இசைப்பிரியா கொலைசெய்யப்பட்ட இடம், காலம், நேரம் என்பவற்றை கிடைத்த காணொளி ஆதராங்களை வைத்து சனல் 4 செய்திச் சேவை தரவு வழி நிறுவல் ஒன்றை தனது 7 மணிச் செய்திசேவையில் மேற்கொண்டுள்ளது. சட்ட வல்லுனர் ஒருவர் தொலைக்காட்சியில் கருத்து வெளியிடுகையில் இவ்வாதாரங்கள் போர்க்குற்றத்தை நிறுவத் தேவையான நிபந்தனைகளைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். தவிர, போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பயந்தே ராஜபக்ச தனது பயணத்திற்கான காலம் முடிவடையும் முன்னரேயே பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் குறிப்பிட்டது.