கடந்த ஆறாம் தியதி இந்தியாவின் வடகிழக்கில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படையைச் சார்ந்த 76 வீரர்கள் உயிரிழந்தனர். சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் பலியான டில்லி வீரர்களின் இறுதி நிகழ்வு டில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தேண்டே வாடா சம்பவத்திற்கு தான் முழுப்பொறுப்பும் ஏற்பதாக அறிவித்தார். இந்நிலையில அவர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்திக்கு உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய விரும்புவதாக கடிதம் அனுப்பியதாக செய்திகள் கசிந்தன. கொல்லபப்ட்ட வீரர்கள் மீது உருவான பரிதாபத்தை தன் பக்கம் ஈர்க்கவே சிதம்பரம் இப்படியான ராஜிநாமா நாடகத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிற நிலையில் இப்போது பிரதமர் மன்மோகன் அவரது ராஜிநாமா கடிதத்தை நிராகரித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செட்டியாருக்கு போகும் இடமெல்லாம் போர்க்களமாக இருக்கிறது.வேட்டி கட்டி டெல்லி வீதியில் வலம் வரும் தமிழக காங்கிரஸ்காரர்.தமிழுக்கு தொண்டாற்றூம் செட்டியார் குண்ம் இருந்தும் சிங் உடனும் இத்தாலி மகா ராணீ உடனும் சேர்ந்து தமிழன் வாழ்வை உதாசீனப்படுத்தியவர்.இவரை வைத்தும் தமிழ்த் தாத்தாவின் பேரப் பிள்ள பாசத்தை வைத்தும் இந்திய வல்லரசு தமிழர்களீன் அரசை சாம்பல் மேடாக்கியது.இப்போது செட்டியாரும் இந்திய அரசுக்கு செல்லாக் காசாகி வருகிரார்.இனி இவருக்கு ஜானம் வந்து என்ன பிரஜோனம்,
ஜாதியைக் குறிப்பிடாமல் உங்களுக்கு எழுதவே வராதா?
சிதம்பரம் தலித்தாக இருந்திருந்து இதையே செய்திருந்தால் என்ன சொல்வீர்கள்?
சோனியாவுக்கு ஜாதியே கிடையாது. அவர் சொல்லாமலா இந்தச் சிதம்பரம் செய்கிறார்?
இந்த விஷயம் ஜாதி மோதல் அல்ல. வர்க்க மோதல்.
ஏகாதிபத்தியநலன் காப்போருக்கும் மறுப்பொருக்கும் இடையிலான மோதல்.
கொச்சைப் படுத்தாதீர்கள்.
செட்டியார் என்றால் அது செல்லப் பெயர் சிதம்பரம் சாரே கோபிக்க மாட்டார், ஜாதியை காட்டியே இந்திய அரசியல் இருக்கிறது,தென் கிழக்கு ஆசியாவிலேயே இலங்கைதான் மூளயை பயன்படுத்தும் மக்கள் கூட்டத்தைக் கொண்டது கார்டியன் படிப்பதில்லை நீங்கள்?மற்றது எல்லாம் மந்தைக் கூட்டம் எதோ இலங்கை இனப்பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொண்டதால் சீரழிகிறது இல்லை என்றால் சிறந்து விளங்கும்.
இங்கே செட்டியார் செல்லப் பேர் என்று சொல்லுகிறீகள். வேறெங்கோ தேவர் சாதித் திமிர் பற்றிக் கூறிப்பிட்டீர்கள். அதுவும் செல்லப் பேரா?
தயவு செய்து எல்லார் நலனுக்காகவும் இவ்வாறன சாதி அடையாளமிடலைத் தவிருங்கள்.
இலங்கையில் சாதியம் இன்னும் சாகவில்லை. ஆனாலும் யாரையும் சாதிப் பேரல் விளிப்பது அநாகரீகம் என்று தான் கொள்ளப்படுகிறது. (அது கம்யூனிஸ்ட்டுக்கள் தலைமையில் போராடி வெல்லப்பட்டது).
ஈழத்துக் கதை கட்டுரைகளைப் பார்த்திருப்பீர்கள்.