இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்ற விசாரணை இன்று ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால் இந்த விசாரணைக் குழு நிறுவப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தக் குழு விசாரணை நடாத்த உள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைறே;றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நவனிதம்பிள்ளையினால் விசாரணைக் குழு நிறுவப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் நிபுணத்துவ குழு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக பணிகளை ஆரம்பித்தள்ளது. பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைவர் அஸ்மா ஜஹானகீர் ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட இனவழிப்பின் போது, இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளவே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.
இனவழிப்பின் போதும், இன்றும் இலங்கை அரசின் நட்பு நாடுகளாகச் செயற்படும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து பின்னர் தண்டனை வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் ராஜபக்சவிற்கு எதிரான சில இராணுவ அதிகாரிகளையும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் செயற்படுவோரையும் போர்க்குற்றவாளிகளாக்கும் ஏகாதிபத்தியங்களின் தந்திரோபாயமே இந்தப் போர்க்குற்ற விசாரணை என்ற சந்தேகங்கள் நியாயமானவை.
போர்க்குற்ற விசாரணைகளின் மீது நம்பிக்கை வைத்து போராட்டங்களைத் தாமதிக்கக்கூடாது. போராட்டங்களை மழுங்கடிக்கவும், அழிக்கவும், வலுவைக்குறைக்கவுமே உலகம் முழுவதும் இவ்வாறான விசாரணைகள் பயன்பட்டிருக்கின்றன. போர்க்குற்றங்களில் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது, அது எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற குறைந்தபட்ச நிபந்தனைகளைக் கூட தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்கத் தவறிவிட்டன. அப்பாவிகளும் முன்னை நாள் போராளிகளும் போர்க்குற்றம் என்ற பெயரில் அழிக்கப்பட்டால் அதற்கான முழுப்ப் பொறுப்பையும் தமிழ்த் தலைமைகளே ஏற்க வேண்டும்.
இனப்படுகொலையில் பங்களித்த நாடுகளின் தயவில் போர்க்குற்ற விசாரணை என்ற நாடகம் திரைகளை அகற்றி ஆரம்பமானது.