08.10.2008.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித நேயத்துக்கு எதிராகச் செயற்பட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் கருணா என அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் கருணா அம்மான் நேற்று பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
பல சிறுவர்களைப் படையில் இணைத்தமை, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றமை, சித்திரவதைப் படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் அவர் கடந்த காலங்களில் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
“கருணா சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சாம் சரிப்ஃபி தெரிவித்தார்.
“போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு நுழைந்துள்ள நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்” என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு கருணாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் சாம் சரிப்ஃபி கோரிக்கை விடுத்தார்.
கடந்தகாலத்தில் வன்முறையை தூண்டியவர்களும் ஒன்றிக்கு பின் ஒன்றாகவும்
சிறுதும் பெருதுமாக பல வன்முறை இனக்கலவரங்களை தூண்டியவார்கள் சிறீலங்கா
சுகந்திரக்கட்சியும் யு.என.பியுமே. உலகத்தில்யுள்ள மனித நேயமிக்கவர்கள் இன்றும்
பார்த்து பரிதாப்படும் அளவிற்கு எல்லாவகையான தரவுகளும் பதிவாகியிருக்கிறது.
கருனா சட்டத்தின் முன் நிறுத்தப்படவோண்டுமானால்…
உயிரோடு இருப்பவர்களையும் இறந்தவர்களையும் கல்லறையில்லிருந்து அழைத்துவரவேண்டியவர்ளாவோம். முடியாவிட்டால்
சைவக்கோவிலின் தெய்வசிலைகளை உடைத்த புத்தபிக்குவையும் இராணுவத்தளபதி
சரத்பொன்சேகராவையும் கருனாவுக்கு முதல் சட்டத்தின்முன்நிறுத்தியாகவேண்டும்.;
இது தான் ஐக்கியஇலங்கையை அமைப்பதற்கு முன்நிபந்தனையாக இருக்கும்
இல்லையேல் இராணுவஆட்சிக்கு தயார் செய்கிறோம் என அர்த்தபடும்.