை முக்கிய இடத்தைப்பெற்றாலும் அது நிகழ்ச்சி நிரலின் முதல் 10க்குள்ளேயே வரவில்லை. பின்னர் மீண்டும் உலகநாடுகளின் ஆர்வம் இலங்கைநோக்கித் திரும்பியது. சமாதானத்தை தனித்து நின்று ஏற்படுத்த முடியாது. இலங்கையின் பங்களிப்பும் தேவை. த.தே.கூ தேர்தலில் வெற்றியடைந்தது மிக முக்கியமான நேர்வினையாக(நேர்குறியாக)வும் அமைகிறது. உங்களில் பலர் என்னைவிட மேற்படிப்புகளைக் கொண்டவர்களாக உள்ளீர்கள். அதனால் செயற்திட்டங்களை சிறந்தமுறையில் திட்டமிட்டு அமைக்கும் வலுக்கொண்டுள்ளீர்கள். இருப்பினும் இலங்கையின் தலைமைகளில் இருந்தே முடிவுகள் எட்டப்படவோ வெளிக்கொண்டு வரப்படவோ வேண்டும். சகலசிங்களவர்களும் தமிழர்களின் பிரச்னைதீர்ப்பதில் உடன்பாடுள்ளவர்களாக இல்லை. முஸ்லீம்களின் பிரச்சனையும் முன்னராகவே வெளியில் கொண்டுவந்து நீட்டப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம் சகலவினங்களுக்குமான சமஉரிமை, சமபெறுமதியுள்ள அரசியலையே முன்மொழிகிறது. கரங்களை உலகநாடுகள் நோக்கி நீட்டுவதனூடாகவே முடிவுகள் இலகுவாக எட்டப்படலாம்.
தனியே மகிந்தராஜபக்சவைக் குற்றம்சாட்டுவதினூடாக மட்டுமே தமிழர்களின் பிரச்சனை தீர்ந்துவிடாது,,,, என்ற கூற்றை எரிக் கூறவில்லை என்பதை குறிபீட விரும்புகின்றேன், அதே சமயம் அவ்ர் புலிகலின் தவறை சுட்டிக்காட்டுவது இது முதல் தடவை அல்ல, இதற்கு முன்பு ப்லதடவை இதே விமர்சனத்தை அவர் வைத்துள்ளார், ராஜபக்ச பதவிக்கு வர உதவியவர்கள் புலிகல் எனவே அவர்களின் முட்டாள் தனத்தை கூறுவதில் தப்பிலை, ஆனால் ராஜ்பக்ச பதவிக்கு வந்ததும்நல்லதே அதனால் தான் புலிகலின் அட்டகாசத்துக்கு முடிவு வந்ததது
அடுத்த கட்டத்துக்கான ஆய்வினை தொடரலாமே . போதும் இவை .
சர்வதேசம் தான் கிழக்கு தீமோரை. கொசோவோவை, கிழக்கு சூடானை என்று பலநாடுகளை உருவாக்கியது. இது சொல்கைய்முக்கு தெரியாதோ. சர்வதேசம் தான் மிலசோவிக்கை சர்வதேசநீதி மன்றம் கூட்டி வந்தது. சர்வதேசம் தான் ஈராக்கில், லிபியாவில் எகிப்த்தில் ஆட்சியாளர்களை அகற்றி மக்கள் ஆட்சிக்கு வித்திட்டது. இவை எல்லாம் இவருக்கு என்ன தெரியாதோ. அது என்ன சிறிலங்காவை மட்டும் பிரிக்க முடியாதாம். இதற்கு உல்கம் ஆதரவு தராதாம் என்று விழுந்து அடித்துக் கொண்டு உரை ஆற்றுகிறார்: இவெர் யாருடைய பின்னணியில் இயங்குறாரோ…உலகில் எல்லாமே மாற்றம் அடையும். எமக்கான காலமும் நேரமும் ஒருநாள் வந்தே தீரும். ஆனால் அது வரைநாம் ஈழத்தமிழர் எல்லாரும் இருபோமா, இல்லை இறப்போமோ தெரியாது. மேய்ய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகள் எப்படி ஊர் போய்ச் சேரும்?
