அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது தொடர்பாக இலங்கை அரசு போர்க் குற்றங்களுக்கான தண்டணையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் இன்று தெரிவித்தார்.
உள் நாட்டு விவகாரக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கீத் வாஸ், கொலைகளை நிறுத்துவதற்காக பிரித்தானியா தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக அமரிக்க அதிபர் பரக் ஒபாமா புலிகளின் ஆயுதங்களைக் கைவிடுமாறும். அரச படைகளின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.