இமாசலபிரதேசம் சுஜன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: நான் போர்முனையில் வீரர்களை பார்த்திருக்கிறேன். கார்கில் போரின் போது, நான் அங்கு நேரில் சென்றேன். அப்போது, நமது வீரர்கள் தீரமுடன் போரிடுவதை நேரில் பார்த்தேன். நமது நாடு பல கோடி மக்களை கொண்டது. உலக அரங்குகளில் நமது நாட்டை தலை நிமிரச் செய்ய வேண்டும். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் பாசிஸ்டுக்களை ஆட்சிக்கு பீடத்தில் அமர்ந்து கொள்வதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடகத்தை நடத்துவதும் வழமையானதாகிவிட்டது. குஜராத்தில் போர்க்களத்தை உருவாக்கி இரத்த ஆறை ஓடவிட்ட மோடி இந்தியா முழுவதும் அதனை நடைமுறைப்படுத்த அனுமதி கேட்கிறார். அதற்காக வாக்களர்களைக் கெஞ்சும் மோடி தொடர்கிறார்:: வாக்காளர்கள் தான் கடவுள்கள். எனவே, கடவுள்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும். இதை காங்கிரஸ் கடைசி வரை உணரவில்லை. நான் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு, உங்கள் உதவியை கேட்கிறேன். நீங்கள் உதவினால், நான் மீண்டும் ஒரு வெற்றி வீரனாக இங்கு வருவேன். இவ்வாறு மோடி பேசினார்