அவருக்கு தெரியாது தங்களுக்கு தெரிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழனாக ஊர்போய் சேராவிட்டாலும் கனடாக்காரனாகவும் பிரான்ஸ்சுக்காரனாகவும் பிரித்தானியன் ஜேர்மன்காரனாகவும் பிறந்தயிடம் பார்த்து வருகிறார்கள்.
கோழிகுருடாக இருந்தால் நமக்கென்ன கறிருசியாக இருந்தால் சரிதானே!.இது தமிழனுக்கும் விலக்கப்பட்ட கோட்பாடு அல்லவே! எது இருந்தபோதும் இனியொரு முள்ளிவாய்கால் வரவே வராது. தமிழன் விரும்பவும் மாட்டான். மேய்ப்பான் இல்லாத மந்தைகளாக மேயவிடுவதே எமதுயினத்திற்கு நல்லது மல்லால் பாதுகாப்பானதும் கூட.
அட என்ன அருமையாக கேஸ் விடுறார். உவருக்கும் எல்லாமே தெரிந்திருக்கும்பேலதான் கிடக்குது.
அவர்களுக்கு தேவை இருந்தது. அதனால் பிரித்துவிட்டாரகள். அது உமக்கு விழங்கவில்லையோ.
குரங்கு கையில் பூ மாலையாக புலிகலிடம் இருப்பதை விட மேய்ய்ப்பன் இல்லாத செம்மறி ஆடுகளாக இருக்கலாம்
பிரிந்த நாடுகளைப்போய் பார்த்தால் தெரியும். அங்கே என்னென்ன நடக்கின்றன என்று.
Great photo shot. S. P. Thamil Selvan said that people capable of taking decision did not come there. Minister Nimal Sripala de Silva of Badulla said on Deepavali Day – what have India got to say? I heard that he is a lawyer. Come to Indiana, USA. 1964. Evan and Birch Bayhs. Both are lawyers. Call our Dr. Bill at 812-237-2418.
ராஜ்பக்ச பதவிக்கு வந்ததும்நல்லதே அதனால் தான் புலிகலின் அட்டகாசத்துக்கு முடிவு வந்ததது” பு
லிகளின் அட்டகாசம் முடிவுக்கு வந்தது இருக்கட்டும். இப்போ மற்றவர்களின் அட்டகாசம் புலிகளைவிட மோசமாக இருக்கிறதே. புலிகள் முடிந்தார்கள் என்பதற்கு அப்பால் எமது அப்பாவி மக்களும் அனியாயமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை எப்படி மதுவால் சீரணிக்க முடிகிறது. என்னவிமான மனிதர் நீங்கள்?
புலிகல் இருந்த போது அப்பாவிகள் கொல்லப்படவில்லையா, என்னவாக இருந்தாலும், மனித உயிர் விலை மதிபறறது,
கபுலிகள் மக்களை தங்களுக்கு கேடயமாக வைத்திருந்தபடியால் தான் ராணுவத்தின் செல் அடிக்குள் அகப்பட்டு இறந்தார்கள் என்பது உங்களைப்போன்றவர்களால் ஏன் ஏற்றுக்கொள்ளடுடியபமல் இருக்கின்றது என்று விழங்கவில்லை. ராணுவத்தின் மீது பழிவிழுவதற்காகவே புலிகள் மக்களையும் தம்மோடு வலுக்கட்டாயமாக அழைத்து;சென்றார்கள். விலமையாக இருக்கும்போது சமாதானம் பேச வரமாட்டாதவர்கள் சர்வாதிகாரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலிகளினூடாக மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மக்கள் இறந்துகொண்டிருக்கும் போது காப்பாத்த வராத சர்வதேசம் இறந்தபின் வந்து ஒப்பாரி போடுவதின் நரித்தனம் என்ன என்பது இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை. சர’வதேசத்திடம் போய் தமிழீழத்தைத் பிரித்துத்தா என்று கேட்பது இரண்டு பூனைகள்போய் குரங்கிடம் அப்பத்தை பிரித்துத்தா என்று கேட்பது போலுள்ளது.
