தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் மூலம் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களிலோ அல்லது மனித உரிமை மீறல்களிலோ ஈடுபட்டதாக தெரிய வந்தால் அவர்களை பாதுகாக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும் மகிந்த ராஜபக்ச குடும்பமே ஈடுபட்டுள்ளது என்பதை நோர்வே இன் இறுதி அறிக்கை தெளிவாகத் தெரிவித்துள்ளது. போர்க் குற்றவாளியே போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வேடிக்கை.
அவன் போர்க் குற்றவாளியாக இருந்தாலும் ஒரு தலைவனாக இருக்கிறான். நாங்கள் எங்களுக்கு ஒரு தலைவனை எந்த வாளியில் தேடப்போகிறோம்?…..
அடிப்படையில் இனவிடுதலை என்பதும் முதாலித்துவத்திற்கு
உரிய கோஷமே! மற்றும் ஒரு பாஷையில் சொன்னால் நீங்கள் நடத்தும் கொள்ளை லஞ்சம் ஊழலில் எமக்கும் பங்கு
தாருங்கள் என்பதே! இது தான் இனவிடுதலையின் ஆரம்பமும் முடிவும்.
ஒருயினம் தன்னை சுயாதீனப்படுத்தி தலைநிமிர்ந்து நிற்கவேண்டுமானால் அந்த இனத்தில் உள்ள அடக்கியொடுக்க பட்டமக்கள் தலைநிமிர்ந்து அரசியல் ஆளுமையை பெற்றாக வேண்டும்.
இந்த வழியொன்றே அந்த இனத்தின் கடந்தகால வரலாற்று பெருமியங்களைக் காக்கும் கடமையை நிறைவேற்ற தகுதி பெற்றதாகும். அதற்கான காலங்கள்தானே இன்று எம் கண்னெதிரே வந்து நிற்கிறது.
தமிழ் சிங்கள தொழிலாளர்களுடன் கைகுலுக்கி விவாதித்து அகிலயிலங்கை ரீதியாக ஒரு சமத்துவகட்சியை சர்வதேசரீதியாக அமைப்பதை விட வேறு எந்த மார்க்கமும் இல்லை. இதை நிராகரிப்பவர் எவரோ அவர் அடக்கியொடுக்க
பட்ட மக்களின் பக்கத்தில் இல்லாமல் மட்டுமல்ல தமிழ்மக்களின் பக்கத்திலும் இல்லை என்பதாகவே பொருள் படும்.