ஈழப் போர்க்காலத்தில் போர் நிறுத்தம் கோரிய வழக்கறிஞர்கள் மீது காண்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசைப் பாதுகாக்கும் கருணாநிதிக்கு எதிராக வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க உயர்நீதிமன்றத்திற்குள் தலித் தலித் அலலதோர் பிரச்சனைக்கு தூபம் போட்டு துண்டி விட்ட கருணாநிதியின் தந்திரத்தைப் புரிந்து கொண்ட வழக்கறிஞர்கள் அமைதி காத்தனர். இந்நிலையில் 25.04.2010 சிலை திறப்பு விழா நடந்தது. விழா மேடையில் கருணாநிதி இருந்தார் அவர் பேசது துவங்கும் போது முன்வரிசையில் அமர்ந்திருந்த சில வழக்கறிஞர்கள் கையில் கருப்புக் கொடியோடு எழுந்து கருணாநிதிக்கு எதிராக கோஷமிட்டனர். இதைச் சற்றும் எதிர்பாராத கருணாநிதி அதிச்சியடைந்தார். இந்நிலையில் கருப்புக் கொடியோடு கோஷமிட்ட வழக்கரிஞர்கள் மீது திமுக ரௌடிகள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்தினார்கள்.
ஈழ விரோத தி.மு.க அரசின் அடக்குமுறைக்கு எதிராக வழக்கறிஞர்கள் சென்னையில் கண்டனக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!