சரியாகச் சொன்னீர்கள். உண்மையில் சர்வதேசத்தின் கண்களில் மக்கள் இன்றும் தெரியில்லை.
மதிப்புக்குரிய நோர்வே நக்கீனாருக்கு,
உங்களின் கடடுரை பயனுள்ளதாக இருநதது. ஆயினும் ஒரு சிறிய கேள்வி, ஏகாதிபத்திய நலனிற்கா தான் இந்த போர் நடை பெற்றதா இல்லையா என்பது பற்றி உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
Rathan, Norway got punished for not stopping the war. The final battle. Look like it is General Sarath Fonseka and not President Mahinda Rajapakse that was the key player about the war.
உங்களில் பலர் என்னைவிட மேற்படிப்புகளைக் கொண்டவர்களாக உள்ளீர்கள். உங்கள் பிள்ளைகளும் திறமையானவர்களாக உள்ளார்கள். ஆனால் உங்களுக்கு அரசியலில் திறைமயாக செயற்படுவதற்கு தேவையான பொது நலம் இல்லை என்ற கருத்துப்படவே இது கூறப்பட்டது. இக் கூட்டத்திற்கு நானும் சென்றிநருந்தேன்.
ஒருவர் என்ன சொன்னார் என்று இன்னொருவர் எழுதுவது இலகுவான காரியம் இல்லை.
Ever since I came back home in 1997 many had been telling me to contest elections. I did not want to end up like Nimalan Master and Kingsley Rasanayagam. I am also born in December 1950. In Oxford, England now they call it Human Sciences.
Norway did not know that In 1999 they have recruited Brigadier Sarath Fonseka from the Vavuniya Garrison of the Sri Lanka Army. Brigade Head Quarters here at Batticaloa finished mapping the assets of my family.
அன்புக்குரிய நோர்வே நக்கீனாருக்கு,
ஏன் இந்த மவுனம்? உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
பரதன்! மெளனத்தக்குக் காரணம் என்னை வெளிக்கொணராது இருப்பதே. நான் என்றும் என்சமூகத்தை கல்லடித்த சமூகம் என்றே வர்ணிப்பது உண்டு. காரணம் எமக்குத் தெரிந்த மற்றமொழிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கால் பெருவிரலில் இரத்தம் ஒழுகவரும் ஒரு ஆங்கிலேயரையோ: நோவேயியரையோ கேட்டால் “என்காலால் கல்லுக்கு அடித்துவிட்டேன்” என்பார். நாம் எப்படிச் சொல்வோம் “கல்லடித்துவிட்டது” என்போம். எங்கோ சும்மா இருந்த கல்லுக்கு நாம் அடித்துவிட்டு கல்லடித்துவிட்டுது கல்லுப்பறந்து வந்த எமக்கு அடித்தமாதிரி கல்லில் பாரத்தைபோட்டு விட்டுத் தப்பி விடுவோம். இப்போது எனது பதில் என்ன என்பதை அறிந்திருப்பீர்கள். இறுதியில் நடந்தது எரிகிறவீட்டில் பிடுங்கியது மிச்சம் என்று யாவரும் தமது பங்கிற்கு ஆடியும் ஆடிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதே எனது கருத்து. “மக்கள் ; மனிதம் ” என்பன யாவருக்கும் பொதுவானதும் பொறுப்பானதும் என்பதை யாவரும் மறந்துவிட்டார்கள். ஒரு தார்மீகமுள்ள எந்த அரசாயினும் மக்கள் வதையை செய்திருக்கக் கூடாது அதை எந்த நாடும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதன்படி பார்த்தால் போரில் ஈடுபட்டவர்களுக்கும்: பார்வையாளரான நாடுகளுக்கும் சுயலாமமே முன்னின்றது எனலாம். இதில் ஐ.நா.சபையும் அடங்கும். நான் என்ன சொல்கிறேன் என்பதைக் குறிப்பாகப் புரிந்திருப்பீர்கள். இது ஒரு தர்ம அடியல்ல கரும அடி அப்பாவி மக்களுக்கு கறும அடி.
