யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரையும் இலங்கை அரசாங்கம் தண்டிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். வன்னியில் இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும் நிகழ்ந்த போது அதற்கு நிபந்தனையற்ற ஆதரவும் உதவியும் வழங்கிய சிதம்பரமும் அவர் சார்ந்த இந்திய அரசும் இன்று திடீரென யுத்தக் குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோருகின்றனர். மகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளியை நோக்கி இவர்கள் முன்வைக்கும் இந்தக் கோரிக்கை சந்தேகத்திற்குரியது.
இலங்கை என்ற சிறிய நாட்டை சூறையாடுவதற்கும் சுய நிர்ணய உரிமை கோரிப்போரடும் தமிழ்ப்பேசும் மக்களை அழிப்பதற்கும் டேவிட் கமரனிலிருந்து சிதம்பரம் வரை புதிய நாடகம் ஒன்றை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஊடகவியலாளர்களுக்குப் பதிலளித்த சிதம்பரம் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசும் ராஜபக்சவும் பேரினவாதிகளும் நிழழ்த்திய படுகொலை யுத்ததில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் மாண்டு போனார்கள். அழிக்கப்படாமல் எஞ்சியவர்கள் மீது நடத்தப்ப்படும் இராணுவ, உளவியல் யுத்தத்தம் இன்று இனச்சுத்திகரிப்பை வேகப்படுத்தியுள்ளது. இந்த இனச் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாகப் பல்தேசிய நிறுவனங்களின் நிலப்பறிப்பும் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் பல்தேசிய நிறுவவங்கள் முதலிடுவதில் எந்தத் தவறும் கிடையாது என்றும் அவர்கள் லாபத்தை நோக்கமாக முன்வைத்தே முதலிடுகிறார்கள் என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
சிதம்பரத்திற்கோ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனுக்கோ அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது.