சென்னை,
திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்–கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டருகே உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றனர். அவர் சில மாத்திரைகளை எழுதித் தத்தார். அதை சாப்பிட்டும் காய்ச்சல் குறையவில்லை. ஆனால் மருத்துவர் கொடுத்த மருந்துகளை உண்டதும் சுரேகாவின் உடல் முழுக்க கட்டிகள் உருவானது. கண்பார்வையும் மங்கத் தொடங்கியது.
இதையடுத்து அந்த டாக்டரிடமே மீண்டும் காட்டியபோது, வீரியம் அதிகமான மாத்திரை சாப்பிட்டதால் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் சுரேகா சேர்க்கப்பட்ட போது உடலில் தோன்றிய புண்கள் மறைந்தன. ஆனால் கண் பார்வை மங்கிக் கொண்டே சென்றது. இதனைத் தொடர்ந்து எழும்பூர் கண் மருத்துவமனையில் சுரேகாவுக்கு கண் ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷன் முடிந்ததும் சுரேகாவுக்கு முழுவதும் கண்பார்வை பறி போனது. இச்சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரால் தமிழக அரசின் எந்த ஒரு அதிகாரிகளையும் அந்த ஏழைச் சிறுமியாலோ அவரது தயாராலோ சந்திக்க முடியவில்லை. நேற்றும் அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது என்று பல மணி நேரம் காக்க வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர். காலாவதியான மருந்தாலும் அலட்சியமான சிகிச்சையாலும் பாதிக்கபப்ட்டுள்ள இந்த ஏழைகளுக்கு உரிய நியாயம் கிடைக்குமா? என்பதே இப்போதுள்ள கேள்வி.
என்ன தான் செய்கிறது நமது காவல் துறை!!!