என்சமூகத்தை கல்லடித்த சமூகம் என்றே வர்ணிப்பது உண்டு., என தாங்கள் கூறுவது தங்கள் யாழ்ப்பாண சமூகத்தையா,நான் அதனை கள் அடித்த சமூகம் என்றேநினைக்கின்றேன், ஏனெனில் போதையில் இருக்கும் ஒருவருக்கு தான் தான் மற்றவர்களை விட சக்த்தி மிக்கவர் மேதாவி என்ற எண்ணம் இருக்குமாம், யாழ்ப்பாண சமுகமும் அப்படியா? சமீபத்தில் இலங்கைக்கு ஏன் பலநாடுகல் புலிகலை தோற்கடிக்க உதவின என்பதற்கு ஒருவர் ஒரு காரணம் சொன்னார், அதாவது அமெரிக்காவும் இஸ்ரேலும் செய்தா ஆராய்ச்சிகளில் யாழ்ப்பாணத்வர் யூதர்களை விட கெட்டிக்காரர்கள் என்பது தெரிய வந்த்தால் புலிகல் ஒடுக்க அமெரிகா உதவியதாம்,
இந்தவருடத்தின் நல்ல ஒரு கடி ஜோக்
யாழ்பாணத்தைக் குறை சொல்லுவது ஒரு ஸ்ரையிலாய்போச்சு நட நட என்று நடந்த நடாத நாடாக்கள் கல்லடிக்காது கள்ளடிப்பது நியாமாதே. யாழ்பாணத்தானே மற்றவனை யாழ்பாணத்தான் என்பதுஹ ஹ தன்னைத்தானே கேலியாக்கும்
இகதைத்தான் பலர் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதைக்கூட விழங்கிக்கொள்ளாத படித்தசமுதாயமாக நாங்கள் இருக்கின்றோம்.
அய்ரோப்பா வாழ் புரட்ச்சிக் கண்ல்கள் பற்றி…..
1. Mச் Dஒனல்ச் இவர்கள் உணவும், Cஒச-Cஒல பானமும் இல்லாமல் இருக்கமாட்டார்கள்.
2. Cஒம்புடெர் பங்கருக்க்ள் இருந்து மக்கள் தொடர்புகள் எதுவும் இல்லாமகல் எழுதி எழுதி குவித்தால் புரட்சி வந்துவிடுமாம்.
3. தினம் தினம் யாராவது ஒருவரை திட்டி திர்த்தாலும் புரட்சி வந்துவிடுமாம்-
American President Barrack H. Obama took a photo with Sri Lankan President Mahinda Rajapakse and son Namal at the United Nations in New York, USA, because his predecessor was the Governour of Texas. Ronald Reagan was Governour of California. Lobbying itself is word that originated in Washington, District of Columbia, USA, after General Ullysses Grant became the President after the American Civil War.
Gotha’s War. I want to write a book titled, Arasady to America. They have extended the term of Ms. Navi Pillay for another three years. Minister Mahinda Samarasinghehad had taken the Ethnic Problem to Geneva because the exhibition of Dr. Dayan Jayathileke there is a flop. Now Professor Rajiva Wijesinghe (1954) is also there in Geneva. I think he once wanted to form the Liberal Party of Sri Lanka. I think he knows Dr. Cheran Rudramoorthy. now at the University of Windsorr, Canada..
மதிப்புக்குரிய நோர்வே நக்கீனாருக்கு,
இந்த சின்னவனுக்காக உங்கள் பொண்னான நேரத்தை ஒதுக்கி பதில் அளித்ததற்காக மிக்க நன்றி.
உங்களின் மன நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் நாம் எப்போதும் நியாயத்தோடும், துணிவோடும் இருந்தால் எந்தப் பொய்யனாலும் ஒன்றும் புடுங்க முடியாது. நோர்வே தமிழர்கள் தங்களை மிகத் துணிந்தவராக கருதுகிறார்கள். துணிவோடு உங்களின் கருத்தை முன்வையுங்கள்.
கேள்வி: ஏகாதிபத்திய நலனிற்கா தான் இந்த போர் நடை பெற்றதா இல்லையா என்பது பற்றி உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
இரதன்! //ஏகாதிபத்திய நலனிற்கா தான் இந்த போர் நடை பெற்றதா இல்லையா என்பது பற்றி உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்// உங்கள் கேள்வியில் எனக்கு ஒரு தெளிவு வேண்டியுள்ளது. தமிழர்களின் போராட்டமானது பலபரிமாணங்களைக் கொண்டது. நாம் அதிகமாகப் பேசிவருவது இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான தமிழர்களின் போராட்டம். தற்போது பேசுவது இறுதிக்கட்ட ஆயுதப்போராட்டம். இறுதிக்கட்ட ஆயுதப்போராட்மாயின் வல்லரசுகளை விடப் பிராந்திய வல்லரசுகளின் நலனே மேலோங்கியுள்ளது. எமது உள்நாட்டுப்போரை தமக்குச் சாதகமாகப்பயன்படுத்தினார்கள். இது உலகமயமாதல் எனும் நவீன காலணித்துவத்தின் ஒரு வெளிப்பாடே. இதேவேளை ஒரு வியடத்தை நாம் மறக்கலாகாது. தடி கொடுத்தவர்கள் நாங்கள். தமிழர்களின் அரசியல்வரலாற்றில் எதிர்பரசியலைத்தவிர இராஜதந்திர அரசியல் நலிவாகவே இருந்து வந்துள்ளது.
உங்கள் கேள்வியில் “ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக மட்டும் தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது” இப்படிக் கூறலாம் “ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக மட்டுமல்ல: உலகப்பொருளாதாரம்; உலகமயமாதல்; உள்நாட்டு அரசியல்; அரசியல்வாதிகளின் சுயஇலாபங்கள்: புலிகளின் தீர்க்கதரினவின்மை; பலம் பலவீனம் பற்றிய அறிவு; அரசியல்வறுமை; இப்படி இன்னும் பலகாரணிகள் இருப்பினும் பிராந்தியவல்லரசுகளின் ஆவமோ/ நலனோ/பாதுகாப்போ காரணிகளாக நாம் துணியலாம்.
நோர்வே தமிழர்கள் தங்களை மிகத் துணிந்தவராக கருதுகிறார்கள்-ஹாஆ ஆ,நல்ல கடி ஜோக்,நொர்வே தமிழர்கள் என்றால்நீங்கள் மட்டும் தானா.
Why this poramai verry….poramai verry Aravind
Yes, in Norway also there are Sri Lankan Tamils. Dr. Rohan Gunaratne the expert form Singapore said, Nediyawan on BBC. Yes, I am taller than my brother Lawyer Sri – 1954 – Kumar. He had to beat only lawyer Yasodara Suntharesan there in Ontario, Canada. I am American doctorate born in December 1950.
Professor Rajiva Wijesinghe had publicly defended the four killings at Vakarai reported by Dr. Rajan Hoole. Probably they will send him home back from Geneva. All these guys are wasting government. This is first experience for them and so It is a learning experience. Please do not blame the whole Sinhala race all the time for all the things.
Virakesari. Ms. Navaneetham Pillay is coming to Sri Lanka – Shri Lanka.
Dr. Kumar David wrote it right in the Daily Mirror. Jaffna Man cannot fool all the people all the time.
General Sarath Fonseka (Decemebr 18, 1950) said that he felt good with his daughter Aparna. He had said that war crimes were committed at the end. Aparna is the name of the spouse of Dr. Kanagarajah Premakumar here at the Eastern University.
Look like only Major General Chargie Gallage of Mullaitivu District is under scrutiny. He carried out orders.